சனி, 31 ஜூலை, 2010

நடிகை நமீதா - ரசிகர்கள் என்னை வெறுக்க வேண்டாம்!

cinesouth.com செய்தி : நடிகை நமீதா "இளைஞன்" படத்தில் நான் வில்லியாக நடிக்கிறேன் என்றும், இந்த படத்தை பார்த்து ரசிகர்கள் என்னை வெறுக்க வேண்டாம் என்றும் கூறியுள்ளார். இந்த படத்தில் நடிக்கும் கேரக்டர் போல நிஜ வாழ்க்கையில் நான் இல்லை. எனவே என்னை வெறுக்க வேண்டாம் என்று நடிகை நமீதா கூறினார்.

கருத்து கந்தசாமி : அய்யோ, அய்யோ, தமிழனுக்கு அந்த அளவுக்கு அறிவு இருந்திருந்தா எப்பவோ முன்னேறியிருப்பானே.

மறக்காம வோட்டுப் போடுங்க

வெள்ளி, 30 ஜூலை, 2010

தமிழக முதல்வருக்கு 'நாநிலம் போற்றும் நல்லிணக்க நாயகர்' விருது

4tamilmedia செய்தி : தமிழக முதல்வர் கலைஞர் கருணாநிதி அவர்களுக்கு, நாநிலம் போற்றும் நல்லிணக்க நாயகர் விருதினை, இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சி வழங்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அவ்வமைப்பின் தமிழ் மாநிலத் தலைவரும், முன்னாள் எம்.பி.யுமான காதர் மொய்தீன் மதுரையில் செய்தியாளர்களிடம் அதனைத் தெரிவித்துள்ளதாகத் தமிழகச் செய்திகள் தெரிவிக்கின்றன.
கருத்து கந்தசாமி : தமிழ் நாட்டுல குழந்தைங்க, முடியாதவங்கதான் கருணாந்திக்கு விழா எடுக்கவில்லைன்னு நினைக்கிறேன். அவங்களும் எடுத்துட்டாங்கன்னா அனைத்து விருதுகளையும் வாங்கிய அபூர்வ தலைவர் அப்படின்னு ஒரு சூப்பர் ஸ்டார் விருது கொடுத்திடலாம்.

மறக்காம வோட்டுப் போடுங்க

வியாழன், 29 ஜூலை, 2010

தமிழகத்தில் ஐடிஐ வினாத்தாள் வெளியானது-தேர்வு ரத்து

தினகரன் செய்தி : தமிழகத்தில் இருந்து ஐடிஐ வினாத்தாள் அவுட்டாகவில்லை என்று வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை இணை இயக்குனர் ரவிச்சந்திரன் கூறினார். நாடு முழுவதும் ஐடிஐ தொழிற்பயிற்சிக்கான தேர்வுகள் கடந்த 23ஆம் தேதி துவங்கியது. நேற்று முன்தினம் ஈரோடு, அந்தியூர் உள்பட தமிழகத்தின் பல பகுதிகளில் பிட்டர் தேர்வுக்கான வினாத்தாள் வெளியானதாகவும், அதை பலர் ரூ.2000 முதல் ரூ.5000 வரை கொடுத்து வாங்கியதாகவும் தகவல் பரவியது. இதையடுத்து, தேர்வுகளை தமிழக அரசு ரத்து செய்தது.
கருத்து கந்தசாமி : சிவப்பெழுத்தில் இருப்பதையும் மீதிச் செய்திகளையும் தனித்தனியே படித்தால் ஏதோ புரிவது போலிருக்கிறது. உங்களுக்கு வேறேதாவது புரிந்தால் பின்னூட்டம் இடுங்கள்.

மறக்காம வோட்டுப் போடுங்க

பூவரசி ஜாமீன் மனு தள்ளுபடி

மாலைச்சுடர் செய்தி : சிறுவன் ஆதித்யா கொலை வழக்கில் கைதான பூவரசியின் ஜாமீன் மனுவை சென்னை நீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்தது.
கருத்து கந்தசாமி : இவர்களையெல்லாம் விசாரனை செய்து கொண்டிருப்பதே தவறு. அரபு நாட்டு சட்ட முறைகள் தான் இது போன்ற பெண் பேய்களுக்கு சரி.

மறக்காம வோட்டுப் போடுங்க

புதன், 28 ஜூலை, 2010

பாக்ஸ்கான் ஆலையில் விஷவாயு கசிவு

தினமணி செய்தி :சுங்குவார்சத்திரம் பகுதியில் உள்ள இந்த தனியார் மின்னணு ஆலையில் கடந்த 23-ம் தேதி தொழிலாளர்கள் 100-க்கும் மேற்பட்டோருக்கு திடீரென வாந்தி மயக்கம் ஏற்பட்டது. இதற்கு தொழிற்சாலையில் ஏற்பட்ட விஷவாயுக் கசிவே காரணம் என செய்தி வெளியானதை தொடர்ந்து சுகாதாரத் துறையினர் மற்றும் வருவாய்த் துறையினர் ஏற்கெனவே இந்த ஆலையில் சோதனை செய்தனர்.
இந்நிலையில் ஆலையில் விஷவாயுக் கசிவு ஏற்பட்டதா என்பதை கண்டறிய மாவட்ட வருவாய் ஆய்வாளர் சிவராசு, வருவாய் கோட்டாட்சியர் பழனி, உள்ளிட்ட அதிகாரிகள் பாக்ஸ்கான் ஆலையில் செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தனர். ஆய்வுக்குப் பிறகு அதிகாரிகள் நிருபர்களிடம் கூறியது:
பாக்ஸ்கான் ஆலையில் விஷவாயுக் கசிவுக்கான எவ்வித அறிகுறியும் இல்லை. இந்த ஆலையில் பயன்படுத்தப்படும் கச்சாப் பொருள்களும் விஷவாயுவை வெளியிடும் தன்மையற்றவை. மேலும் இந்த ஆலையில் ரசாயன உற்பத்தியும் இல்லை. இங்கு பயன்படுத்தப்படும் இயந்திரங்களும் ரசாயனக் கசிவை ஏற்படுத்துவதும் இல்லை.
கடந்த 23-ம் தேதி மயக்கமடைந்த தொழிலாளர்கள் 98 பேரில் 90 தொழிலாளர்களுக்கு எந்தவித பாதிப்பும் இல்லை என்று மருத்துவர்கள் தெரிவித்ததன் பேரில் அவர்கள் வீடுகளுக்கு அனுப்பப்பட்டுள்ளனர்.
தொழிற்சாலை வளாகத்தில் தெளிக்கப்பட்ட மாலத்தியான் பூச்சிக்கொல்லி மருந்தாலும் தொழிலாளர்களுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை. தொழிலாளர்களுக்கு மயக்கம் ஏற்பட, சரியான காற்றோட்டமான சூழ்நிலை இல்லாமல் இருந்திருக்கலாம் அல்லது சரியான காற்றோற்ற அளவை பராமரிக்கும் இயந்திரங்கள் வேலை செய்யாமல் இருந்திருக்கலாம்.
மேலும் தொழிலாளர்களுக்கு ஏன் மயக்கம் ஏற்பட்டது என்பதை கண்டறிய தொழிலாளர்கள் ஏற்கெனவே மயக்கம் அடைந்த உற்பத்தி பிரிவில் தற்போது தொழிலாளர்களை பணியாற்ற வைத்துள்ளோம். அவர்களுக்கு மீண்டும் மயக்கம் ஏற்படுகிறதா என்பதை நாங்கள் நேரில் ஆய்வு செய்ய உள்ளோம் என்றனர்.


தினகரன் செய்தி :சென்னை சுங்குவார்சத்திரத்தில் பாக்ஸ்கான் என்ற செல்போன் உதிரிபாகங்கள் தயாரிக்கும் நிறுவனம் உள்ளது. கடந்த 24ம் தேதி விஷவாயு கசிவு ஏற்பட்டதில் தொழிலாளர்களுக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டது. இந்நிலையில் இன்று அதிகாரிகள் பாக்ஸ்கான் ஆலைக்கு சென்று, தடையில்லா சான்று பெறாமல் ஆலையை நடத்தியது குறித்து நேரில் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் தொழிற்சாலையை முழுவதுமாக அதிகாரிகள் ஆய்வு செய்துவருகின்றனர்.
இதனைத்தொடர்ந்து 4 வது நாளாக இன்றும் ஆலை மூடப்பட்டுள்ளது.

கருத்து கந்தசாமி : இதற்கு கருத்து எதுவும் தேவையில்லையென்று நினைக்கிறேன்

மறக்காம வோட்டுப் போடுங்க

ஞாயிறு, 25 ஜூலை, 2010

டிசம்பருக்குள் பணவீக்கம் குறையும் : பிரதமர் மன்மோகன் கணிப்பு

தினமலர் செய்தி : ”இந்த ஆண்டு பருவமழை நன்றாக இருக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது. எனவே, ஆண்டு இறுதிக்குள் நாட்டில் பணவீக்க வீதம் குறையும். அத்தியாவசியப் பொருட்களின் மொத்த விலை வீதமும் 6 சதவீதம் வரை குறையும்” என, பிரதமர் தெரிவித்துள்ளார்.
 கருத்து கந்தசாமி : பெட்ரோல், டீசல் விலையை ஏத்தீட்டீங்க, எம்பிக்களுக்கு சம்பளம் அதிகம் பண்ணிட்டீங்க. அப்புறம் பணவீக்க வீதம் மட்டும் எப்படி குறையும்? எங்களை வெச்சு காமெடி கீமெடி பன்னல்லையே.

மறக்காம வோட்டுப் போடுங்க

புதன், 21 ஜூலை, 2010

ராதாபுரம் பஸ் நிலையத்திற்கு காமராஜர் பெயர். கருணாநிதிக்கு நாடார் பேரவை நன்றி.

தினதந்தி செய்தி : ராதாபுரம் பஸ் நிலையத்திற்கு காமராஜர் பெயர் சூட்டியதற்காக முதல் அமைச்சர் கருணாநிதிக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோமென்று தமிழ்நாடு நாடார் பேரவை மாநிலத் தலைவர் என்.ஆர்.தனபாலன் கூறினார்.
கருத்து கந்தசாமி : காமராஜர் மத்த ஜாதிகளுக்கெல்லாம் தலைவர் இல்லை போலிருக்குது. என்ன கொடுமை சரவணன் இது.

மறக்காம வோட்டுப் போடுங்க

செவ்வாய், 20 ஜூலை, 2010

எனக்கு தமிழ் மட்டும் போதும்-சுனேனா

தட்ஸ்தமிழ் செய்தி : எனக்கு தமிழ் சினிமாவைத்தான் ரொம்பவும் பிடித்துள்ளது. இங்குதான் நல்ல படங்கள், கதைகள் உள்ளன. பாரம்பரியம் மிக்கதும் தமிழ் சினிமா மட்டுமே. எனவே இங்கு நடிப்பதையே அதிகம் விரும்புகிறேன். மற்ற சினிமாவை நான் விரும்பவில்லை என்கிறார் சுனைனா.
கருத்து கந்தசாமி : அப்பாடி தமிழ் சினிமாவை பத்தி நாம இனி கவலைப்பட வேண்டியதில்லை.

மறக்காம வோட்டுப் போடுங்க

வியாழன், 15 ஜூலை, 2010

கடல் பகுதியை நிலம் என்று விற்றவர் கைது

தினத்தந்தி செய்தி : இந்தியன் ஆயில் நிறுவனத்திற்கு கடல் பகுதியை நிலம் என்று ஏமாற்றி விற்ற பலே ரியல் எஸ்டேட் அதிபர் கைது. 106 ஏக்கர் நிலத்தில் 81 ஏக்கர் கடலுக்குள் இருப்பதை அறிந்து இந்தியன் ஆயில் நிறுவன அதிகாரிகள் அதிர்ச்சி.

கருத்து கந்தசாமி : ஒரு ஏக்கருக்கு குறைந்த பட்சம் ஒரு லட்சம்னு வைச்சுக்கிட்டாலும் 81 லட்சம் கிடைக்கும் போது நிலம் கடலிலேயிருந்தா என்ன, வானத்திலியே இருந்தாதான் என்ன. பாவம் வித்தவரு மாட்டிக்கிட்டாரு. வாங்கினவங்க, அனுமதி கொடுத்தவங்க


மறக்காம வோட்டுப் போடுங்க

வெள்ளி, 9 ஜூலை, 2010

உணவுப் பணவீக்கம் 12.63 சதவீதமாகக் குறைவு

செய்தி :

நாட்டின் உணவுப் பணவீக்கம் ஜூன் 26-ம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் 12.63 சதவீதமாகக் குறைந்தது. முந்தைய வாரத்தில் இது 12.92 சதவீதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.காய்கறிகளின் விலை 4 சதவீதம் குறைந்துள்ளது. குறிப்பாக வெங்காயம், உருளைக்கிழங்கு விலை கணிசமாகக் குறைந்துள்ளதால் உணவுப் பணவீக்கமும் குறைந்துள்ளது.

கருத்து கந்தசாமி :

எந்த நாட்டிலேங்க கொறைஞ்சிருக்குது. உகாண்டாவிலேயா, ஆஃப்ரிக்காவிலேயா விளக்கமா சொல்லுங்க. நம்ம ஊருல விலைவாசி உயர்வுங்கிறது ஒரு வழிப் பாதை மாதிரி. ஏறும் ஆனா இறங்காது.

மறக்காம வோட்டுப் போடுங்க

புதன், 7 ஜூலை, 2010

பாரத் பந்த் வெற்றிபெறவில்லை - கருணாநிதி அறிக்கை

செய்தி :

விலைவாசி உயர்வு என்ற கோஷம் அதனால் ஏற்படும் பாதிப்பு இந்தியாவில் மற்ற மாநிலங்களைப் போல தமிழக மக்களைப் பாதிக்கவில்லை. அப்படிப் பாதிக்காத அளவுக்கு அவர்களைப் பாதுகாக்கும் கடமையை தமிழக அரசு நிறைவேற்றி வருகிறது. அதனால்தான் பூதாகரமாக எதிர்பார்த்த வேலை நிறுத்தம் வெற்றி பெறவில்லை. இதைச் சொல்வதால் விலைவாசி உயர்வுக்கு வெண்சாமரம் வீசுபவர்கள் அல்ல நாம். கிலோ அரிசி ஒரு ரூபாய், மானிய விலையில் மளிகைப் பொருள்கள், பஸ் கட்டண உயர்வில்லை போன்றவற்றின் மூலம் விலைவாசி உயர்வின் பாதிப்பு சாதாரண சாமான்ய மக்களிடம் இருந்து அகற்றப்பட்டுள்ளது என்று முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார்.

கருத்து கந்தசாமி :

எல்லோரும் ஜோரா ஒரு தடவை கை தட்டுங்க. முதல்வர் கருணாநிதி தமிழ் நாடு வறுமை இல்லாத மாநிலம் என்று அறிவித்து விட்டார். அரிசி ரூ.1, மானிய விலையில் மளிகை சாமான் என்பதெல்லாம் சரிதான். சமையல் எரிவாயு ரூ.35 ஏறியுள்ளது. மானிய விலை அரிசிசையும், மளிகை சாமான்களையும் வாங்கி அப்படியே சாப்பிட சொல்கிறாரா? ஒன்றும் விளங்கலையே இந்தக் கருத்துக்கு!!!

மறக்காம வோட்டுப் போடுங்க

கந்தசாமி பராக் பராக்

அன்புள்ளம் கொண்ட வலைப்பூ வாசகர்களுக்கு

இந்த வலைப்பூவில் நமது அரசியல் பெருமக்கள், நடிக, நடிகையர், மற்றுமுள்ளோர் எக்கு தப்பாக பேசுவதற்கு கருத்து கந்தசாமி எக்கு தப்பாக தன் கருத்துகளை அளிக்கிறார். நன்றாக இருந்தால் சொல்லுங்கள். இன்னும் சிறப்பாக தன் கருத்துகளை கூறுவார். நன்றாக இல்லாவிட்டாலும் கூறுங்கள், தன் குறைகளை சரி செய்து கொள்வார். உங்கள் மேலான ஆதரவை நம்பி கருத்து கந்தசாமி வந்திருக்கிறார். முதல் பதிவிலேயே முதல்வர் கருணாநிதி சிக்கிக் கொண்டார். படியுங்கள். கட்டாயம் ஒரு பின்னூட்டம் இடுங்கள்.

ரெடி...

ஆக்‌ஷன்...

ஜூட்...

மறக்காம வோட்டுப் போடுங்க