புதன், 28 ஜூலை, 2010

பாக்ஸ்கான் ஆலையில் விஷவாயு கசிவு

தினமணி செய்தி :சுங்குவார்சத்திரம் பகுதியில் உள்ள இந்த தனியார் மின்னணு ஆலையில் கடந்த 23-ம் தேதி தொழிலாளர்கள் 100-க்கும் மேற்பட்டோருக்கு திடீரென வாந்தி மயக்கம் ஏற்பட்டது. இதற்கு தொழிற்சாலையில் ஏற்பட்ட விஷவாயுக் கசிவே காரணம் என செய்தி வெளியானதை தொடர்ந்து சுகாதாரத் துறையினர் மற்றும் வருவாய்த் துறையினர் ஏற்கெனவே இந்த ஆலையில் சோதனை செய்தனர்.
இந்நிலையில் ஆலையில் விஷவாயுக் கசிவு ஏற்பட்டதா என்பதை கண்டறிய மாவட்ட வருவாய் ஆய்வாளர் சிவராசு, வருவாய் கோட்டாட்சியர் பழனி, உள்ளிட்ட அதிகாரிகள் பாக்ஸ்கான் ஆலையில் செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தனர். ஆய்வுக்குப் பிறகு அதிகாரிகள் நிருபர்களிடம் கூறியது:
பாக்ஸ்கான் ஆலையில் விஷவாயுக் கசிவுக்கான எவ்வித அறிகுறியும் இல்லை. இந்த ஆலையில் பயன்படுத்தப்படும் கச்சாப் பொருள்களும் விஷவாயுவை வெளியிடும் தன்மையற்றவை. மேலும் இந்த ஆலையில் ரசாயன உற்பத்தியும் இல்லை. இங்கு பயன்படுத்தப்படும் இயந்திரங்களும் ரசாயனக் கசிவை ஏற்படுத்துவதும் இல்லை.
கடந்த 23-ம் தேதி மயக்கமடைந்த தொழிலாளர்கள் 98 பேரில் 90 தொழிலாளர்களுக்கு எந்தவித பாதிப்பும் இல்லை என்று மருத்துவர்கள் தெரிவித்ததன் பேரில் அவர்கள் வீடுகளுக்கு அனுப்பப்பட்டுள்ளனர்.
தொழிற்சாலை வளாகத்தில் தெளிக்கப்பட்ட மாலத்தியான் பூச்சிக்கொல்லி மருந்தாலும் தொழிலாளர்களுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை. தொழிலாளர்களுக்கு மயக்கம் ஏற்பட, சரியான காற்றோட்டமான சூழ்நிலை இல்லாமல் இருந்திருக்கலாம் அல்லது சரியான காற்றோற்ற அளவை பராமரிக்கும் இயந்திரங்கள் வேலை செய்யாமல் இருந்திருக்கலாம்.
மேலும் தொழிலாளர்களுக்கு ஏன் மயக்கம் ஏற்பட்டது என்பதை கண்டறிய தொழிலாளர்கள் ஏற்கெனவே மயக்கம் அடைந்த உற்பத்தி பிரிவில் தற்போது தொழிலாளர்களை பணியாற்ற வைத்துள்ளோம். அவர்களுக்கு மீண்டும் மயக்கம் ஏற்படுகிறதா என்பதை நாங்கள் நேரில் ஆய்வு செய்ய உள்ளோம் என்றனர்.


தினகரன் செய்தி :சென்னை சுங்குவார்சத்திரத்தில் பாக்ஸ்கான் என்ற செல்போன் உதிரிபாகங்கள் தயாரிக்கும் நிறுவனம் உள்ளது. கடந்த 24ம் தேதி விஷவாயு கசிவு ஏற்பட்டதில் தொழிலாளர்களுக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டது. இந்நிலையில் இன்று அதிகாரிகள் பாக்ஸ்கான் ஆலைக்கு சென்று, தடையில்லா சான்று பெறாமல் ஆலையை நடத்தியது குறித்து நேரில் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் தொழிற்சாலையை முழுவதுமாக அதிகாரிகள் ஆய்வு செய்துவருகின்றனர்.
இதனைத்தொடர்ந்து 4 வது நாளாக இன்றும் ஆலை மூடப்பட்டுள்ளது.

கருத்து கந்தசாமி : இதற்கு கருத்து எதுவும் தேவையில்லையென்று நினைக்கிறேன்

மறக்காம வோட்டுப் போடுங்க

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக