வெள்ளி, 10 செப்டம்பர், 2010

ஜார்க்கண்டில் சிபு சோரன் ஆதரவுடன் பா.ஜ. ஆட்சி: அத்வானி அதிருப்தி

வெப்துனியா.காம் செய்தி: ஜார்க்கண்ட் மாநிலத்தில் சிபுசோரனின் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சி ஆதரவுடன் பா.ஜனதா ஆட்சியமைக்க உள்ளது குறித்து அக்கட்சியின் மூத்த தலைவர் அத்வானி மிகுந்த அதிருப்தி அடைந்துள்ளதாக செய்தி வெளியாகி உள்ளது.

அத்வானி போன்றே அருண் ஜெட்லி, சுஷ்மா ஸ்வராஜ் போன்ற மூத்த தலைவர்களும் அதிருப்தி அடைந்துள்ளதாக கூறப்படுகிறது.

அதே சமயம் பா.ஜனதா தலைவர் நிதின் கட்கரி மற்றும் முன்னாள் தலைவர் ராஜ்நாத் சிங் ஆகியோர் ஜேஎம்எம் உடனான கூட்டணி நிலையில் உறுதியாக உள்ளதாக பா.ஜனதா வட்டாரங்களை மேற்கோள்காட்டி செய்திகள் தெரிவிக்கின்றன.

இதனிடையே ஜார்க்கண்ட் மாநில முதலமைச்சராக அர்ஜூன் முண்டா நாளை பதவியேற்க உள்ள நிலையில், அந்நிகழ்ச்சியில் அத்வானி கலந்துகொள்ள மாட்டார் என்று கூறப்படுகிறது.

முன்னதாக கடந்த 3 மாதங்களுக்கு முன்னர் நாடாளுமன்றத்தில், மத்திய அரசுக்கு எதிராக பா.ஜனதா மற்றும் இடதுசாரிகள் கொண்டுவந்த வெட்டுத் தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பில் ஜேஎம்எம் தலைவர் சிபு சோரன் கட்சிமாறி வாக்களித்ததால், ஜார்க்கண்டில் அவரது கட்சித் தலைமையிலான கூட்டணி அரசுக்கு அளித்து வந்த ஆதரவை பா.ஜனதா திரும்ப பெற்றதால், ஆட்சி கவிழ்ந்தது.

அதன் பின்னர் ஆட்சியமைப்பதற்கான பெரும்பான்மை பலத்தை திரட்ட எந்த கட்சிக்கும் முடியாமல் போனதால், சட்டசபை முடக்கப்பட்டு, அங்கு குடியரசுத் தலைவர் ஆட்சி அமலில் இருந்தது.

இந்நிலையில் ஜேஎம்எம் மற்றும் ஏஜேஎஸ்யு ஆகிய கட்சிகளின் ஆதரவுடன் மீண்டும் ஆட்சியமைப்பது என்று பா.ஜனதா முடிவு செய்தது.

இதனையடுத்து உள்ள பா.ஜனதா கட்சியின் சட்டமன்ற தலைவராக, கடந்த 7 ஆம் தேதியன்று, முன்னாள் முதலமைச்சர் அர்ஜூன் முண்டா தேர்ந்தெடுக்கப்பட்டார்.

அதனைத் தொடர்ந்து பா.ஜனதா - ஜேஎம்எம் கூட்டணித் தலைவர்கள், ஆளுநரை சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோரியதோடு, ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் பட்டியலையும் அளித்திருந்தனர்.

இந்நிலையில் ஆட்சியமைக்க வருமாறு அர்ஜூன் முண்டாவுக்கு ஆளுநர் பரூக் நேற்று அழைப்பு விடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்து கந்தசாமி: சான்ஸ் கிடைச்சுதுன்னு ஆட்சியை அமைப்பீங்களா, காங்கிரஸோட புத்திசாலித்தனம் எல்லாம் உங்களுக்கு வராது போலிருக்கே.

மறக்காம வோட்டுப் போடுங்க

வியாழன், 9 செப்டம்பர், 2010

காயப்படுத்தாத கிசுகிசு : குஷ்பு பாராட்டிய இதழ்!

விடுப்பு.காம் செய்தி: சவுத் ஸ்கோப் என்ற ஆங்கில சினிமா இதழ், ரசிகர்கள் பங்கேற்கும் ஒரு விருது நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருக்கிறது. தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய நான்கு மொழிகளிலும் வெளிவரும் பத்திரிகை

இது என்பதால், இந்த நான்கு மொழி படங்களுக்கும் போட்டி வைத்து தேர்ந்தெடுப்பார்களாம். வெற்றி பெறுகிற படங்களுக்கு அவார்டு வழங்கப்படுகிறது.

கடந்த ஆண்டு வெளிவந்த நாடோடிகள், பசங்க, நான் கடவுள், காஞ்சிவரம் ஆகிய நான்கு படங்களும் போட்டியில் இருக்கின்றன. சிறந்த படங்களை மட்டுமல்ல, சிறந்த இயக்குனர், சிறந்த நடிகர், சிறந்த நடிகை என்று சினிமாவின் அத்தனை பிரிவினருக்கும் போட்டி வைத்து இந்த அவார்டு வழங்கப் போகிறார்களாம்.

இந்த போட்டி அறிவிப்பை வெளியிட வந்திருந்தார் குஷ்பு. அவருடன் சமந்தா, பியா போன்ற ஜிலு ஜிலு நட்சத்திரங்களும் வந்திருந்தார்கள். முதலில் சவுத் ஸ்கோப் இதழ் பற்றி பேசிய குஷ்பு, ரொம்ப இன்ட்ரஸ்ட்டிங்காகவும் யாரையும் காயப்படுத்தாமலும் இந்த இதழ்ல கிசுகிசு வருது. எப்பவுமே கிசுகிசு படிக்கறதுன்னா ரசிகர்களுக்கு ரொம்ப ஜாலியா இருக்கும். அதை எல்லை மீறாம செஞ்சுட்டு வர்றாங்க இவங்க. இந்த போட்டியில் கலந்துக்கிற எல்லாருமே முக்கியமானவர்கள். எப்படிதான் ஒருவரை மட்டும் தேர்ந்தெடுக்க முடியுமோ? அல்லது ஒரு படத்தை மட்டும் தேர்ந்தெடுக்க முடியுமோ, குழப்பம்தான் என்றார்.

கருத்து கந்தசாமி: அடுத்தவங்களை பத்தின கிசுகிசுன்னா நம்மள காயப்படுத்தாதுதான்.

குஷ்புவுக்கு: மேடம், உங்க மேல இருந்த வழக்கு விசாரணையெல்லாம் முடிஞ்சிருச்சா?

மறக்காம வோட்டுப் போடுங்க

புதன், 8 செப்டம்பர், 2010

தமிழக அரசு பொய் சொல்கிறது

பிபிசி தமிழ் செய்தி: தமிழக காவல் துறை இயக்குனர் பதவிக்கு, லத்திகா சரண் நியமிக்கப்பட்டது தொடர்பான வழக்கில் தமிழக அரசு சென்னை உயர்நீதிமன்றத்திடம் உண்மைகளை மறைக்கிறது என்று மூத்த ஐபிஎஸ் அதிகாரி கே.விஜயகுமார் கூறியுள்ளார்.

தீயணைப்புத் துறை இயக்குனரான டி.ஜி.பி. ஆர்.நடராஜ் என்பவரும், லத்திகா சரண் தனக்கும் இன்னும் வேறு சிலருக்கும் பணியில் இளையவர், எனவே அவர் சட்டம் ஒழுங்குப் பிரிவின் தலைவராக நியமிக்கப்பட்டிருக்க்க்கூடாது என வாதிட்டு தொடர்ந்த வழக்கினை மத்திய நிர்வாக தீர்ப்பாயம் தள்ளுபடி செய்த நிலையில், அவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்திருக்கிறார்.

தமிழக அரசு தனது பதில் மனுவில், "மூத்த ஐ.பி.எஸ். அதிகாரிகள் என்.பாலச்சந்திரன், லத்திகா சரண், நடராஜ், விஜயகுமார் ஆகியோரது பெயர்கள் பரிசீலிக்கப்பட்டன. விஜயகுமார் மத்திய அரசுப் பணிக்குப் போய் விட்டதால், மற்ற 3 பேரில் திறமை மற்றும் தகுதி அடிப்படையில் லத்திகா சரண் தேர்வு செய்யப்பட்டார். சீனியாரிட்டி அடிப்படையில்தான் டிஜிபி தேர்வு இருக்கவேண்டும் என்பது விதியில்லை" எனக் கூறியிருக்கிறது.

விஜயக்குமார் தனது பதில் மனுவில், மாநில பணிக்கு வர விரும்பவில்லை என்று தான் ஒருபோதும் சொன்னதில்லை என்றும் மத்திய அரசு பணிக்குச் சென்றிருந்தாலும், தன்னையும் சட்டம் ஒழுங்குப் பிரிவுத்தலைவர் நியமனத்திற்கு டி.ஜி.பி. பணிக்கு பரிசீலனை செய்திருக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார்.

விஜயகுமார் தற்போது ஹைதராபாத்தில் உள்ள சர்தார் வல்லபாய் படேல் தேசிய போலீஸ் அகாடமியின் தலைவராகப் பணியாற்றிவருகிறார்.

"அப்பதவி கூடுதல் டைரக்டர் ஜெனரல் நிலையில் இருப்பவர்களுக்குரித்தான் பதவியாயிருந்தும் லிஜயகுமார் அவர் ஏற்றுக்கொண்டிருக்கிறார். எனவே தமிழ்நாட்டில் அவருக்குப் பணியாற்ற விருப்பமில்லை என்ற ரீதியில் தமிழக உள்துறை செயலர் தனது மனுவில் குறிப்பிட்டிருக்கிறார். அது தவறானது. அவதூறானது" என விஜயகுமார் மேலும் கூறியிருக்கிறார்.

கருத்து கந்தசாமி: இதுக்கு நம்ம தானைத் தலைவர் கருணாநிதி விடுத்த பதில் அறிக்கை "ஜெயலலிதா அம்மையார் மாற்றி சொன்னதில்லையா, நண்பர் பாண்டியன் மாற்றி சொன்னதில்லையா, அத்வானி அவர்கள் மாற்றி சொன்னதில்லையா, அமெரிக்க அதிபர் மாற்றி சொன்னதில்லையா"

சிரிச்சுட்டு மாத்திக் குத்தாம சரியா வோட்டு குத்திட்டு போங்க

மறக்காம வோட்டுப் போடுங்க

செவ்வாய், 7 செப்டம்பர், 2010

சிந்து சமவெளி திரைப்படத்துக்கு எதிர்ப்பு: இயக்குநர் சாமியின் கார் மீது தாக்குதல்

தினமணி செய்தி: உயிர், மிருகம் உள்ளிட்ட படங்களை இயக்கியவர் திரைப்பட இயக்குநர் ஏ.கே. சாமி. இவர் இயக்கிய "சிந்து சமவெளி' திரைப்படம் அண்மையில் வெளியானது.

மாமனார் - மருமகள் உறவை கொச்சைப்படுத்தும் வகையில் இந்த படத்தில் காட்சிகள் இடம் பெற்றுள்ளதாக புகார் எழுந்தது.

இத்தகைய காட்சிகளுக்கு பல்வேறு தரப்பிலிருந்தும் இயக்குநர் சாமிக்கு எதிர்ப்பு வந்தது. இது தொடர்பாக சில நாள்களாக தனக்கு தொலைபேசி மூலம் கொலை மிரட்டல்கள் விடுக்கப்பட்டன என்றார் சாமி.

இந் நிலையில் கே.கே. நகர் நியு பங்காரு தெருவில் உள்ள அவரது வீட்டின் வாயிலில் நிறுத்தப்பட்டிருந்த கார் மீது ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவில் மர்ம நபர்கள் கல்வீசித் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

சில நாள்களாக வந்து கொண்டிருந்த மிரட்டல்களின் தொடர்ச்சியாகவே இந்த தாக்குதல் நடந்துள்ளதாக சாமி போலீஸில் புகார் அளித்துள்ளார்.

இந்த சம்பவத்தை அடுத்து தனக்கும், தனது வீட்டுக்கும் பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று இயக்குநர் சாமி போலீஸாரிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

கருத்து கந்தசாமி: சினிமாவை ஓட வைக்கிறதுக்கு இந்த மாதிரி பப்ளிசிட்டியெல்லாம் தேவை தான்.

இயக்குநர் சாமிக்கு : அடுத்ததா மாமியார் ம்றுமகன் கள்ள உறவை பத்தி படமெடுக்கப் போறீங்களாமா?

மறக்காம வோட்டுப் போடுங்க

ஞாயிறு, 5 செப்டம்பர், 2010

நக்ஸல்களுக்கு - ராகுல் பிரார்த்தனை

சென்னை ஆன்லைன் செய்தி: கட்சி நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக ராகுல் காந்தி பிகார் வந்துள்ளார். போலீஸப்ர் கடத்தப்பட்ட சம்பவம் குறித்து அவர் கூறுகையில், "நக்ஸல்களின் பிடியில் உள்ள 3 போலீஸாரும் பத்திரமாக விடுவிக்கப்பட வேண்டுமென்று பிரார்த்தனை செய்கிறேன். கொல்லப்பட்ட போலீஸ்காரர் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்' என்றார் ராகுல்.

கருத்து கந்தசாமி: என்ன அருமையான தலைவர்கள் நமக்கு கிடைச்சிருக்காங்க. முக்கியமான ஆளுக கடத்தப் பட்டிருந்தா இப்படித்தான் பிரார்த்தனை பன்னிட்டிருப்பாரா

மறக்காம வோட்டுப் போடுங்க

4வது முறையாக காங். தலைவராகி சோனியா சாதனை

தட்ஸ்தமிழ் செய்தி: காங்கிரஸ் கட்சியின் தலைவராக நான்காவது முறையாக தேர்ந்தெடுக்கப்பட்டு புதிய சாதனை படைத்துள்ளார் சோனியா காந்தி.

நேற்று அவர் நான்காவது முறையாக போட்டியின்றி தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அவரை எதிர்த்து யாரும் போட்டியிடவில்லை.

கருத்து கந்தசாமி: எதுத்து போட்டிப் போடறதுக்கு ஆளே இல்லாத இடத்துல 4 முறையென்ன 400 முறையா வேணுமின்னாலும் சோனியா காந்தியே கட்சி தலைவியாகலாம். இதுலே சாதனை என்னன்னு தான் புரியலை

காங்கிராஸாருக்கு - உங்க கட்சியெலே பதவியிலெ இருக்கிற யாரும் 2 தடவைக்கு மேலே இருக்க முடியாதாமே? நிஜமாவா?

மறக்காம வோட்டுப் போடுங்க

சனி, 4 செப்டம்பர், 2010

மீனவர்கள் நலனுக்காக வழக்கு தொடர்ந்தேன்: கருணாநிதிக்கு ஜெ. பதில்

வெப் துனியா செய்தி: தமிழக மீனவர்கள் நலனுக்காக கச்சத்தீவு பிரச்சனையில் உ‌ச்ச ‌நீ‌திம‌ன்ற‌த்தில் வழக்கு தொடர்ந்தேன் எ‌ன்று முதலமை‌ச்ச‌ர் கருணாநிதிக்கு அஇஅ‌திமுக பொது‌ச் செயல‌‌ர் ஜெயலலிதா பதில் அ‌ளி‌த்து‌ள்ளா‌ர்.

கருத்து கந்தசாமி: அய்யாவுக்கும், அம்மாவுக்கும் வேறே எதுலெ ஒத்துமை இருக்குதோ இல்லியோ இந்த விசயத்துல நல்ல ஒத்துமை. இவங்க நீதிமன்றம் நீதிமன்றமா வழக்குப் போடுவாங்க, அவரு சோனியாவுக்கு, பிரதமருக்கு கடிதம் அனுப்புவாரு. பாவம் இவங்களால வேறே ஒன்னுமே செய்ய முடியாதில்லெ

மறக்காம வோட்டுப் போடுங்க

வெள்ளி, 3 செப்டம்பர், 2010

அரசை எதிர்த்து போராட்டம் வேண்டாம்: கருணாநிதி வேண்டுகோள்

தினமணி செய்தி: தமிழக அரசை எதிர்த்து போராட்டம், ஆர்ப்பாட்டம், உண்ணாவிரதம் என்பதையெல்லாம் கைவிட வேண்டும் என்று முதல்வர் கருணாநிதி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதுகுறித்து, வியாழக்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை:

மாற்றுத் திறனாளிகள் அனைவருக்கும் வேலை வழங்க வேண்டும் அல்லது வேலையில்லா கால நிவாரணமாக மாதந்தோறும் ரூ.3 ஆயிரம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் 3-ம் தேதியிலிருந்து 10-ம் தேதி வரை மாற்றுத்

திறனாளிகள் போராட்டம் நடத்தவிருப்பதாக அவர்களுக்கான ஒரு சங்கம் அறிவித்துள்ளது.

இந்தியாவிலேயே முதல் முறையாக மாற்றுத் திறனாளிகளுக்கு சமுகப் பாதுகாப்பு அளித்து நலத்திட்ட உதவிகள் வழங்க தனி நலவாரியம் அமைக்கப்பட்டுள்ளது. அவர்களுக்கென பல்வேறு நலத்திட்டங்கள் அறிவிக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது.

மாற்றுத் திறனுடையோர் உயர் கல்வி பயில கட்டணங்கள் விதிவிலக்கு, மாணவர் இல்லங்களில் தங்கிப் படிக்கும் மாற்றுத் திறனாளிகளுக்கு உணவுச் செலவாக மாதம் ரூ.450 வழங்கப்படும். மன வளர்ச்சி குன்றியவர்களுக்கு வருவாய் உச்சவரம்பின்றி ரூ.500 வீதம் மாதாந்திர உதவித் தொகையை அரசு வழங்கி வருகிறது.

கை, கால் ஊனமுற்றோர் பயணச் சலுகைகளுடன், நாட்டிலேயே முதல் முறையாக மோட்டார் பொருத்தப்பட்ட மூன்று சக்கர வண்டிகள் முதலான பல்வேறு உதவிக் கருவிகள் வழங்கப்பட்டுள்ளன. வேலைவாய்ப்பற்ற அனைத்து வகை மாற்றுத் திறனாளிகளுக்கும் நிவாரணத் தொகை அளிக்கப்படுகிறது.

கடுமையாக பாதிக்கப்பட்ட மாற்றுத் திறனாளிகள் ஆயிரத்து 500 பேருக்கு இலவசமாக மடக்கு சக்கர நாற்காலிகள் வழங்கப்படவுள்ளது. கடும் மூளை முடக்குவாதத்தால் பாதிக்கப்பட்ட மாற்றுத் திறனாளிகளின் கை, கால் தசை இறுக்கமாக இருக்கும். இவர்களது தனிப்பட்ட தேவைகளின் அடிப்படையில் புதிதாக வடிவமைக்கப்பட்ட சிறப்பு நாற்காலிகள் 500 பேருக்கு முதல் கட்டமாக வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

செலவைப் பார்க்க வேண்டியிருக்கிறது: என்னைப் பொருத்தவரையில் மாற்றுத் திறனாளிகள் மட்டுமல்ல, யாருமே எந்தவிதமான சிரமமும் இல்லாமல் நல்வாழ்வு வாழ வேண்டும் என்பது தான். அதற்காகத்தான் இந்த வயதிலும் இரவு பகலாக உழைக்கிறேன். சிந்திக்கிறேன்.

யாருக்கு என்ன செய்தால் அவர்களுக்கு நல்வாழ்வு ஏற்படும் என்று நினைத்துக் கொண்டே இருக்கிறேன். ஆனால், ஒரு அரசு இருக்கும் போது, அந்த அரசினால் எந்த அளவுக்கு செலவழிக்க முடியும் என்று பார்க்க வேண்டியிருக்கிறது. அரசிடம் இருக்கின்ற நிதியைக் கொண்டு அனைத்துத் தரப்பினரையும் முடிந்த அளவுக்கு திருப்தி செய்ய வேண்டுமென்பதே என் எண்ணம்.

தேர்தல் வரப்போகிறது: சில மாதங்களில் பொதுத் தேர்தல் வரப் போகிறது என்றதுடன், அதற்குள் தங்களுடைய தேவைகளைப் பூர்த்தி செய்து கொள்ள வேண்டுமென அனைத்துத் தரப்பினரும் எண்ணுகிறார்கள். அதற்காக அவர்கள் தேர்ந்தெடுக்கும் முறைதான் போராட்டம் என்பதெல்லாம்.

உண்மையில் அவர்களுக்கு இந்த அரசை எதிர்த்துப் போராட்டம் நடத்த வேண்டுமென்பது நோக்கமல்ல. அதேநேரத்தில் ஒரு சில அரசியல்வாதிகள் தங்கள் சங்கங்களை வளர்க்க வேண்டும் என்ற உள்நோக்கத்தோடு அப்பாவிகளைத் தூண்டிவிட்டு குளிர்காய எண்ணுகிறார்கள்.

அதுவும் அந்த அலுவலர்களுக்குத் தெரிகிறது என்ற போதிலும் தங்களையும் அறியாமல் ஆளாகிவிட நேரிடுகிறது என்பதை நான் நன்கறிவேன்.

ஒத்துழைக்க முன்வாருங்கள்: இந்த ஆட்சி மாறிவிடும், பிறகு உங்கள் தேவைகள் எதுவும் நிறைவேறாது என்றெல்லாம் நீங்கள் பயப்படத் தேவையில்லை. நிச்சயமாக ஆட்சி மாறாது. ஏன் மாறப் போகிறது?

இந்த ஆட்சியிலே உங்கள் தேவைகள் கவனிக்கப்படவில்லையா? எந்தத் தரப்பினராவது புறக்கணிக்கப்பட்டதுண்டா? ஊழல்கள் நடைபெற்றது உண்டா? இந்த அரசின் சார்பில் அறிவிக்கப்பட்ட சலுகைகளை நீங்கள் அறிய மாட்டீர்களா? அந்தச் சலுகைகளையெல்லாம் நீங்கள் பெறுகிறீர்களா இல்லையா?

ஆட்சி மாறி விடும். உங்கள் கோரிக்கைகள் நிறைவேறாமலே போய்விடும் என்றெல்லாம் நினைக்கத் தேவையில்லை. எனவே, இந்த அரசை எதிர்த்துப் போராட்டம், ஆர்ப்பாட்டம், உண்ணாவிரதம் என்பதையெல்லாம் கைவிட்டு, அரசின் முயற்சிகளுக்கு ஒத்துழைக்க முன்வர வேண்டும் என்று முதல்வர் கருணாநிதி கேட்டுக் கொண்டுள்ளார்.

கருத்து கந்தசாமி: யாரும் எதுத்து போராட வேண்டாம்னா எப்படி. இந்த போராட்ட வழியெல்லாம் நீங்களும், உங்க கட்சியான திமுகவும் சொல்லிக் கொடுத்ததுதானே.

மறக்காம வோட்டுப் போடுங்க

வியாழன், 2 செப்டம்பர், 2010

ராமதாஸ் திமுக கூட்டணியில் சேர திருமாவளவன் அழைப்பு

சென்னை ஆன்லைன் செய்தி: தி.மு.க. கூட்டணியில் இருந்து நாங்கள் வெளியேறப் போவதில்லை. கூட்டணியில் தொடர்ந்து நீடிப்போம். தி.மு.க. கூட்டணிக்கு பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வரவேண்டும் என்று வேண்டுகோள் விடுக்கிறேன். என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன் எம்.பி. கூறினார்.

கருத்து கந்தசாமி: திமுக மேலே தொல்.திருமாவளவன் சாருக்கு என்ன கோபமோ தெரியலியே

மறக்காம வோட்டுப் போடுங்க

மகள் திருமண அழைப்பு: ரசிகர்களிடம் ரஜினி வருத்தம்

தினமணி செய்தி: நடிகர் ரஜினிகாந்தின் இளையமகள் சௌந்தர்யா - அஸ்வின் திருமணம் செப்டம்பர் 3-ம் தேதி சென்னையில் நடைபெறுகிறது. தமிழகத்தின் முக்கிய வி.ஐ.பி.களுக்கு ரஜினியே நேரில் சென்று பத்திரிகை வைத்து அழைப்பு விடுத்துள்ளார். ரசிகர்களுக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை.

இதற்காக வருத்தம் தெரிவித்து பத்திரிகைகளின் வழியாக ரசிகர்களுக்கு அவர் தனது கைப்பட எழுதி அனுப்பியுள்ள செய்தியின் விவரம்:

எனது மகளின் திருமணத்தை ரசிகர்கள் நேரடியாக வந்து பார்க்க வேண்டும். வாழ்த்த வேண்டும் என்ற நல்ல எண்ணத்துடன் தொலைபேசி மூலமாகவும், தபால் மூலமாகவும் எனக்கு தகவல் வந்து கொண்டு இருக்கிறது. இதற்காக ரசிகர்களை அழைப்பதற்கு ஆசையாக இருந்தாலும் சென்னை நகரின் இட நெருக்கடி காரணமாகவும், போக்குவரத்து இடையூறுகள் கருதியும் ரசிகர்களை அழைக்க முடியவில்லை என மிக வருத்தத்துடன் தெரிவித்து கொள்கிறேன். மணமக்களுக்கு உங்களின் நல்லாசிகளை வழங்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.

கருத்து கந்தசாமி: விடுங்க ரஜினி சார். உங்களை பத்திதான் பாபா படம் வந்த பின்னாடி ஒரு கண்காட்சி நடத்துனீங்களே, அப்பவே ரசிகர்கள் தெரிஞ்சுக்கிட்டாங்களே. ரொம்ப கவலைப் படாதீங்க உங்க எந்திரன் படத்தை உங்க ரசிகர்கள் ஓட வைச்சிருவாங்க

மறக்காம வோட்டுப் போடுங்க

சிந்து சமவெளி... ஏ சான்றும், ஏக பாராட்டும்!

தட்ஸ்தமிழ் செய்தி: சிந்து சமவெளி படத்தைப் பார்த்த சென்னை மண்டல சென்சார் சிறிய தணிக்கைக்குப் பிறகு ஏ சான்றிதழ் அளித்தனர். ஆனால் படத்தை வெகுவாகப் பாராட்டி உள்ளனர்.

தமிழ் பட உலகில், சர்ச்சைக்குரிய கதைகளை தேர்ந்தெடுத்து இயக்குபவர் என்ற பெயரை குறுகிய காலத்தில் சம்பாதித்து விட்டவர் சாமி. பாலீஷ் வார்த்தைகளால் பேசத் தெரியாத படைப்பாளியான இவர் அடிக்கடி சர்ச்சையில் சிக்கினாலும், சரக்கிருப்பதால் இன்னமும் கோடம்பாக்கத்தில் மதிக்கப்படுகிறார்.

இவர் இயக்கிய முதல் படம் 'உயிர்.' கொழுந்தன் மீது ஆசைப்படும் (கணவன் கையாலாகாதவன் என்பதால்) அண்ணியை பற்றிய கதை. அடுத்து இவர் இயக்கிய 'மிருகம்', ஊருக்கு அடங்காத ஒருவன், உயிர் கொல்லி நோய் வந்து சாகிற கதை. இந்தப் படம் வன்முறையை சற்று அதிகமாக தூக்கிப் பிடிப்பது போலத் தெரிந்தாலும், எய்ட்ஸை மையப்படுத்தி வந்த ஒரே படம் என்ற பெருமையைப் பெற்றது.

இதைத்தொடர்ந்து சாமி இயக்கியுள்ள புதிய படம் சிந்து சமவெளி.

இது, கள்ள உறவால் ஏற்படும் விபரீத விளைவுகளை சித்தரிக்கும் படம். ஹரீஷ் கல்யாண் கதாநாயகனாகவும், அனகா கதாநாயகியாகவும் நடித்து இருக்கிறார்கள்.

இந்த படம், தணிக்கைக்காக அனுப்பப்பட்டது. படத்தைப் பார்த்த தணிக்கை குழுவினர், 3 காட்சிகளை மட்டும் நீக்கிவிட்டு, படத்துக்கு ஏ சான்றிதழ் வழங்கினார்கள்.

அதே நேரம், தினசரி செய்தித்தாள்களைத் திறந்தால் வரும் கள்ளக் காதல் செய்திகல் இந்தப் படத்தால் கொஞ்சமாவது குறையும் என்று நம்புவதாக பாராட்டும் தெரிவித்துள்ளனர்.

கருத்து கந்தசாமி: சினிமாவாலே கெட்டுப் போயிட்டாங்கன்னு சொன்னா சினிமாங்கிறது ஒரு பொழுதுபோக்கு அதனாலே யாரும் கெட்டுப்போக மாட்டாங்கன்னு சொல்றாங்க. சினிமாவால திருந்திருவாங்கன்னு யாராவது சொன்னா சந்தோசமா கேட்டுக்கிறாங்க.

மறக்காம வோட்டுப் போடுங்க

புதன், 1 செப்டம்பர், 2010

தென் மாவட்ட வெற்றி : நடிகர் கார்த்திக் பேட்டி

சென்னை ஆன்லைன் செய்தி: தென் மாவட்ட தேர்தலில் திமுக, அதிமுக வெற்றி பெற கார்த்திக் தேவை என்று முதல்வர் கருணாநிதிக்கும், ஜெயலலிதாவுக்கும் தெரியும் என அகில இந்திய நாடாளும் மக்கள் கட்சியின் பொதுச் செயலாளர் நடிகர் கார்த்திக் உறுதிபட தெரிவித்துள்ளார்.

கருத்து கந்தசாமி: கார்த்திக் சார், சினிமாவுல மட்டும் காமெடி பன்னுங்க.

மறக்காம வோட்டுப் போடுங்க

கச்சத் தீவு இலங்கைக்குத் தரப்பட்டது சட்ட விரோதம்-திமுக

தட்ஸ்தமிழ் செய்தி: தமிழக மீனவர்கள் மீதான இலங்கை கடற்படையினரின் தாக்குதல் தொடர்பாக நாடாளுமன்றத்தில் நேற்று திமுக எம்பி டி.ஆர்.பாலு கவன தீர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தார்.

அதன் மீது நடைபெற்ற விவாதத்தில், தமிழகத்தைச் சேர்ந்த காங்கிரஸ் தவிர்த்த பிற கட்சி எம்.பிக்கள் கச்சத்தீவை திரும்பப் பெற வேண்டும் என்று வலியுறுத்தினர்.

விவாதத்தில் பேசிய பாலு, கச்சத்தீவை இலங்கைக்கு அளிக்கும் ஒப்பந்தம், கடந்த 1974ம் ஆண்டு ஜுன் மாதம் கையெழுத்தானது. அப்போது வெளியுறவுத்துறை அமைச்சராக இருந்த ஸ்வரண் சிங், தமிழக மீனவர்களின் மீன் பிடி உரிமையும், கடற்பயண உரிமையும் இந்த ஒப்பந்தத்தில் பாதுகாக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.

ஒப்பந்தப்படி, சர்வதேச கடல் பகுதியில் மீன் பிடிக்கச் செல்லும் தமிழக மீனவர்கள், கச்சத்தீவு பகுதியில் ஓய்வு எடுக்கவும், வலைகளை உலர்த்தவும் உரிமை அளிக்கப்பட்டிருந்தது.

ஆனால், கடந்த 1976ம் ஆண்டு முதல் நிலைமை மாறியது. இந்திய-இலங்கை செயலாளர்கள் இரண்டு கடித தொகுப்புகளை பரிமாறிக் கொண்டார்கள். அந்தக் கடிதங்கள், கச்சத்தீவு ஒப்பந்தத்தின் அங்கமாக ஆக்கப்பட்டன. அதன்படி, இந்திய மீனவர்களின் மீன்பிடி உரிமை பறிக்கப்பட்டது.

இந்த கடிதங்களுக்கு நாடாளுமன்றத்தின் ஒப்புதலையோ, அப்போதைய தமிழக அரசின் ஒப்புதலையோ பெறவில்லை. அரசியல் சட்டத்தை திருத்துவதன் மூலமும், நாடாளுமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றுவதன் மூலமும் மட்டுமே, இந்தியாவின் எந்தப் பகுதியையும் பிற நாட்டுக்கு கொடுக்க முடியும். அப்படிச் செய்யப்படாததால், இது ஒரு சட்டவிரோதமான ஒப்பந்தம்.

எனவே, கச்சத் தீவு ஒப்பந்தத்தை மத்திய அரசு ரத்து செய்ய வேண்டும். கச்சத் தீவை திரும்பப் பெற வேண்டும்.கச்சத் தீவு பகுதி, உலகிலேயே இறால் மீன்கள் அதிகமாக கிடைக்கும் பகுதி.

ஆனால் அங்கு செல்லும் தமிழக மீனவர்கள், இலங்கை கடற்படையினரால் தாக்கப்படுகிறார்கள். இத்தகைய தாக்குதலைத் தடுக்க, இந்திய கடற்படையின் ரோந்து பணியை அதிகரிக்க வேண்டும் என்றார்.

அதிமுக எம்பி தம்பிதுரை பேசுகையி்ல்,

கச்சத் தீவு, தமிழ்நாட்டின் ஒருங்கிணைந்த பகுதி. ஒப்பந்தம் கையெழுத்தானபோது, தமிழக அரசை மத்திய அரசு கலந்து ஆலோசிக்கவில்லை. கச்சத் தீவு பகுதியில் மீன் பிடிக்கச் செல்லும் தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படை தாக்குதல் நடத்துவதால், இதுவரை 500 மீனவர்கள் பலியாகி உள்ளனர். ஆயிரம் பேர் முடமாக்கப்பட்டுள்ளனர். மேலும், ஆயிரம் பேரைக் காணவில்லை.

எனவே, இலங்கையுடன் நட்பு வேண்டும் என்பதற்காக, தமிழக மீனவர்களின் நலன்களை மத்திய அரசு அலட்சியப்படுத்தக் கூடாது. தமிழ்நாடு- இலங்கை தமிழ் மீனவர்கள் இடையிலான தொப்புள் கொடி உறவை துண்டிப்பதற்காகவே, இந்த ஒப்பந்தம் போடப்பட்டதோ என்று சந்தேகமாக இருக்கிறது.

மேலும், இந்தியப் பெருங்கடல் பகுதியில் சீனா முகாமிட முயன்று வருகிறது. அங்கு சீனா நிலைகொண்டால், அது இந்தியாவின் பாதுகாப்புக்கு பெரும் அச்சுறுத்தலாக அமையும். ஆகவே, கச்சத்தீவை திரும்பப் பெற வேண்டும்.

வெறும் கடிதம் எழுதுவதால் மட்டும் இந்தப் பிரச்சனைக்குத் தீர்வு காண முடியாது என்றார் தம்பிதுரை.

அவர் இவ்வாறு கூறியதற்கு திமுக எம்பிக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து இரு கட்சி எம்பிக்களும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். என்றார்.

பின்னர் மார்க்சிஸ்ட் எம்.பி. நடராஜன், மதிமுக எம்.பி கணேசமூர்த்தி ஆகியோரும் கச்சத் தீவை மீட்க வேண்டும் என்று பேசினர்.

அது இலங்கைக்கே சொந்தம்-கிருஷ்ணா:

இந்த விவாதங்களுக்குப் பதிலளித்துப் பேசிய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா,
கச்சத் தீவு, இலங்கைக்கே சொந்தம். அதை திரும்பப் பெற முடியாது. இரு அரசுகளுக்கிடையிலான அந்த புனிதமான ஒப்பந்தத்தை ரத்து செய்ய முடியாது. இலங்கை, நமது நட்பு நாடு. அந்த அம்சத்தை மனதில் கொள்வது அவசியம்.

மீன்பிடி விவகாரம் தொடர்பாக, கடந்த 2008ம் ஆண்டு அக்டோபர் மாதம், இந்தியா-இலங்கை இடையே ஒரு புரிந்து கொள்ளல் ஒப்பநதம் ஏற்பட்டது.

அதன்பிறகு, தமிழக மீனவர்கள் பிடிக்கப்படுவதும், சுடப்படுவதும் கணிசமாக குறைந்துள்ளது. 2008ம் ஆண்டு, 1,456 மீனவர்கள் பிடித்துச் செல்லப்பட்டனர். ஆனால், 2009ம் ஆண்டு, அது 127 ஆகக் குறைந்தது. இந்த ஆண்டு ஜுலை மாதம்வரை, 26 மீனவர்கள் மட்டுமே பிடித்துச் செல்லப்பட்டனர்.

கடந்த 2008ம் ஆண்டு 5 மீனவர்கள் கொல்லப்பட்டனர். 2009ம் ஆண்டு, யாரும் கொல்லப்படவில்லை. நடப்பு ஆண்டில், ஒருவர் கொல்லப்பட்டதாக கூறப்படும் சம்பவம் நடந்துள்ளது.

எப்போதெல்லாம் தமிழக மீனவர்கள் தாக்கப்படும் சம்பவம் நடக்கிறதோ, அப்போதெல்லாம் நாங்கள் இலங்கை அரசின் கவனத்துக்கு அதை எடுத்துச் செல்கிறோம். ஆனால், அதற்கு தாங்கள் பொறுப்பல்ல என்று இலங்கை மறுத்து விடும். தங்களது கடற்படை, இந்திய கடல் பகுதிக்குள் நுழையவில்லை என்றும் கூறும்.

எனவே, இத்தகைய சம்பவங்கள் இலங்கை கடல் எல்லைக்குள்தான் நடக்கின்றன என்பதை நான் தெரிவிக்க விரும்புகிறேன். ஆகவே, எல்லையை மதிக்க வேண்டும் என்றும், இலங்கை பகுதிக்குள் நுழையக்கூடாது என்றும் நமது மீனவர்களை கேட்டுக் கொள்கிறோம்.

அதுபோல, இலங்கை மீனவர்களும் நமது பகுதிக்குள் வரக்கூடாது என்று இலங்கை அரசிடம் தெரிவித்துள்ளோம் என்றார்.

ஆனால், கிருஷ்ணாவின் பதில் திருப்தி அளிக்கவில்லை என்று கூறி, அதிமுக, மதிமுக எம்பிக்கள் வெளிநடப்பு செய்தனர். திமுக எம்பிக்களும் அவரது பதிலுக்கு கடும் அதிருப்தி தெரிவித்தனர்.

இந்த விவகாரத்தில் டி.ஆர்.பாலு தொடர்ந்து கேள்விகள் எழுப்பியபடி இருந்தார். ஆனால், விவாதத்தை இத்துடன் முடிப்பதாக அறிவித்து அடுத்த அலுவலை எடுத்துக் கொண்டார் சபாநாயகர் மீரா குமார்.

கருத்து கந்தசாமி: திமுகவிற்கு - கச்சதீவை இலங்கையிடம் இந்திரா காந்தி அம்மையார் ஒப்படைத்த போது நீங்க தானே ஆட்சியில் இருந்தீங்க.

மத்திய அரசுக்கு - அமெரிக்காவை பார்த்து பயப்படுறீங்க சரி, சுண்டைக்கா சைஸ்ல இருக்கிற இலங்கைக்கு ஏன் பயப்படுறீங்க

தமிழக எம்பிக்களுக்கு - ஒத்துமையா இந்த விசயத்துல போராடறதை பாராட்டுறோம். ஆனா கச்சத்தீவு ஒப்பந்தம் என்னன்னு விவரமா தமிழ் மக்களுக்கு ஏன் சொல்ல மாட்டேங்குறீங்க

மறக்காம வோட்டுப் போடுங்க

செவ்வாய், 31 ஆகஸ்ட், 2010

விமான நிலையத்திற்கு இடம் தாருங்கள் என்று மக்களிடம் கெஞ்ச வேண்டியுள்ளதே-கருணாநிதி

தட்ஸ்தமிழ் செய்தி: சென்னை அண்ணாசாலையில் 10 ஆயிரம் சதுர அடி பரப்பளவில் அமைந்துள்ள எக்ஸ்பிரஸ் அவென்யூ வணிகவளாகத்தை முதல்வர் கருணாநிதி திறந்து வைத்தார்.

ஆளுநர் சுர்ஜித் சிங் பர்னாலா கலந்துகொண்டார். எக்ஸ்பிரஸ் அவென்யூ தலைவர் சரோஜ் கோயங்கா வரவேற்புரை நிகழ்த்தினார்.

நிகழ்ச்சியில் முதல்வர் கருணாநிதி பேசுகையில்,

ஒரு வளாகத்தைத் திறந்து வைப்பதில் நான் மிகுந்த மகிழ்ச்சியும், பெருமையும் அடைகிறேன். கோயங்கா குடும்பம் நீண்ட காலமாக எனக்கு நெருங்கிய நண்பர்களை - இன்னும் சொல்லப் போனால், இந்தக் குடும்பத்தின் தலைவர் கோயங்கா அவர்களையே பழகி அறிந்திருந்த அனுபவ ரீதியாக உணர்ந்திருந்த குடும்பம் ஆகும்.

அப்படிப்பட்ட குடும்பத்தின் வழித்தோன்றல்கள், இன்றைக்கு சென்னை மாநகரத்தில் உள்ளங் கவருகின்ற அளவிற்கு எக்ஸ்பிரஸ் அவென்யூ வர்த்தக வளாகத்தை அமைத்து பெயருக்கேற்றாற்போல் அடிக்கல் நாட்டியதிலிருந்து கட்டிடத்தை முற்றாக முடிக்கின்ற வரையில் எக்ஸ்பிரஸ் வேகத்திலேயே இதை நடத்தி நம் அனைவருடைய வாழ்த்துக்களையும் இன்றைக்குப் பெற்றுக் கொண்டிருக்கிறார்கள்.

சென்னை மாநகரத்தின் தேவை நிரம்ப! அந்தத் தேவையை நிறைவு செய்யக் கூடிய வகையில், கோயங்கா குடும்பத்தினரைப் போன்ற ஆற்றல் வாய்ந்தவர்கள், வாய்ப்பு கொண்டவர்கள், வசதி மிக்கவர்கள் தான் இதைச் செய்ய முடியும்.

வசதியும் வாய்ப்பும் இருந்தாலுங்கூட, இதைச் செய்ய வேண்டுமே என்கிற எண்ணம் எல்லோருக்கும் வந்து விடாது. பொது நல நோக்கிலே யாருக்கு கவனம் இருக்கிறதோ, யாருக்கு பொது நலச் சிந்தனை இருக்கிறதோ அவர்களால் தான் இத்தகைய காரியங்களைச் செய்ய முடியும். கோயங்கா அவர்கள் அரசியலிலே ஈடுபாடு கொண்டிருந்த அந்தக் காலந்தொட்டு, நான் அவரை மிக நன்றாக அறிவேன்.

அவரும் என்னை மிக நன்றாக அறிவார். 87 ஆண்டுக் காலம் வாழ்ந்து தமிழகத்திலே, இந்தியத் திருநாட்டிலே அவர் ஆற்றிய பெரும் பணிகள் இன்றைக்கும் நினைவு கூரத் தக்க பணிகளாகும். அத்தகைய பணிகளுக்கெல்லாம் ஒரு சிலாசாசனம் நிறுவியதைப் போலத் தான் இன்றைக்கு இந்த வர்த்தக வளாகம் இங்கே அமைக்கப்பட்டு திறப்பு விழா நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது.

தென்னிந்தியாவில் இருக்கின்ற வளாகங்கள் அனைத்தையும் விட பெரிய வளாகம் இது தான் என்று கூறுகின்ற அளவுக்கு இது இன்றைக்குத் தொடங்கப்பட்டிருக்கிறது. திரையரங்குகள், ஓட்டல்கள் போன்ற பல வசதிகளோடு இது அமைக்கப்பட்டிருக்கின்றது.

என்ன தான் சென்னை மாநகரம் பரப்பளவு மிகுந்தது என்றாலுங்கூட, இன்னமும் நெருக்கடியான சூழ்நிலை இருப்பதை நாம் காணுகிறோம்.

சென்னை மேலும் மேலும் வளர வேண்டும், வளம் பெற வேண்டும் மற்ற இந்தியாவிலே இருக்கின்ற பெரு நகரங்களுக்கு ஈடாக இந்த மாநகரம் விளங்க வேண்டுமென்று நினைத்தாலுங்கூட, அதற்குக் குறுக்கே பல சக்திகள் வருகின்றன என்பதை நீங்கள் அறிவீர்கள்.

இன்னமும் பக்கத்திலே உள்ள ஆந்திராவில், கர்நாடகாவில் விமான நிலையம் பெரிய அளவிலே அமைக்கப்பட்டிருப்பதை பார்க்கிறோம். சின்னஞ்சிறிய மாநிலங்களில் எல்லாம் பெரிய விமான நிலையங்கள், வசதியான விமான நிலையங்கள் தோன்றியிருப்பதை காணுகிறோம்.

டெல்லியிலே இருக்கின்ற விமான நிலையத்திற்கு ஈடாக இந்தியாவிலே உள்ள மாநிலங்களில் - அந்த அளவிற்கு இல்லாவிட்டாலும், அதற்கு அடுத்தபடியாகவாவது விமான நிலையங்கள் இருக்க வேண்டுமென்று கருதுகின்றோம்.

ஆனால் புது விமான நிலையத்திற்கு நாம் அடிக்கல் நாட்டிய மறுநாளே, ஆயிரம் பேர் அல்லது நூறு பேர் இந்த இடத்தை ஆக்ரமிக்காதே! என்று கோஷம் போட்டுக் கொண்டு, கொடி பிடித்துக் கொண்டு வருவதையும், அவர்களுக்கு சில பேர் தலைமை வகித்து வருவதையும் காணுகிறோம். நான் அவர்களையெல்லாம் வாழ விடக் கூடாது என்று எண்ணுகிறவன் அல்ல.

தமிழ்நாட்டில் பல ஆண்டுக் காலமாக இருந்த குடிசை வாழ் மக்களை கோபுரத்திலே ஏற்றி உட்கார வைக்கவேண்டுமென்று முதன் முதலாக சென்னை மாநகரத்தில் நினைத்தவனே நான் தான் என்பது உங்களுக்கெல்லாம் தெரியும். அதனுடைய விளைவாகத் தான் குடிசை மாற்று வாரியம் அமைக்கப்பட்டு - நடைபாதையோரங்களில் வாழ்ந்து வந்த குடிசை வாழ் மக்களுக்கெல்லாம் கோபுரம் போன்ற வீடுகள் கட்டித் தரப்பட்டிருக்கின்றன.

அதைப் போல மாற்றுத் திட்டங்கள் அவர்களுக்கு அமைக்கப்படுமென்று உறுதியளித்து, விமான நிலையத்திற்கு கொஞ்சம் விரிவான இடம் தேவை, கொஞ்சம் ஒதுங்கிக் கொள்ளுங்கள் என்று கேட்டு மக்களிடத்திலே கையேந்தி, தயவுசெய்து விட்டுக் கொடுங்கள் என்று கேட்டுப் பெற வேண்டிய நிலைமையிலே தான் அரசு இருக்கிறது.

அப்படிப்பட்ட நெருக்கடியான சூழ்நிலை இருக்கின்ற இந்தக் காலக் கட்டத்திலே கூட ஏறத்தாழ 18 இலட்சம் சதுர அடி பரப்பில் ஒரு வர்த்தக மையத்தைக் கட்ட முடிகிறது என்றால், அது கோயங்கா குடும்பத்தால் மாத்திரம் தான் முடியும் என்பதை இந்தக் கட்டடம் நமக்கு விவரித்துக் கொண்டிருக்கிறது.

எப்படிப்பட்ட அபூர்வமான நிகழ்ச்சிகளை - எப்படிப்பட்ட அருமையான திட்டங்களை இவர்களால் நிறைவேற்ற முடியும், வசதி வாய்ப்புகளை மக்களுக்குத் தர முடியும் என்பதற்கு எடுத்துக்காட்டாக இந்தத் தொடக்க விழா அமைந்திருக்கின்றது. இந்த ஆரம்ப விழாவே அதற்கான அச்சாரமாக விளங்குகிறது.

இப்பொழுதே இந்த மாளிகை எழும்ப - இந்த வளாகம் எழும்ப மாநகராட்சி மன்றம், அரசு, அதிகாரிகள் அத்தனை பேரும் தந்த ஒத்துழைப்பை இங்கே நன்றியோடு பாராட்டினார்கள்.

நான் அவர்களுக்குச் சொல்லிக் கொள்வேன். தொடர்ந்து உங்களுக்காக அல்ல -சென்னைக்கு வருகின்ற மக்களின் வசதி வாய்ப்புக்காக- அவர்கள் தங்கி ஓய்வெடுப்பதற்காக - அவர்களுடைய உற்சாகத்திற்காக - சுற்றுப் பயணத்தில் ஈடுபடுகின்ற பக்கத்து நாட்டுக்காரர்களுக்காக என்றும் பல வசதிகளைச் செய்து கொடுக்க எவ்வளவு தேவையோ அந்தத் தேவைகளை நிறைவு செய்து கொடுப்போம் - அரசின் சார்பாக - மாநகராட்சி மன்றத்தின் சார்பாக செய்து கொடுக்கத் தயாராக இருக்கிறோம்.

கோயங்கா குடும்பத்தாரைப் போன்ற குடும்பத்தினர் தொடர்ந்து இத்தகைய முயற்சிகளிலே ஈடுபடவேண்டுமென்று கேட்டுக் கொண்டு - இந்த விழாவிலே கலந்து கொண்டு, இந்த வளாகத்தை அமைத்தவர்களை வாழ்த்துவதில் நான் பெருமையடைகிறேன். ஏனென்றால் கோயங்கா, தமிழகத்திலே பிறந்தவரல்ல, பீகாரிலே பிறந்தவர் என்றாலுங்கூட - தமிழ்நாட்டு அரசியலிலே தன்னை ஈடுபடுத்திக் கொண்டு -அப்படி ஈடுபடுத்திக் கொண்ட காரணத்தால் பெருந்தலைவர் காமராஜர், பெரியார் ஈ.வெ.ரா., பேரறிஞர் அண்ணா போன்றவர்களோடெல்லாம் தொடர்பு கொண்டிருந்தார் என்பது எனக்கு நன்றாகத் தெரியும்.

அப்படிப்பட்டவரோடு நானும் கொஞ்ச காலம் தொடர்பு கொண்டிருந்தேன் என்பதையும், அவர் நடத்திய பத்திரிகை நேர்மையான முறையில் - எங்களைத் தாக்கக் கூடிய முறையிலே எழுதினாலும் - எங்களைக் கண்டிக்கக் கூடிய வகையிலே எழுதினாலும் - அதிலே ஒரு கண்ணியம் இருக்கும், அதிலே ஒரு நாகரிகம் இருக்கும்.

எப்படிப்பட்ட நாகரிக எழுத்துக்களுக்குச் சொந்தக்காரர்களான ஏ.என். சிவராமன் போன்றவர்கள், சொக்கலிங்கம் போன்றவர்களை ஆசிரியர்களாகக் கொண்டு நடைபெற்ற தினமணி பத்திரிகையானாலும்,
எக்ஸ்பிரஸ் பத்திரிகையானாலும் - இந்தப் பத்திரிகைள் நடந்து கொண்ட நாகரிகமான முறையிலே தொடர்ந்து தமிழகத்திலே உள்ள பத்திரிகைகள் எல்லாம் நடைபெறுமேயானால், அது கோயங்கா அவர்களுக்கு நாம் காட்டுகின்ற மரியாதை.

இந்தக் கட்டிடம் மாத்திரம் கோயங்கா அவர்களுக்குத் தரப்பட்ட காணிக்கை அல்ல, அந்தப் பத்திரிகைகளிலே நாம் கடைப்பிடிக்கின்ற நாகரிகமும், கண்ணியமும் கோயங்கா அவர்களுக்கு நாம் காட்டுகின்ற நன்றி யாகும் என்பதை எடுத்துச் சொல்லி, இந்த விழாவிலே கலந்து கொள்ள வாய்ப்பு கிடைத்தமைக்காக மீண்டும் மீண்டும் நன்றி கூறி, குறிப்பாக என்னை அழைத்து இந்த விழாவிலே கலந்து கொள்ளச் செய்த கோயங்கா குடும்பத்தாருக்கு நன்றி தெரிவிக்கிறேன் என்றார் கருணாநிதி.

கருத்து கந்தசாமி: என்ன முதல்வர் அய்யா, ஒரு நகரத்தில இருக்கிற மக்களை கெஞ்சறதுக்கே சலிச்சுக்கிறீங்களே. இன்னும் கொஞ்ச நாளிலே பட்டி தொட்டியெல்லாம் போயி ஒவ்வொருத்தர்க் கிட்டேயும் வோட்டுக்காக கெஞ்சனுமே.

மறக்காம வோட்டுப் போடுங்க

தர்மபுரி பஸ் எரிப்பில் 3 பேருக்கு தூக்கு : கொடூரக் கொலை என்று கூறி தண்டனை

தினமலர் செய்தி: தர்மபுரி அருகே, கோவை விவசாய பல்கலைக்கழக பஸ்சை எரித்து, மாணவியர் மூன்று பேர் உயிரோடு எரிந்து சாக காரணமாக இருந்த மூன்று பேருக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை, சுப்ரீம் கோர்ட் நேற்று உறுதி செய்தது. குற்றவாளிகளின் செயல், "காட்டுமிராண்டித்தனமானது, வெறுக்கத்தக்கது மற்றும் சமூகத்திற்கு எதிரான குற்றம்' என, நீதிபதிகள் தங்கள் தீர்ப்பில் கூறினர்.

கடந்த 2000ம் ஆண்டு பிப்ரவரி 2ம் தேதி, கொடைக்கானல் "பிளசன்ட் ஸ்டே' ஓட்டல் வழக்கில், அ.தி.மு.க., பொதுச் செயலர் ஜெயலலிதாவுக்கு தனி கோர்ட் சிறைத் தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கியது. இது, தமிழகம் முழுவதும் அ.தி.மு.க., வினர் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. பலவிதமான போராட்டங்களில் அவர்கள் ஈடுபட்டனர்.தர்மபுரி மாவட்டத்திலும் இதுபோன்ற போராட்டங்கள் நடைபெற்றன. அப்போது, தர்மபுரியை அடுத்த இலக்கியம்பட்டியில், கோவை விவசாய பல்கலைக்கழக மாணவியர் சுற்றுலா வந்த பஸ்சுக்கு, போராட்டக்காரர்கள் பெட்ரோல் ஊற்றி தீ வைத்தனர். பஸ்சில் இருந்த மாணவியர் 44 பேர் மற்றும் ஆசிரியர்கள் இரண்டு பேரும் ஜன்னல் வழியாகவும், கண்ணாடிகளை உடைத்தும் வெளியேறினர். கோகிலவாணி, ஹேமலதா, காயத்ரி என்ற மூன்று மாணவியர் மட்டும் சிக்கிக் கொண்டனர். அவர்கள் தீயில் எரிந்து சம்பவ இடத்திலேயே பலியாயினர். இச்சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.தர்மபுரி டவுன் போலீசார் இந்த வழக்கை விசாரித்து, தர்மபுரியைச் சேர்ந்த மாது என்ற ரவீந்திரன், நெடு என்ற நெடுஞ்செழியன், கொட்டப்பட்டி முன்னாள் ஊராட்சித் தலைவர் முனியப்பன், முன்னாள் ஒன்றிய செயலர் ராஜேந்திரன், டெய்லர் மணி உட்பட 31 பேரை கைது செய்தனர்.முதலில், கிருஷ்ணகிரி கோர்ட்டில் வழக்கு விசாரணை நடந்தது.

அதன்பின், சென்னை ஐகோர்ட் உத்தரவுபடி சேலம் முதலாவது செஷன்ஸ் கோர்ட்டில் விசாரணை நடந்தது. தர்மபுரி கலெக்டர், தமிழ்நாடு விவசாய பல்கலைக்கழக துணைவேந்தர் உட்பட 123 பேர் வழக்கில் சாட்சியம் அளித்தனர். வழக்கு விசாரணை முடிந்து 2007 பிப்ரவரி 16ம் தேதி நீதிபதி கிருஷ்ணராஜா தீர்ப்பு கூறினார். குற்றம் சாட்டப்பட்ட நெடுஞ்செழியன், ரவீந்திரன், முனியப்பன் ஆகியோருக்கு மரண தண்டனையும், 25 பேருக்கு தலா ஏழு ஆண்டு சிறை தண்டனையும் விதித்து தீர்ப்பு கூறினார். இரண்டு பேர் விடுதலை செய்யப்பட்டனர். வழக்கு விசாரணை நடந்த போதே குற்றம் சாட்டப்பட்டவர்களில் ஒருவரான டெய்லர் மணி, உடல்நலக்குறைவால் இறந்து விட்டார்.

தீர்ப்பு : தீர்ப்பை எதிர்த்து மரண தண்டனை பெற்ற மூவரும், மற்றவர்களும் சென்னை ஐகோர்ட்டில் அப்பீல் செய்தனர். அப்பீல் மனுக்களை விசாரித்த சென்னை ஐகோர்ட், மூவருக்கு வழங்கிய மரண தண்டனையை 2007 டிசம்பர் 6ம் தேதி உறுதி செய்தது. மற்றவர்களுக்கு விதிக்கப்பட்ட ஏழு ஆண்டு சிறைத் தண்டனையை இரண்டு ஆண்டு தண்டனையாக குறைத்தது.ஐகோர்ட் உறுதிசெய்த மரண தண்டனையை எதிர்த்து மூவரும் சுப்ரீம் கோர்ட்டில் அப்பீல் மனு தாக்கல் செய்தனர். இவர்களின் மனுக்களை நீதிபதிகள் சிங்வி மற்றும் சவுகான் ஆகியோர் அடங்கிய சுப்ரீம் கோர்ட் பெஞ்ச் விசாரித்தது. இந்த வழக்கில் நேற்று தீர்ப்பு வழங்கப்பட்டது. முனியப்பன், ராஜேந்திரன் மற்றும் நெடுஞ்செழியன் ஆகிய மூன்று பேருக்கும் விதிக்கப்பட்ட மரண தண்டனையை நீதிபதிகள் உறுதி செய்தனர்.

தீர்ப்பை வாசித்த நீதிபதி சவுகான் கூறியதாவது:பஸ்சை எரித்து, மாணவியர் மூன்று பேர் உயிரோடு எரிந்து சாக காரணமாக இருந்த குற்றவாளிகள் மூன்று பேரின் செயல் காட்டுமிராண்டித்தனமானது, வெறுக்கத்தக்கது மற்றும் சமூகத்திற்கு எதிரானது. இந்தக் கொடூரச் செயலைச் செய்தவர்களுக்கு மரண தண்டனை அளிப்பதே சரியாக இருக்கும். இது அரிதிலும், அரிதான வழக்கு என்பதால், இந்தத் தண்டனை பொறுத்தமானதே. மற்ற 25 பேரும் ஏற்கனவே சிறையில் அனுபவித்த தண்டனை போதும். தற்போது ஜாமீனில் உள்ள அவர்களுக்கான உத்தரவாத பத்திரங்களை விடுவிக்க வேண்டும்.மாணவியர் உயிரோடு எரிந்து சாகக் காரணமாக இருந்த மூன்று பேருக்கும் கீழ்கோர்ட் விதித்த மரண தண்டனை சரியானதே. அதில் தலையிட எந்தவிதமான முகாந்திரமும் இல்லை. இதுபோன்ற கொடூர குற்றங்களை யாரும் நியாயப்படுத்த முடியாது. மூன்று அப்பாவி இளம் மாணவியர் சாகவும், மற்ற 20 பேர் தீக்காயம் அடையவும் காரணமாக இருந்த செயல் இழிவானது மற்றும் மிருகத்தனமானது.இந்த வழக்கில் கீழ்கோர்ட் வழங்கிய தீர்ப்பை எதிர்த்து மேல் முறையீடு செய்தவர்கள், பஸ்சுக்கு தீ வைக்காமல் அமைதியான முறையில் போராட்டம் நடத்தியிருக்கலாம். அதற்கு அவர்களுக்கு உரிமையுள்ளது. அதை விடுத்து, தங்களின் விருப்பதற்கு ஏற்ப கோர்ட் தீர்ப்பு வழங்கவில்லை என்பதற்காக, மற்றவர்களுக்கு துயரம் மற்றும் பாதிப்பை ஏற்படுத்தும் செயல்களில் இறங்கி இருக்கக் கூடாது.விவசாய பல்கலைக்கழக மாணவியர் வந்த பஸ் எரிக்கப்பட்டது பரபரப்பான நகரின் மையப்பகுதியில் நடந்துள்ளது. தீ வைக்கப்பட்ட பஸ்சில் சிக்கிக் கொண்ட மாணவியர் உதவி கோரி கத்திய போது, அவர்களின் பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த மாணவர்களே உதவி செய்துள்ளனர். சில மாணவியரை காப்பாற்றியுள்ளனர். கடைக்காரர்கள், பத்திரிகையாளர்கள், போலீசார் என, பல தரப்பினர் அங்கிருந்தும் யாரும் மாணவியரைக் காப்பாற்ற முன்வரவில்லை.இதுபோன்ற சம்பவங்களின் போது, பொதுமக்கள் தங்களின் மனசாட்சிக்கு விரோதமாக செயல்பட்டாலும் கூட, போலீசார் அப்படி இருக்கக் கூடாது. அவர்கள் துரிதமாக செயல்பட்டிருக்க வேண்டும். ஆனால், அப்படி செய்யவில்லை. போலீசார் ஏன் செயல்படவில்லை என்பது பற்றி நிர்வாகத்தினரும் கேட்கவில்லை. சமூகத்தின் பாதுகாவலர்களான போலீசாரே அங்கு நடந்த கொடிய சம்பவத்தை வேடிக்கை பார்த்துள்ளனர். பஸ்சை எரியவிட்டு, அதில் மூன்று மாணவியர் தீயில் கருகி சாக காரணமாக இருந்ததன் மூலம், போலீசார் தங்களின் கடமையைச் செய்ய தவறியுள்ளனர். இது கண்டிக்கத்தக்கது. சம்பவ இடத்தில் இருந்த பொதுமக்களும், அதிகாரிகளும் தங்களின் கடமையைச் செய்திருந்தாலும், அப்பாவி மாணவியர் காப்பாற்றப்பட்டிருப்பர்.இவ்வாறு நீதிபதி சவுகான் கூறினார்.

இதையடுத்து, இனி தூக்கு தண்டனை பெற்ற மூவரும் மேல்முறையீடு செய்யலாம். அதற்குப் பின், ஜனாதிபதி கருணை மனு என்று நடைமுறைகள் உள்ளன.

உறவினர்கள் வெளியூர் பயணம்? தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட நெடு என்கிற நெடுமாறன், மாது என்கிற ரவீந்திரன் ஆகியோர் தர்மபுரி மதிக்கோன்பாளையம் காமாட்சியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர்கள். அவர்களின் மனைவி மற்றும் குழந்தைகள், நேற்று தீர்ப்பு வருவதையொட்டி, குடும்பத்தினருடன் வெளியூர் சென்றனர். தூக்கு தண்டனை பெற்ற முனியப்பன், தர்மபுரியை அடுத்த புளியம்பட்டியை சேர்ந்தவர். அவரது குடும்பத்தினரும் வெளியூர் சென்று விட்டனர். மூவரின் வீடுகளும் பூட்டியிருந்தன. அவர்கள் மூவரும் வேலூர் சிறையில் உள்ள மூவரையும் பார்க்கச் சென்றதாக சிலர் தெரிவித்தனர்.

தண்டனை பெற்றவர்கள் அ.தி.மு.க.,வில் வகித்த பதவிகள் : தர்மபுரி இலக்கியம்பட்டியில் வேளாண் கல்லூரி மாணவியர் வந்த பஸ் எரிப்பு வழக்கில் தண்டனை பெற்றவர்கள் வகித்த பதவிகள் விவரம் வருமாறு:தூக்கு தண்டனை உறுதி செய்யப்பட்ட குற்றவாளிகள் விவரம் மற்றும் சம்பவம் நடந்த போது, அ.தி.மு.க.,வில் வகித்த பதவிகள் விவரம்:முனியப்பன் காட்டம்பட்டி ஊராட்சி தலைவர் அ.தி.மு.க., கிளை நிர்வாகி. (வழக்கில் நான்காவது குற்றவாளி) நெடு என்கிற நெடுஞ்செழியன் தர்மபுரி மூன்றாவது வார்டு செயலர் (வழக்கில் இரண்டாவது குற்றவாளி), மாது என்கிற ரவீந்திரன் நகர அ.தி.மு.க., இளைஞரணி செயலர். (வழக்கில் மூன்றாவது குற்றவாளி).

இரு ஆண்டுகள் தண்டனை பெற்றவர்கள் விவரம் மற்றும் சம்பவம் நடந்த போது வகித்த பதவிகள்:
ராஜேந்திரன் (வழக்கில் முதல் குற்றவாளி) - ஒன்றிய செயலர் மற்றும் இலக்கியம்பட்டி ஊராட்சி தலைவர்.
முருகன் (எம்.ஜி.ஆர்., மன்ற நகர செயலர்), தாவூத் பாஷா (சிறுபான்மையினர் பிரிவு மாவட்ட இணை செயலர்).
வேலாயுதம் (அ.தி.மு.க., உறுப்பினர்), முத்து என்கிற அறிவழகன் (33வது வார்டு செயலர்), ரவி (ஒன்பதாவது வார்டு செயலர்), முருகன் (தர்மபுரி யூனியன் மாணவர் அணி செயலர்), ஏ.பி.முருகன் (அ.தி.மு.க., பிரமுகர்), வடிவேல் (முன்னாள் தர்மபுரி நகர செயலர்).
சம்பத் (பழைய தர்மபுரி முன்னாள் ஊராட்சி தலைவர்), நஞ்சன், பழனிசாமி, ராஜு (அ.தி.மு.க., உறுப்பினர்கள்), டெய்லர் மணி (தர்மபுரி ஒன்றிய எம்.ஜி.ஆர்., மன்ற தலைவர், இவர் வழக்கு நடக்கும்போதே இறந்து விட்டார்), ஆத்துமேடு மாது (கிளைச் செயலர்).
ராமன் (அண்ணா தொழிற்சங்க போக்குவரத்து பிரிவு உறுப்பினர்), டிராக்டர் சண்முகம், சந்திரன் (அ.தி.மு.க., உறுப்பினர்கள்), செல்லகுட்டி (அண்ணாநகர் கிளை செயலர்), காவேரி மேஸ்திரி, மணி (அ.தி.மு.க., உறுப்பினர்கள்), மாதையன் (கிளை செயலர்), செல்வம், மாதேஸ், செல்வராஜ், மாணிக்கம் (அ.தி.மு.க., உறுப்பினர்கள்), வீரமணி (மாணவர் அணி தலைவர், கடந்தாண்டு அ.தி.மு.க., கோஷ்டிப் பூசலில் கொலை செய்யப்பட்டவர்), உதயகுமார் (அ.தி.மு.க., உறுப்பினர்).

பஸ் எரிப்பு வழக்கில் தண்டனை பெற்றவர்கள் குடும்பத்தினருக்கு அ.தி.மு.க.,வினர் ஆறுதல் : தர்மபுரி பஸ் எரிப்பு வழக்கில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட அ.தி.மு.க., பிரமுகர்கள் நெடு என்கிற நெடுஞ்செழியன், மாது என்கிற ரவீந்திரன், முனியப்பன் ஆகியோர் மனைவி மற்றும் குழந்தைகள் நேற்று காலை தீர்ப்பு வெளியான போது, வீடுகளை பூட்டி விட்டு வெளியூர் சென்றனர்.தண்டனை உறுதி செய்யப்பட்ட தகவல் அறிந்து நேற்று மதியம் வெளியூர்களில் இருந்து திரும்பியவர்கள், வீடுகளில் சோகத்துடன் அமர்ந்திருந்தனர். அ.தி.மு.க., மாவட்ட செயலர் அன்பழகன், முன்னாள் ஒன்றிய செயலர் ராஜேந்திரன், முன்னாள் எம்.எல்.ஏ., பழனியப்பன், கட்சி நிர்வாகிகள் முனுசாமி, கோவிந்தசாமி, குமார், குப்புசாமி உள்ளிட்ட பலர், தூக்கு தண்டனை உறுதி செய்யப்பட்டவர்களின் வீடுகளுக்கு சென்று ஆறுதல் கூறினர்.நேற்று காலை தூக்கு தண்டனை உறுதி செய்யப்பட்ட தகவல் அறிந்ததும், தண்டனை பெற்றவர்களின் வீடுகளுக்கு பத்திரிகை நிருபர்கள், போட்டோகிராபர்கள் சென்றதால், பரபரப்பு ஏற்பட்டது.

அரசியல் கட்சிகளுக்கு பாடம் : மாணவியின் தந்தை பேட்டி:"சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு மன நிறைவை தருகிறது' என, இறந்த மாணவி காயத்ரியின் தந்தை வெங்கடேசன் கூறினார். தர்மபுரி பஸ் எரிப்பு சம்பவத்தில், கடலூர் காயத்ரி, சென்னை ஹேமலதா, நாமக்கல் கோகிலவாணி ஆகியோர் கருகி உயிரிழந்தனர். சுப்ரீம் கோர்ட் நேற்று வழங்கிய தீர்ப்பு குறித்து இறந்த மாணவி காயத்ரியின் தந்தை ஓய்வு பெற்ற கல்லூரி பேராசிரியர் வெங்கடேசன் கூறியதாவது:இது மனநிறைவான தீர்ப்பு. இனி ஒரு காலத்திலும் அரசியல் கட்சிகள் மூலம் இதுபோன்ற நிகழ்வுகள் நடக்கக்கூடாது. இந்த தீர்ப்பினால் சந்தோஷம் இல்லை. இறந்த என் மகள் இனி உயிருடன் வரப்போவது இல்லை. நான் இதய நோயாளி என்பதால், காலையில் இருந்தே மனஅழுத்தம் இருந்தது. 10 ஆண்டுகளாக வேதனையில் இருந்து மீளவில்லை. 10 ஆண்டுகளுக்கு முன், பஸ் எரிந்த சம்பவத்தை "டிவி'யில் நான் பார்க்கவில்லை. காலையில் "டிவி'யில் என் மகள் இறந்ததை காட்டிய போது மிகவும் வேதனையாக இருந்தது.சாகும்போது எப்படி துடித்திருப்பாளோ என்ற எண்ணம் மனதை வாட்டியது. மற்ற மாணவியரின் பெற்றோர்களுக்கும் 10 ஆண்டுகளாக இப்படித்தான் இருந்திருக்கும். இந்த தீர்ப்பு மற்றவர்களுக்கு ஒரு பாடம்.இவ்வாறு வெங்கடேசன் கூறினார்.

கருத்து கந்தசாமி: இல்லாதோரின் கடைசி புகலிடம் நீதிமன்றம் என்று கூறுவது மீண்டும் ஒருமுறை நிலைநிறுத்தப்பட்டிருக்கிறது. கோகிலவாணி, ஹேமலதா, காயத்ரி மூவரின் ஆத்மாவும் இனிமேலாவது சாந்தியடையட்டுமென்று கடவுளை பிரார்த்திப்போம்.

இந்த தீர்ப்புக்கு பிறகாவது நமது அரசியல் கட்சிகள் மாறினால் இவ்வளவு பெரிய இழப்பிற்கு பிறகாவது ஒரு விடியல் கிடைத்த நிம்மதி கிடைக்கும். நமது அரசியல்வாதிகள் திருந்துவார்களா?

லாஸ்ட் பன்ச்: அன்று இந்த மூன்று சிறுமிகளும் தீயில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த போது அவர்களை காப்பாற்ற முனையாமல் அதை வீடியோ படம் எடுத்துக் கொண்டிருந்த கும்பலுக்கு யார் தண்டனைக் கொடுப்பது?

மறக்காம வோட்டுப் போடுங்க

திங்கள், 30 ஆகஸ்ட், 2010

படிக்கின்ற காலத்துக்கு கல்விக் கடனுக்கு வட்டி இல்லை: ப.சிதம்பரம்

தினமணி செய்தி: சிவகங்கை, புதுக்கோட்டை மாவட்டங்களில் உள்ள வங்கிகள் பங்கேற்ற மாவட்ட ஆலோசனைக் குழு சிறப்பு முகாம், ஐ.ஓ.பி. காரைக்குடி மண்டலம் சார்பில் நடைபெற்றது. காரைக்குடி அழகப்பா மாதிரி மேல்நிலைப் பள்ளியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற கல்விக் கடன் சிறப்பு முகாமில் 643 மாணவ, மாணவிகளுக்கு | 10 கோடியே 41 லட்சத்து, 36 ஆயிரம் கல்விக் கடன் வழங்கி, அமைச்சர் ப.சிதம்பரம் பேசியது:

கடுமையான போட்டிகளின் மூலமாக உயர் படிப்பு முதல் ஆராய்ச்சிப் படிப்பு வரை பெறுவதுதான் கல்வி. அதற்கு மத்திய அரசு அனைத்து உதவிகளையும் செய்து வருகிறது.

கல்விக் கடன் வழங்கியதில் 2010-ம் ஆண்டு மார்ச் மாதம் 31-ந் தேதி முடிய நாடு முழுவதும் இருப்பில் உள்ள கல்விக் கடன்களைக் கணக்கில் கொண்டால், 19 லட்சத்து 41 ஆயிரத்து 882 பேருக்கு வழங்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் மட்டும் 5 லட்சத்து 63 ஆயிரத்து 429 பேர் கல்விக் கடன் பெற்றிருக்கிறார்கள். நாட்டின் கல்விக் கடன் பெறும் மாணவர்களில் நான்கில் ஒருவர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்.

எனது அரசியல் வாழ்க்கையில் மகிழ்ச்சியுடன் தீட்டப்பட்ட திட்டம் கல்விக் கடன் திட்டம். கல்விக் கடன் பெறுவோர் கல்விக் கடனை நிர்வகிக்கும் கனரா வங்கியை அணுகலாம்.

கல்விக் கடனுக்கான வட்டி விவரம் குறித்து நிதித் துறையிலிருந்து எனக்கு தகவல் அனுப்பியிருக்கிறார்கள். கல்விக் கடன் பெற்ற மாணவர்களுக்கு 2009, 2010-ம் ஆண்டிலிருந்து தரப்பட்டிருக்கும் கல்விக் கடனுக்கு படிக்கின்ற காலங்களில் வட்டி கிடையவே கிடையாது என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

மாணவர்கள், எதிலும் முதல் வரிசையில் இடம்பெற வேண்டும். வாய்ப்புகள் ஏராளமாக உள்ளன. வங்கித் துறையில் மட்டும் 1 லட்சம் பேர் பணியில் அமர்த்தப்படவிருக்கிறார்கள். அந்த வாய்ப்புகளைப் பெற வேண்டும் என்றார் ப.சிதம்பரம்.

கருத்து கந்தசாமி: கல்விக் கடனுக்கு வட்டி இல்லைங்கிறதெல்லாம் ஒரு புறம் இருக்கட்டும். இங்கே நிறையப் பேருக்கு கல்விக் கடனே கிடைக்கலியே. அதை கொஞ்சம் கவனிங்க சார்.

மறக்காம வோட்டுப் போடுங்க

எங்களாலும் கீழே இறங்கிப் பேச முடியும்-ஜெ.வுக்கு எச்சரிக்கை விடும் குஷ்பு

தட்ஸ்தமிழ் செய்தி: ஜெயலலிதாவுக்கு கோவை, திருச்சி கூட்டங்களில் மக்கள் அலைமோதியதாக சொல்கின்றனர். அது மக்கள் கூட்டம் அல்ல. கடந்த தேர்தலில் தோற்றதும் அவர் வெளியே வரவில்லை. ஓய்வு என்று அறைக்குள்ளேயே இருந்தார். நாலரை வருடங்களாக அவரை பார்க்க முடியவில்லை.

எனவே வேடிக்கை பார்க்க அவரது கட்சிகாரர்களே திரள்கிறார்கள். அவரது தோல்விக்கு கவுண்ட்டவுன் ஆரம்பமாகி விட்டது.

எங்கள் தலைவரை ஜெயலலிதா வம்புக்கு இழுப்பதும் அவரது குடும்பத்தினரை விமர்சிப்பதும் பண்பாடு ஆகாது. எங்களாலும் கீழே இறங்கி பேச முடியும். ஆனால் நாகரீகமாக பேசுங்கள் என்று சமீபத்தில் நடந்த பேச்சாளர் கூட்டத்தில் கலைஞர் கூறியுள்ளார்.

ஜெயலலிதா எங்கு வேண்டுமானாலும் கூட்டங்கள் நடத்தி பேசட்டும். நாங்கள் அவரது கூட்டங்களை வேடிக்கையாகத்தான் பார்க்கிறோம். அவற்றை போட்டியாக எடுத்துக் கொள்வது இல்லை. எங்களுக்கு அந்த கூட்டங்களால் எந்த பாதிப்பும் இல்லை என்று பேசியுள்ளார் குஷ்பு.

கருத்து கந்தசாமி: குஷ்பூ தான் எந்தளவுக்கு இறங்கி பேசுவாருன்னு நமக்கெல்லாம் தெரியுமே. குஷ்பூ மேடம் கலைஞர் தொலைக்காட்சியில ஜாக்பாட் நிகழ்ச்சியை ஆரம்பிக்கப் போறீங்களாமே?

மறக்காம வோட்டுப் போடுங்க

ஜெயலலிதாவுக்கு கொலை மிரட்டல்

இந்நேரம்.காம் செய்தி: சென்னை அருகே ஈக்காடுதாங்கலில் உள்ளது ஜெயா தொலைக்காட்சி அலுவலகம். இந்த அலுவலகத்திற்கு நேற்று (28ம் தேதி) மிரட்டல் கடிதம் ஒன்று வந்தது. காலாந்திரி என்ற இடத்திலிருந்து அறிவொளி மதி என்ற பெயரில் வந்துள்ள கடிதத்தில்,"மதுரை கூட்டத்தை ஜெயலலிதா ரத்து செய்ய வேண்டும்; இல்லையெனில் ஜெயலலிதாவும், அவரது கூட்டத்தினரும் மதுரையில் கொடூரமாக குண்டு வைத்து கொல்லப்படுவார்கள்; சாக மதுரைக்குப் போங்கள்; இதை நேரடியாக ஒளிபரப்ப ஜெயா "டிவி" மதுரைக்கு வரவும்.

அண்ணனை பகைக்காதே; மதுரைக்கு வராதே; ஜெயாவை ஒழித்துக் கட்டுவோம்" என குறிப்பிடப்பட்டுள்ளதாம்.

" கடந்த பல ஆண்டுகளில் இதுபோன்ற நிறைய கடிதங்கள் ஜெயா "டிவி" அலுவலகத்திற்கு வந்துள்ளன. அதுபற்றி போலீசுக்கு நாங்கள் புகார் கொடுத்துள்ளோம். அதைபோல, தற்போதைய மிரட்டல் கடிதத்தையும் தங்களின் கவனத்திற்கு அனுப்பியுள்ளோம்.எனவே, ஜெயலலிதாவுக்கும், ஜெயா தொலைக்காட்சி மற்றும் அதன் ஊழியர்களுக்கும் உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும் என, கேட்டுக் கொள்கிறோம்".இவ்வாறு ஜெயா தொலைக்காட்சி துணைத் தலைவர் ரங்கராஜன், டி.ஜி.பி. லத்திகா சரணுக்கு அனுப்பியுள்ள புகாரில் கூறியிருக்கிறார்.

கருத்து கந்தசாமி: தேர்தல் வரப்போகுதில்ல. இனி எல்லாம் வரத்தான் செய்யும்.

மறக்காம வோட்டுப் போடுங்க

ஞாயிறு, 29 ஆகஸ்ட், 2010

அடுத்தது காங்கிரஸ் ஆட்சி

                            
தமிழகத்தில் காங். ஆட்சி வர பாடுபட வேண்டும் - பிரணாப் முகர்ஜி: ‘‘தகவல் பெறும் உரிமை சட்டம், வேலை உறுதியளிப்பு சட்டம், கட்டாய கல்வி சட்டத்தை அமல்படுத்தினோம். விரைவில் உணவுக்கு உறுதி சட்டத்தை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மானிய விலையில் அனைத்து தரப்பு மக்களுக்கும் உணவு பொருள் கிடைக்க வழி வகை செய்யப்படும். தமிழகத்தில் கடந்த 40 ஆண்டுகளாக காங்கிரஸ் கட்சி ஆட்சியில் இல்லை. தமிழகத்தில் காங்கிரஸ் ஆட்சிக்கு வருவதற்கு தொண்டர்கள் பாடுபட வேண்டும்’’ என்றார்.

அமைச்சரவையில் பங்கு தரும் கூட்டணியில் இடம் பெறுவோம்-ப.சிதம்பரம்: ந்த மேடையில் பேசியவர்கள் தங்களின் ஆதகங்களை கொட்டிவிட்டு போனார்கள். இங்கு பலரும் பல கேள்விகளை கேட்டு விட்டு போனார்கள். இந்தியாவையே ஆளும் காங்கிரஸ் கட்சி, ஏன் தமிழத்தில் மட்டும் ஆட்சி செய்ய முடியாமல் போனது. அதே ஆதங்கம் எனக்கும் இருக்கிறது. 40 வருடங்களாக தமிழகத்தில் காங்கிரஸ் ஆட்சி வராதா என்ற கனவு எனக்குள்ளும் இருக்கிறது. என்ன, அதை நான் வெளியில் சொன்னதில்லை. என்னுடைய சிறு வயதில் எப்போது காங்கிரசில் இணைந்தேனோ, அப்போதிலிருந்தே இந்த ஆதங்கம் இருக்கிறது.

2004ல் நாம் போட்டியிட்ட போது 145 இடங்களே கைப்பற்றினோம். பாஜகவை விட 7 இடங்களே அதிகம் பெற்றிருந்தோம். கடந்த நாடாளுமன்றத் தேர்தலின்போது எல்லா ஊடகங்களும் அடித்துச் சொன்னது பாஜகதான் ஆட்சியை பிடிக்கும் என்று.

ஆனால் மக்களோ போன முறை 145 மார்க் நமக்கு போட்டார்கள். இந்தமுறை 206 மார்க் போட்டார்கள். இதிலிருந்து தெரிவது என்னவென்றால், நாம் ஒழுங்காக படித்து, தேர்வு எழுதியதாலேயே மக்கள் நாம் நன்றாக படிக்கிறோம் என்பதற்காக இந்த மார்க்கை போட்டார்கள்.

அதேபோல மார்க்கை நாம் தமிழகத்திலும் எடுக்க, நாம் நம்மை தயார் படுத்திக்கொள்ள வேண்டும். வரும் தேர்தலுக்குப் பிறகு, நிச்சயமாக ஆட்சி அதிகாரத்தில் நமக்கும் அதிகாரம் அளிக்கக் கூடிய கட்சியோடுதான் இருக்கப் போகிறோம். அதைத்தான் இங்குள்ள மக்களும் எதிர்பார்க்கிறார்கள். தமிழகத்தில் அடுத்த முறை அமையும் கூட்டணி நாம் அதிகாரம் செலுத்தக் கூடிய கூட்டணியாகவே இருக்க வேண்டும். இருக்கும் என்றார்.

கருத்து கந்தசாமி: வட நாட்டாருக்கு இருக்கிற தைரியம், நம்ம சிதம்பரம் சாருக்கு வர மாட்டேங்குதே. அடுத்த தேர்தலேயும் கூட்டணியிலே பங்குதான் கேட்ப்பாங்க போலேயிருக்கு.

மறக்காம வோட்டுப் போடுங்க

ஓட்டுப்பதிவு இயந்திரத்தை திருடிய கம்ப்யூட்டர் நிபுணருக்கு ஜாமீன்

தினமலர் செய்தி: ஐதராபாத்தை சேர்ந்த கம்ப்யூட்டர் நிபுணர் ஹரிபிரசாத். ஓட்டுப் பதிவு இயந்திரத்தை முறைகேடாக பயன்படுத்த முடியும் என, தனியார் "டிவி'ஒன்றில் ஒளிபரப்பான நிகழ்ச்சியில் விளக்கிக் காட்டினார்.

இதற்காக, மின்னணு ஓட்டுப் பதிவு இயந்திரத்தை அவர் பயன்படுத்தினார். இந்நிலையில், மும்பை கலெக்டர் அலுவலகத்தில் வைக்கப்படிருந்த ஓட்டுப் பதிவு இயந்திரத்தை திருடியதாகக் கூறி, ஹரி பிரசாத்தை மும்பை போலீசார் கடந்த வாரம் கைது செய்தனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

முன்னதாக, இவரது ஜாமீன் மனுவை மும்பை மாஜிஸ்திரேட் கோர்ட் நிராகரித்து இருந்தது. இந்நிலையில், ஹரி பிரசாத் சார்பில் மீண்டும் ஒரு ஜாமீன் மனு கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனுவை விசாரித்த மும்பை மாஜிஸ்திரேட் கோர்ட்,"ஓட்டுப் பதிவு இயந்திரம் திருடப்பட்டதாக கூறப்படும் விவகாரத்தில், ஹரி பிரசாத் மீது குற்றம் எதுவும் இருப்பதாகத் தெரியவில்லை. ஒரு வேளை அவர் திருடியதாக எடுத்துக் கொண்டாலும், தவறான நோக்கத்திற்காக அதை எடுக்கவில்லை. ஓட்டுப்பதிவு இயந்திரத்தில் முறைகேடு செய்ய முடியும் என்பதை காட்டுவதற்காகவே இவ்வாறு செய்துள்ளார் 'என கூறி, 20 ஆயிரம் ரொக்க ஜாமீனில் அவரை விடுவித்தது. மேலும், போலீஸ் ஸ்டேஷனில் வாரம்தோறும் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என்றும் அவருக்கு நிபந்தனை விதிக்கப்பட்டது.

கருத்து கந்தசாமி:  ஏங்க ஹரிபிரசாத் சார் அவங்க அடிமடியிலேயே கை வெச்சீங்கன்னா சும்மா இருப்பாங்களா. ஏதோ நீதிபதி கருணைக் காட்டியிக்காரு. நீதிபதி சார் அடிச்சீங்க பாருங்க சூப்பர் பன்ச்.

மறக்காம வோட்டுப் போடுங்க

சனி, 28 ஆகஸ்ட், 2010

அடுத்த தேர்தலில் திமுக ஆட்சிக்கு வருமா? ஸ்டாலின், விஜயகாந்த் ஜோசியம்

தேர்தலுக்குப் பிறகு திமுக ஆட்சி இல்லை: விஜயகாந்த் தே.மு.தி.க. நகரச் செயலர் திருமணம் திண்டிவனத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில் விஜயகாந்த் பேசியதாவது:

நான் தொண்டர்களை தெய்வமாக மதிக்கிறேன். குடும்பத்தில் ஆண் தவறு செய்தால் பெண் விட்டுக் கொடுக்க வேண்டும். பெண் தவறு செய்தால் ஆண் விட்டுக் கொடுக்க வேண்டும்.

எம்ஜிஆருக்குப் பின் ஆட்சிக்கு வந்தவர்கள் மக்களை ஏமாற்றுகின்றனர். இவர்கள் எந்தவகையில் மக்களுக்கு நன்மை செய்கிறார்கள்?

தமிழ்நாட்டில் 62 லட்சம் இளைஞர்கள் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து உள்ளனர். ஆனால் நாலரை லட்சம் இளைஞர்களுக்கு வேலை கொடுத்துள்ளதாக கருணாநிதி கூறுகிறார்.

திமுகவிடம் கூட்டணிக்காக என்றைக்காவது தூது விட்டுள்ளேனா? வரும் தேர்தலில் மக்கள் விரும்பும் நல்ல கட்சிகளுடன் கூட்டணி அமைப்பேன்.

டாக்டர் ராமதாஸின் கூட்டணி வேண்டாமென்றால் அவர் அறிமுகப்படுத்திய மஞ்சள் துண்டை பயன்படுத்துவது ஏன்? கலைஞரின் பொன் விழாவுக்குப் பின்புதான் அவரது மறுபக்கம் எனக்குத் தெரிந்தது.

இலவச வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டி, இலவச கேஸ் அடுப்பு, ஒரு ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசி வழங்கியுள்ளோம் என்றும், இப்போது விவசாயிகளுக்கு இலவச பம்புசெட் வழங்கப்படும் என்றும் முதல்வர் கருணாநிதி அறிவித்துள்ளார்.

மின்சாரமே இல்லை, அதனால்தான் இதைக் கொடுக்கிறார். ஓட்டுக்காக இலவசத் திட்டங்களை அவர் அடுத்தடுத்து அறிவிக்கிறார்.

திமுக, அதிமுக ஆகிய இரண்டு கட்சிகளும் ஊழல் கட்சிகள். 10 எம்.எல்.ஏ, 10 எம்.பி.க்களுக்காக கட்சி நடத்தவில்லை. ஏழைகளுக்காக கட்சி நடத்துகிறேன்.

ஆட்சியை என்னிடம் கொடுங்கள். நான் நல்ல ஆட்சியைத் தருவேன். அடுத்த தேர்தலில் திமுக ஆட்சியைப் பிடிக்காது என்றார்.


மீண்டும் தி.மு.க. ஆட்சி துணை முதல்வர் உறுதி: தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றி உள்ளதால் மீண்டும் 6வது முறையாக முதல்வர் கருணாநிதி தலைமையில்தான் ஆட்சி அமையும் என்று துணை முதல்வர் மு.க. ஸ்டாலின் பேசினார். திமுக அரசின் சாதனை விளக்கப் பொதுக்கூட்டம் நேற்று முன்தினம் இரவு ஈரோடு வஉசி பூங்காவில் நடந்தது.

இக்கூட்டத்தில் துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது: தேர்தலை மாத்திரமே மையமாக வைத்து செயல்படும் கட்சி திமுக அல்ல. மக்களுக்காக பாடுபடுவது திமுக.
திமுக அரசு ஐந்தாவது முறையாக ஆடசிக்கு வந்தபிறகு எத்தனையோ திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறது. நாலாண்டு முடிந்து ஐந்தாம் ஆண்டில் சென்று கொண்டிருக்கிறோம். இந்த 4 ஆண்டுகளில் 11 இடைத்தேர்தல்களையும் சந்தித்து இருக்கிறோம். அந்த 11 இடைத்தேர்தலிலும் திமுக அணி தான் வெற்றி பெற்றது என்ற வரலாற்றை உருவாக்கி உள்ளது. இதற்கு காரணம் முதல்வர் கருணாநிதி மீது மக்கள் வைத்திருக்கும் அசைக்கமுடியாத நம்பிக்கை தான்.

நாட்டில் எத்தனையோ கட்சிகள் இருக்கலாம். தேர்தல் நேரத்தில் தான் உறுதிமொழி தருவார்கள். அதன்பிறகு திரும்பிக்கூட பார்க்க மாட்டார்கள். ஆனால் கருணாநிதி தலைமையிலான ஆட்சியில் தேர்தல் வாக்குறுதியில் அறிவித்த திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. மீண்டும் 6 வது முறையாகவும் கருணாநிதி தலைமையில் தான் ஆட்சி அமையும். இவ்வாறு மு.க.ஸ்டாலின் பேசினார்.

கருத்து கந்தசாமி: சபாஷ்! சரியானப் போட்டி! ஹ ஹ ஹா (பி.எஸ்.வீரப்பா ஸ்டைலில் பேசி, சிரித்து பார்க்கவும்)

மறக்காம வோட்டுப் போடுங்க

வியாழன், 26 ஆகஸ்ட், 2010

எல்.எல்.எம். தேர்வில் பிட் அடித்து சிக்கிய 3 நீதிபதிகள்

தட்ஸ்தமிழ்.ஒன்இண்டியா செய்தி: ஆந்திராவில் எல்எல்எம் சட்டப் படிப்புக்கான தேர்வின்போது காப்பி அடித்து 3 நீதிபதிகள் சிக்கியுள்ளனர்.

ஆந்திர மாநிலம் வாராங்கல் மாவட்டத்தில் நீதிபதிகளின் பதவியுர்வுக்காக எல்.எல்.எம். சட்டப்படிப்பு தேர்வுகள் ஒரு கல்லூரி தேர்வு மையத்தில் நடைபெற்றது.

இதில் ஆனந்தபூரைச் சேர்ந்த கிஸ்தப்பா, அஜித்சிம்மராவ், ரெங்காரெட்டி ஆகிய நீதிபதிகளும், மற்றும் சில வக்கீல்களும் தேர்வு எழுதினர். தேர்வு தொடங்கிய சிறிது நேரத்தில் மூன்று நீதிபதிகளும் பிட் அடித்துக் கொண்டிருந்ததை தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி கண்டுபிடித்து அவர்களை கையும் களவுமாக பிடித்தார்.

அவர்கள் தேர்வு அறையிலிருந்து வெளியேற்றப்பட்டனர். அவர்கள் மீது மேல் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. அதேசமயம், 2 தேர்வுகளை எழுத தடை விதிக்கப்பட்டது.

கருத்து கந்தசாமி: தீர்ப்புக் கொடுக்கிற போது இதே மாதிரி காப்பியடிச்சு யார் தலையெழுத்தையாவுது மாத்திராதீங்க.

மறக்காம வோட்டுப் போடுங்க

பிறந்த நாள் விழா கொண்டாடுவதில் தகராறு

தினமணி செய்தி: கள்ளக்குறிச்சி, ஆக. 25 - தேமுதிக தலைவர் விஜயகாந்த் பிறந்த நாள் விழா கொண்டாடுவதில் இரு தரப்பினருக்கு இடையே ஏற்பட்ட தகராறில் இரு கார்கள் நொறுக்கப்பட்டன. இது தொடர்பாக 14 பேர் மீது சின்னசேலம் போலீஸார் புதன்கிழமை வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. 10 பேர் கைது செய்யப்பட்டனர்.

கருத்து கந்தசாமி: தேமுதிகன்னு ஒரு கட்சி இருக்கிறது மீடியாவுக்கும், மக்களுக்கம் ஞாபகம் இருக்க வேண்டாமா? அதுவுமில்லாமே திராவிடக் கட்சிகளோட கலாச்சாரம் இவங்களை மட்டும் விட்ருமா?

மறக்காம வோட்டுப் போடுங்க

புதன், 25 ஆகஸ்ட், 2010

போதை மருந்து பிரச்சினையில் எனக்கு எதிராக திட்டமிட்டு அவதூறுகள் பரப்பப்படுகிறது: நடிகை திரிஷா

நியூஇண்டியாநியூஸ் செய்தி: நடிகர், நடிகைகளுக்கும், முக்கிய பிரமுகர்களுக்கும் போதை பொருளை கடத்தி சப்ளை செய்த நைஜீரிய வாலிபரை ஆந்திர போலீசார் சமீபத்தில் கைது செய்தனர். அவரிடம் “கொகைன்” போதை பொருளை வாங்கிய தெலுங்கு நடிகர் ரவி தேஜாவின் இரண்டு தம்பிகளும் கைதானார்கள்.

நைஜீரிய வாலிபர் செல்போனில் திரிஷா செல் நம்பர் இருந்ததாகவும், அவருக்கும் போதை பொருள் கடத்தல் கும்பலுக்கும் தொடர்பு உள்ளது என்றும் தெலுங்கு டி.வி. சேனல்கள் செய்தி வெளியிட்டன. இதனை திரிஷா மறுத்தார்.

தன் மீதான அவதூறுகளை எதிர்த்து வழக்கு தொடர முடிவு செய்துள்ளார். இதற்காக வக்கீல்களுடன் ஆலோசனை நடத்தி வருகிறார். சட்ட நிபுணர்களுடன் விவாதித்து வருவதாகவும் விரைவில் கோர்ட்டுக்கு போவேன் என்றும் கூறினார்.

திரிஷாவின் நண்பரும் பேஷன் டிசைனருமான சிட்னி செல்டனுக்கும் போதை கடத்தல் கும்பலுடன் தொடர்பு இருப்பதாக செய்திகள் வந்துள்ளன. இதனை திரிஷா மறுத்தார். என் நண்பர் பெயரையும் தேவை இல்லாமல் இப்பிரச்சினையில் இழுக்கின்றனர் என்று வருத்தப்பட்டார்.

கருத்து கந்தசாமி: ரசிகர் அப்படின்னு சொல்லி செல் நம்பர் கேட்டிருப்பான். இவங்களும் ஆஹா, நமக்கு நைஜீரியாவுல கூட ரசிகர் இருக்காங்களான்னு புளகாங்கிதப் பட்டு செல் நம்பர் கொடுத்திருப்பாங்க. நம்ம திரையுலக மக்களோட பொது அறிவு தெரிஞ்ச விசயம் தானே.

மறக்காம வோட்டுப் போடுங்க

அணு உலை இழப்பீடு மசோதா அமெரிக்காவுக்கு சாதகமானது அல்ல: மன்மோகன்

வெப்துனியா செய்தி: அணு உலை விபத்து இழப்பீடு மசோதா அமெரிக்காவின் நலன்களை பாதுகாக்கக் கூடியது அல்ல என்று பிரதமர் மன்மோகன் சிங் தெரிவித்துள்ளார்.

அணு உலை இழப்பீடு மசோதா மக்களவையில் இன்று தாக்கல் செய்யப்பட்ட பின்னர் பேசுகையில் இதனை தெரிவித்த அவர், இந்த மசோதா அமெரிக்க நலன்களுக்கு சாதகமானது என்று கூறுவது உண்மையல்ல என்றும், வரலாறு அதற்கு தீர்ப்புக் கூறும் என்றும் கூறினார்.

அமெரிக்காவுக்கு சாதகமாக தாம் செயல்படுவதாக குற்றம் சாற்றப்படுவது இது முதல் முறையல்ல என்று சிங் மேலும் தெரிவித்தார்.

அணு சக்தி துறையில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த நமது பயணம், இந்த அணு உலை இழப்பீடு மசோதா மூலம் நிறைவடைந்துள்ளது.

இந்தியா தன்னிச்சையான அணு ஒழுங்குமுறையகத்தைக் கொண்டுள்ளதால்தான், இத்தனை ஆண்டுகளாக அணு விபத்து ஏதும் ஏற்படாதவாறு தடுப்பதில் வெற்றிக்கண்டுள்ளது.

ஆனாலும் நாம் இன்னமும் நமது அணு ஒழுங்குமுறையகத்தை பலப்படுத்த வேண்டும்.அணு பாதுகாப்புதான் நமது பிரதான அக்கறையாகும்.

எரிசக்தி துறையில் மாற்று வழிகளைக் காண இந்தியாவால் முடியாது என்பதால், இந்த மசோதாவை ஒருமித்த ஆதரவுடன் நிறைவேற்ற வேண்டும் உறுப்பினர்கள் அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன் என்று மன்மோகன் மேலும் பேசினார்.

கருத்து கந்தசாமி: அணு உலை விபத்து இழப்பீடு மசோதா அமெரிக்காவின் நலன்களை பாதுகாக்கக் கூடியது அல்ல அப்படின்னு சொல்றீங்க. அப்படின்னா நம்ம நாட்டு மக்களை காப்பாத்துற மாதிரி சட்டத் திருத்தம் செஞ்சுட்டு போக வேண்டியதுதானே?

மறக்காம வோட்டுப் போடுங்க

செவ்வாய், 24 ஆகஸ்ட், 2010

பெண்களிடம் வழிப்பறியில் ஈடுபட்ட ஆசிரியர் கைது!

தட்ஸ்தமிழ் செய்தி: ஓசூரில் பெண்களிடம் வழிப்பறியில் ஈடுபட்டு வந்த அரசுப் பள்ளி ஆசிரியர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பங்கனாப்பள்ளி அரசு பள்ளியில் ஆசிரியராக பணியாற்றும் மதன்மாறன் அப் பகுதியில் பெண்களிடம் வழிப்பறியில் ஈடுபட்டு வந்துள்ளார்.

பெண்களின் புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி மதன்மாறனை கைது செய்தனர்.

அவரிடமிருந்து 8 பவுன் நகைகள், பைக் பறிமுதல் செய்யப்பட்டன. சொகுசான வாழ்க்கை வாழ்வதற்காகவே வழிப்பறியில் ஈடுபட்டு வந்தாக அவர் வாக்குமூலம் அளித்துள்ளார்.

கருத்து கந்தசாமி: அவங்களுக்கு அரசாங்கம் சரியா சம்பளம் கொடுக்கறதில்லை. ஆறு மாசத்துக்கு ஒரு தடவை சம்பள உயர்வு கொடுக்கறதில்லை. டியூசன் மூலமா சம்பாதிக்க முடியறதில்லை. வேலைக்கு போகாமலே கையெழுத்து மட்டும் போட்டுட்டு சம்பளம் வாங்க முடியறதில்லை. அப்படியே போனாலும் அங்கே சைடு பிஸினெஸ் செஞ்சு சம்பாதிக்க முடியறதில்லை. அதனால தான் வழிப்பறி செய்துள்ளார்.

மறக்காம வோட்டுப் போடுங்க

சர்வதேச கோல்ப்தொடரில் பட்டம் வெல்லும் முதல் இந்தியர் அத்வால்

தினமலர் செய்தி: விண்தம் கோல்ப் சாம்பியன்ஷிப் தொடரில், இந்தியாவின் அர்ஜுன் அத்வால் கோப்பை வென்றார். இதன்மூலம் அமெரிக்காவில் நடந்த கோல்ப் தொடரில் முதன்முதலில் சாம்பியன் பட்டம் வென்ற இந்தியர் என்ற சாதனை படைத்தார்.

அமெரிக்காவின் கிரீன்ஸ்போரோவில், பி.ஜி.ஏ., விண்தம் கோல்ப் சாம்பியன்ஷிப் தொடர் நடந்தது. இதில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்தியாவின் அர்ஜுன் அத்வால், சாம்பியன் பட்டம் வென்று அசத்தினார். இதன்மூலம் அமெரிக்க மண்ணில் நடந்த கோல்ப் தொடரில் சாம்பியன் கோப்பை வென்ற முதல் இந்தியர் என்ற வரலாறு படைத்தார். இரண்டாவது இடத்தை அமெரிக்காவின் டேவிஸ் டாம்ஸ் பெற்றார்.

கருத்து கந்தசாமி: வாழ்த்துக்கள் அர்ஜுன் அத்வால். இந்தியாவின் பெயரை அமெரிக்காவில் நிலைநாட்டியிருக்கிறீர்கள். மீண்டும் வாழ்த்துக்கள்.

மறக்காம வோட்டுப் போடுங்க

திங்கள், 23 ஆகஸ்ட், 2010

எம்.பி.க்கள் சம்பளம் மேலும் 10 ஆயிரம் உயரும்

தினகரன் செய்தி: எம்.பி.க்களுக்கு மேலும் ரூ.10 ஆயிரம் சம்பள உயர்வு அறிவிக்கப்படும் எனத் தெரிகிறது.ஆறாவது ஊதியக் குழு பரிந்துரை அமல்படுத்தியபின் கேபினட் செயலரின் சம்பளம் ரூ.80 ஆயிரமாக உயர்ந்தது. எனவே, அவர்களை விட அதிகமாக எம்.பி.க்களுக்கு சம்பளம் வழங்க வேண்டும் என கோரிக்கை விடப்பட்டது. இதையடுத்து எம்.பி.க்கள் சம்பளம் கடந்த வாரம் 3 மடங்கு உயரத்தப்பட்டது. அடிப்படை சம்பளம் ரூ.50 ஆயிரமாகவும், அலுவலக செலவு மற்றும் தொகுதிக்கான படி ரூ.40 ஆயிரமாகவும், நாள் படி ரூ.2 ஆயிரமாகவும் உயர்த்தப்பட்டது. சம்பளம் மற்றும் படிகளைச் சேர்த்து ஒரு எம்.பி. ரூ.1.40 லட்சம் பெறுவார்.

இந்த சம்பள உயர்வு போதாது என ராஜ்ட்ரிய ஜனதா தளம், சமாஜ்வாடி மற்றும் பகுஜன் சமாஜ் உள்ளிட்ட எதிர்கட்சி உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர். பார்லிமென்ட் நடக்காத சமயத்தில், 10 கூட்டங்களில் எம்.பி.க்கள் கலந்து கொள்கின்றனர். இவர்களுக்கு நாள் ஒன்றுக்கு ரூ.2 ஆயிரம் படி வழங்க வேண்டும் என லாலு பிரசாத் யாதவ், முலாயம் சில் யாதவ் ஆகியோர் கூறினர். சம்பளத்தை உயர்த்துவது பற்றி பரிசீலிக்கப்படும் என அரசு அறிவித்தது.இது குறித்து இன்று அமைச்சரவை ஆலோசனை நடத்தி, எம்.பி.க்களின் சம்பளத்தை மேலும் ரூ.10 ஆயிரம் உயர்த்தும் என கூறப்படுகிறது.

கருத்து கந்தசாமி: ஆமாமா, நம்மளுக்காக எவ்வளவு கஷ்டப்படுறாங்க. பாரளுமன்ற நடவடிக்கைகளைப் பார்த்தாலே தெரியுதே. குழாயடிச் சண்டை பரவாயில்லைன்னு ஆக்கிட்டு இருக்காங்க, வாழ்க இந்திய ஜனநாயகம்.

மறக்காம வோட்டுப் போடுங்க

வெள்ளி, 20 ஆகஸ்ட், 2010

ராஜீவ் பேச்சைக் கேட்டிருந்தால் ஈழத் தமிழர்கள் அழிந்திருக்க மாட்டார்கள்-கார்த்தி சொல்கிறார்

தட்ஸ்தமிழ் செய்தி: ராஜீவ்காந்தி பேச்சை கேட்டிருந்தால், இலங்கை தமிழர்கள் இவ்வளவு பேர் அழிந்திருக்க மாட்டார்கள். இலங்கையில் 18 ஆண்டுகளுக்கு முன்னரே அமைதி திரும்பி இருக்கும் என்று பேசியுள்ளார் தமிழக காங்கிரஸ் கட்சியின் நம்பர் டூ கோஷ்டியின் தலைவரான கார்த்தி சிதம்பரம்.

கருத்து கந்தசாமி: காங்ரஸில் பதவி வாங்கனும், வாங்கின பதவியை தக்க வைக்கனும்னா ராஜீவ், சோனியா இல்லாட்டி இவங்க குடும்பத்தார் யாருக்காவது ஜால்ரா தட்டனும். அவரு என்ன பன்னுவாரு பாவம். அவங்கப்பா நிலமை வேறே நக்ஸ்லைட் பிரச்சனையினாலே சரியில்லாமே இருக்குது. அதான் பலமா தட்டுராறு.

மறக்காம வோட்டுப் போடுங்க

புதன், 18 ஆகஸ்ட், 2010

அணு பாதுகாப்பு மசோதாவை நிறைவேற்றவே மோடி விடுவிப்பு-பாஜக, காங். மீது லாலு பாயச்ச்சல்

தட்ஸ் தமிழ்.ஒன் இண்டியா செய்தி: நாடாளுமன்றத்தில் அணு உலை விபத்து தடுப்பு மசோதாவை சிக்கலின்றி நிறைவேற்ற பாஜகவின் உதவியை நாடியுள்ளது காங்கிரஸ். இதற்காகவே நரேந்திர மோடிக்கு சோராபுதீன் வழக்கில் தொடர்பில்லை என்று சிபிஐ நற்சான்றிதழ் கொடுத்துள்ளது என குற்றம் சாட்டியுள்ளார் ராஷ்டிரிய ஜனதாதள தலைவர் லாலு பிரசாத் யாதவ்.

கருத்து கந்தசாமி: பாவம், லாலுவுக்கு செலக்டிவ் அம்னீஷியா இருக்கும் போலிருக்குது. மாட்டுத் தீவன வழக்குலேருந்து இவரு வெளியிலே வந்ததை வசதியா மறந்துட்டாரே.

மறக்காம வோட்டுப் போடுங்க

திருப்பதி கோயில் தரிசன டிக்கெட் விற்பனையில் முறைகேடு

தினமணி செய்தி: திருப்பதி கோயிலில் தரிசன டிக்கெட் விற்பனையில் முறைகேடுகள் நடைபெற்றுள்ளதாக ஊழல் கண்காணிப்புத்துறை ஆந்திர அரசிடம் அறிக்கை சமர்ப்பித்துள்ளது.

அந்த அறிக்கையின் விபரம் இன்னும் அதிகாரப் பூர்வமாக வெளியிடப் படவில்லை. எனினும், பல கோடி ரூபாய் முறைகேடு நடைபெற்றுள்ளதாகவும், இதில் தேவஸ்தான நிர்வாகிகளின் உதவியாளர்களுக்கு தொடர்பு இருப்பதாகவும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.

ஏற்கெனவே, திருப்பதி கோயில் நகைகள் தொடர்பாக சர்ச்சை எழுந்துள்ள நிலையில், தற்போது டிக்கெட் விற்பனையில் முறைகேடு நடைபெற்றுள்ளதாக தகவல் வெளியாகியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கருத்து கந்தசாமி:
இந்தியாவில் எங்கும் ஊழல் மயம்.
அரசாங்க அலுவலகத்தில் ஊழல்
அரசாங்க ஆஸ்பத்திரியில் ஊழல்
அரசாங்க வேலை வேண்டுமென்றால் ஊழல்
அதில் மாற்றல் வேண்டுமென்றால் ஊழல்
சுடுகாட்டு கொட்டகையில் ஊழல்
மின் வாரியத்தில் ஊழல்
அதிலே ஊழல்
இதிலே ஊழல்
அதிலே இது ஒரு ஊழல்


மறக்காம வோட்டுப் போடுங்க

திங்கள், 16 ஆகஸ்ட், 2010

காமன்வெல்த் குறித்து எதிர்மறையான செய்தியைத் தவிர்க்க வேண்டும்-ஏ.ஆர்.ரஹ்மான் கோரிக்கை

தட்ஸ் தமிழ் ஒன் இண்டியா செய்தி: காமன்வெல்த் போட்டிகள் குறித்து எதிர்மறையான செய்திகளை மீடியாக்கள் தவிர்க்க வேண்டும. உண்மை அல்ல என்று தெரியும் செய்திகளைப் போடுவதை தவிர்க்க வேண்டும் என இசைப் புயல் ஏ.ஆர்.ரஹ்மான் கோரிக்கை விடுத்துள்ளார்.

காமன்வெல்த் போட்டிக்கான மைய நோக்குப் பாடல் இன்று அறிமுகம் செய்யப்பட்டது. இதில் கலந்து கொண்டு ரஹ்மான் பேசுகையில், காமன்வெல்த் போட்டிகள் குறித்து எதிர்மறையான, மோசமான செய்திகள் தொடர்ந்து வெளியாகின்றன. ஆனால் அவை அனைத்தும் உண்மை அல்ல என்று நான் நம்புகிறேன்.

நாட்டிற்குப் பெருமை சேர்க்கும் ஒரு விஷயம் காமன்வெல்த் போட்டி. எனவே அதுகுறித்து தவறான, அவதூறான செய்தியை வெளியிட்டால் அது நாட்டுக்குத்தான் அவப் பெயரைத் தேடித் தரும்.

எனவே மீடியாக்கள் எதிர்மறையான செய்திகளை வெளியிடுவதைத் தவிர்க்க வேண்டும். இந்தியாவின் புகழை சீர்குலைக்கும் வகையில் காமன்வெல்த் போட்டிகள் குறித்து மீடியாக்களில் செய்தி வருவது எனக்கு வேதனை தருகிறது.

கருத்து கந்தசாமி:
இசைப்புயல் இசையமைக்கிறத மட்டும்தான் கவனமா செய்வாரு போலிருக்குது. அறிவுரை சொல்ல வேண்டியவங்களுக்கு சொல்லாமே மீடியாவ சொல்றாரு. அரசியல்வாதிங்க, அதிகாரிங்க என்ன பன்னினாலும் நாட்டு பேரு கெட்டு போயிருமின்னு விட்ரனுமாட்டம் இருக்குது. முதலே செத்துப்போனா அவங்களை விமர்சிக்க கூடாது, அவங்க நல்லவங்க ஆகிட்டாங்கன்னு சொல்லிட்டாங்க. இப்போ இசைப்புயல் புதுசா ஒன்னு எடுத்துக்கொடுத்திருக்காரு. வாழ்க இந்திய நாடு.

மறக்காம வோட்டுப் போடுங்க

தமிழை விரும்பும் கன்னட நடிகை

தமிழ் வெப் துனியா செய்தி: ஐந்தடி உயரத்தில் அசத்தல் அழகுடன் இருக்கிறார் ஹசிகா. ‘மலர் மேல்நிலைப்பள்ளி’ படத்தின் ஹீரோயின்.

படிக்கும்போதே மாடலிங், விளம்பரம் என கலக்கிக் கொண்டிருந்த ஹசிகாவை நடிக்க வைக்க கன்னட, தெலுங்குப் படவுலகங்கள் ரொம்பவே முயன்றன. ஆனால் அம்மணி விரும்பியது தமிழை. தமிழில்தான் எனது சினிமா பிரவேசம் இருக்க வேண்டும் என்று காத்திருந்து கதாநாயகியானேன் என சீரியசாக பேசுகிறார் ஹசிகா.

கருத்து கந்தசாமி:  ஆகா தமிழரும், தமிழ் திரையுலகமும் பிறவிப்பயனை அடைந்தனர்.

மறக்காம வோட்டுப் போடுங்க

ஞாயிறு, 15 ஆகஸ்ட், 2010

அனைவரும் மூச்சுப் பயிற்சி செய்ய வேண்டும்-கருணாநிதி அறிவுரை

தட்ஸ்தமிழ் செய்தி: எல்லோரும் மூச்சு பயிற்சி செய்ய வேண்டும். நானும் மூச்சு பயிற்சி செய்கிறேன். எனக்கு தேசிகாச்சாரியார் இதனை கற்றுக்கொடுத்தார். அவர் சூரிய வணக்கம் உள்ளிட்டவைகளை வட மொழியில் சொல்லிக்கொடுத்தார். நான் தமிழில்தான் இதனை சொல்லி செய்கிறேன். மனிதர் உள்ளே கடவுள் இருக்கிறார் அப்படியானால், மனிதர் உள்ளத்தில்தான் கடவுள் இருக்கிறார். சித்தர் சிவபாக்கியம் நட்ட கல்லும் பேசுமோ என்று நாத்திகம் பேசும்படியான வரியை கூறி அடுத்த வரியில் நாதன் உள் இருக்கையிலே என்கிறார் என்றார் கருணாநிதி.

கருத்து கந்தசாமி: தலைவரே லேட்டா சொன்னாலும் லேட்டஸ்டா சொல்லியிருகீங்க

மறக்காம வோட்டுப் போடுங்க

சனி, 14 ஆகஸ்ட், 2010

மலையாளத்தை உச்சரிக்க முடியாததால் வாய்ப்பிழந்த நடிகை பூனம்

thatstamil.oneindia.in செய்தி: நெஞ்சிருக்கும் வரை படத்தில் நடித்தவர் பூனம் கெளர். இப்போது மலையாளத்தில் திரில்லர் என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்துக்காக கேரளாவுக்கு ஷூட்டிங் போனவருக்கு வசனத்தை உச்சரிக்க பெரும் சிரமமாக இருந்துள்ளது.

படத்தின் ஹீரோவான பிருத்விராஜும், இயக்குநரும் உட்கார்ந்து வசனத்தைக் கூறி உச்சரிப்புப் பயிற்சி கொடுத்துள்ளனர். ஆனாலம் பூனம் வாயிலிருந்து மலையாளம் சுத்தமாக வரவில்லையாம். சொல்லி சொல்லி சோர்ந்து போன ஹீரோவும், இயக்குநரும் கூடிப் பேசி தயாரிப்பாளரிடம் போய் பூனத்தால் பலன் இல்லை என்று கூறியுள்ளனர். இதையடுத்து பூனம் நீக்கப்பட்டு விட்டாராம்.

கருத்து கந்தசாமி:படத்தின் ஹீரோவான பிருத்விராஜும், இயக்குநரும் உட்கார்ந்து வசனத்தைக் கூறி உச்சரிப்புப் பயிற்சி கொடுத்துள்ளனர். ஆனாலம் பூனம் வாயிலிருந்து மலையாளம் சுத்தமாக வரவில்லையாம். சொல்லி சொல்லி சோர்ந்து போன ஹீரோவும், இயக்குநரும் கூடிப் பேசி தயாரிப்பாளரிடம் போய் பூனத்தால் பலன் இல்லை என்று கூறியுள்ளனர். இதையடுத்து பூனம் நீக்கப்பட்டு விட்டாராம்.

கருத்து கந்தசாமி: அவங்க மொழிப்பற்று அப்படி இருக்குது. நம்ம தமிழ்நாட்டுல என்ன நடக்குது. அழகா, கொப்பும் கொலையுமா, மப்பும் மந்தாரமுமா இருந்துட்டா போதும். தமிழ் பேசாம இருக்கிறது என்ன தமிழ் பேசறேன்னு தமிழ் கொலை பன்றதையும் பொறுத்துக்குவாங்க.

மறக்காம வோட்டுப் போடுங்க

சூப்பர் பக் பாக்டீரியா : இங்கிலாந்துக்கு இந்தியா கண்டனம்

தினமலர் செய்தி: சூப்பர் பக் பாக்டீரியாவை இந்தியாவுடன் தொடர்புபடுத்திப்பேசுவது முட்டாள்தனமானது என்று பிரிட்டிஷ் விஞ்ஞானிகளுக்கு மத்திய அரசு காட்டமாக பதிலளித்துள்ளது.

எந்தவித மருந்துகளுக்கும் கட்டுப்படாத சூப்பர் பக் என பெயரிடப்பட்டுள்ள பாக்டீரியா குறித்து கடந்த சில நாட்களுக்கு முன் இங்கிலாந்து விஞ்ஞானிகள் கண்டுபிடித்தனர். மேலும் இவ்வகை பாக்டீரியாக்கள் இந்தியாவிலிருந்து இங்கிலாந்திற்கு பரவியிருக்கலாம் என்றும் கூறினர். விஞ்ஞானிகளின் இந்த கருத்தை வன்மையாக மறுத்துள்ள, மத்திய சுகாதாரத்துறை ஆராய்ச்சி நிறுவன செயலர் கடோச், இச்செய்தி தமக்கு மிகவும் வியப்பளிப்பதாகவும், இத்தகைய பாக்டீரியாக்கள் இந்தியாவிலிருந்து பரவியவை என இங்கிலாந்து விஞ்ஞானிகள் கூறுவது மிகவும் முட்டாள்தனமானது என்றும் தெரிவித்தார்.

கருத்து கந்தசாமி: இதுக்காச்சும் கண்டனம் தெரிவிச்சிருக்காங்களே. மேலைநாட்டு அரசாங்கங்களுக்கு அவர்கள் நாட்டினர் மருத்துவ தேவைகளுக்காக இந்தியாவுக்கு அதிகளவில் வருவதால் ஏற்படும் வயிற்றிரிச்சலால் இப்படியெல்லாம் கதைக் கட்டி விடுகிறார்கள் போலுள்ளது.

மறக்காம வோட்டுப் போடுங்க

வெள்ளி, 13 ஆகஸ்ட், 2010

தமிழக மீனவர்கள் தாக்கப்படும் விவகாரம்

இந்நேரம் செய்தி: கடலில் சர்வதேச எல்லை தாண்டி மீன் பிடிக்க தமிழக மீனவர்கள் செல்லக் கூடாது. அப்படிச் சென்றால் இலங்கை கடற்படை தாக்குதல் நடத்தத்தான் செய்யும். இந்த தாக்குதல்களிலிருந்து தமிழக மீனவர்களை இந்தியாவால் காப்பாற்ற முடியாது. கச்சத்தீவை திரும்பப் பெறுவதற்கு இடமில்லை என்று வெளியுறவு அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா கூறியுள்ளார்.

கருத்து கந்தசாமி:
பாகிஸ்தான் கடற்பகுதியில மீன் பிடிக்க போய் அங்கே சிறைப்பட்டு கிடக்கும் வட மாநிலத்தான் விவகாரத்தில் இப்படி சொல்வாரா தமிழன்னா உங்களுக்கெல்லாம் இளிச்சவாயனா போயிட்டான். காங்ரஸை ஓட்டு போட்டு ஜெயிக்க வெச்ச தமிழா உனக்கு இதுவும் வேண்டும், இன்னமும் வேண்டும்.


4தமிழ்மீடியா செய்தி: கணிமொழி உரை - இலங்கை மந்திரியாக இருந்தாலும் சரி, அந்த நாட்டின் செய்தி தொடர்பாளராக இருந்தாலும் சரி, மீனவர்கள் தாக்கப்படுவது பற்றி குற்றம்சாட்டினால் அது இந்திய இலங்கைக்கு எதிரான நல்லெண்ணத்தை குலைக்கும் சதி என்கிறார்கள். இதே கதையைத்தான் மீண்டும்,மீண்டும் சொல்கிறார்கள். நாம் தெரிந்து கொள்ள விரும்புவது என்னவென்றால், நமது மீனவர்களை இலங்கை கடற்படையினர் தாக்கவில்லையென்றால், யார் அதைச்செய்கிறார்கள்?

நம் மீனவர்கள் அவர்களுக்குள்ளாகவே சுட்டுக் கொள்கிறார்களா? நம்மிடம் செயற்கை கோள் இருக்கிறது. அதை வைத்து தமிழக மீனவர்களை சுட்டுக் கொல்பவர்களை கண்டுபிடிக்க வேண்டும்" என அவர் தனது உரையில் குறிப்பிட்டதாக அறியப்படுகிறது.

கருத்து கந்தசாமி:
ஆகா என்ன ஒரு அரிய கண்டுபிடிப்பு. இலங்கை அதிகாரிகள் எல்லாம் சத்திய சந்தர்கள். செயற்கைக் கோள் வைத்து கண்டுப்பிடிக்க வேண்டியது தான்.


தினமணி செய்தி: தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் தாக்குவது தொடர்பாக மாநிலங்களவையில் புதன்கிழமை திமுக-அதிமுக இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

கருத்து கந்தசாமி:
அடப்பாவிங்களா அவனவன் அங்கே செத்துக்கிட்டு இருக்கிறான். இதுக்குமா சண்டை போடுவீங்க. உங்களையெல்லாம் ஓட்டுப் போட்டு நாடாளுமன்றத்துக்கு அனுப்புனாரே திருவாளர் இளிச்சவாயன் அவருக்கு தேவைதான்.


வெப்துனியா செய்தி: சிறிலங்க கடற்படையினரால் தொடர்ந்து தாக்கப்படும் தமிழக மீனவர்களை பாதுகாக்க முடியாது என்று பகிரங்கமாகக் கூறியுள்ள அயலுறவு அமைச்சர் எஸ்.எம். கிருஷ்ணாவை அமைச்சர் பதவியில் இருந்து நீக்குமாறு பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் பழ.நெடுமாறன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

கருத்து கந்தசாமி:
அய்யா நீங்க ஒருத்தராவது குரல் கொடுத்தீங்களே. தமிழினத்தலைவெரெல்லாம் தமிழருக்காக நிறைய உழைச்சுட்டு தூங்கிட்டிருக்காங்க போலிருக்குது.

மறக்காம வோட்டுப் போடுங்க

புதன், 11 ஆகஸ்ட், 2010

எந்திரன்: போலி பத்திரம் தயாரித்த ஷங்கர் மேனேஜர் கைது!

thatstamil.oneindia.in செய்தி: உலகமே ஆவலுடன் எதிர்ப்பார்த்துக் கொண்டிருக்கும் சூப்பர் ஸ்டார் ரஜினியின் மெகா திரைப்படமான எந்திரன் தெலுங்கு உரிமையை போலிப் பத்திரம் மூலம் விற்க முயன்ற இயக்குநர் ஷங்கரின் புரொடக்ஷன் மேனேஜர் கைது செய்யப்பட்டார். இந்தச் சம்பவம் தென்னிந்திய திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கருத்து கந்தசாமி: சன் பிக்சர்சா கொக்கா? படத்து நல்ல விளம்பரம் கிடைச்சிருச்சு

மறக்காம வோட்டுப் போடுங்க

எந்த கட்சியுடன் கூட்டணி? ராமதாஸ் பேட்டி

தினகரன் செய்தி: பாமக நிர்வாக குழு கூட்டம், சென்னையில் நேற்று நடந்தது. நிறுவனர் ராமதாஸ், தலைவர் ஜி.கே.மணி, இளைஞரணி தலைவர் அன்புமணி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். கூட்டம் முடிந்த பிறகு ராமதாஸ் அளித்த பேட்டி: சட்டப்பேரவை தேர்தல் குறித்து நிர்வாக குழுவில் விவாதிக்கப்பட்டது. கூட்டணி குறித்து பேசி முடிவெடுக்க எனக்கு அதிகாரம் அளிக்கப்பட்டது. காங்கிரஸ் தலைமையில் கூட்டணி அமைக்க வேண்டும் என்று காங்கிரஸில் உள்ள வயதான தலைவர்கள் பேசி வருகின்றனர். அதைத்தான் நான் கூறினேன். அரசியலில் நிரந்தர எதிரியும் கிடையாது, நிரந்தர நண்பனும் கிடையாது. கூட்டணி குறித்து எதுவும் நடக்கலாம்.

கருத்து கந்தசாமி: இது தெரியாதா? அன்புமணி ராமதாஸ் அவர்களுக்கு மாநிலத்திலோ அல்லது ராஜ்யசபா எம்பியாக்கி மத்தியிலோ மந்திரி பதவி தருவதாக யார் சொல்கிறார்களோ அவர்களோடுதான் கூட்டணி.

மறக்காம வோட்டுப் போடுங்க

செவ்வாய், 10 ஆகஸ்ட், 2010

நடிகர் ஆர்யா மீது தயாரிப்பாளர் புகார்

விடுப்பு.காம் செய்தி: மதராசப்பட்டினம் பட வெற்றியின் உற்சாகத்தில் நடிகர் ஆர்யா உள்ளார். ஆனால் அவர் மீது தயாரிப்பாளர் ஒருவர் புகார் கொடுத்துள்ளார்.

மீடியா ஒன் குளோபல் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரிக்கும் படம் சிக்குபுக்கு. இதில் ஆர்யா, ஸ்ரேயா நடிக்கிறார்கள். மணிகண்டன் இயக்குகிறார். படப்பிடிப்பு முடிந்து பின்னணி இசை சேர்ப்பு பணி நடந்து வருகிறது. இந் நிலையில் தயாரிப்பு நிறுவனம் ஆர்யா மீது தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் கொடுத்துள்ளது.

அதில், ஆர்யா சிக்குபுக்கு படத்துக்கு, முறையாக டப்பிங் பேச வர மறுக்கிறார். இருமுறை அவருக்காக ரிக்கார்டிங் தியேட்டர் பதிவு செய்து வைத்திருந்தும் பேச வரவில்லை. இதனால் எங்களுக்கு பல லட்சம் ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளது என்று கூறப்பட்டுள்ளது.

கருத்து கந்தசாமி: ஒரு படம் ஓடினதுக்கே இப்படியா. இன்னும் படமெல்லாம் நல்லா ஓட ஆரம்பிச்சா? வருங்கால முதல்வர் உருவாகி வருகிறார் போல.

மறக்காம வோட்டுப் போடுங்க

வேலைநிறுத்தத்தில் பங்கேற்கத் தடை விதிப்பதா? டாஸ்மாக் ஊழியர்கள் திடீர் போராட்டம்

தினமணி செய்தி: வேலைநிறுத்தத்தில் பங்கேற்கக் கூடாது என டாஸ்மாக் ஊழியர்களிடம் மிரட்டி கையெழுத்து வாங்கப்படுவதாகப் புகார் தெரிவித்து, திருவண்ணாமலை அருகே திண்டிவனம் சாலையில் உள்ள மாவட்ட டாஸ்மாக் மேலாளர் அலுவலகம் முன் டாஸ்மாக் ஊழியர்கள் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கருத்து கந்தசாமி: அரசாங்க ஊழியர்கள் வேலை நிறுத்தம் செய்தால் அவர்கள் கேட்டதற்கு மேலேயே கொடுக்கிறார்கள். டாஸ்மாக் ஊழியர்கள் மட்டும் என்ன பாவம் செய்தார்கள்? ஏதோ மர்மமாக இருக்குதே, உங்களுக்கு தெரிந்தால் ஒரு பின்னூட்டம் போடுங்கள்.

மறக்காம வோட்டுப் போடுங்க

ஞாயிறு, 8 ஆகஸ்ட், 2010

எந்த கட்சியுடனும் கூட்டணி, எதுவும் நடக்கலாம் ராமதாஸ் பேட்டி

தினகரன் செய்தி: எந்த கூட்டணியில் பாமக உள்ளது?
அதிமுக கூட்டணியில் இருந்து நாங்களாக வெளியேறினோம். பென்னாகரம் தொகுதி இடைத்தேர்தலில் எங்களை ஆதரிப்பதாகவும், ராஜ்யசபா சீட் தருவதாகவும் அதிமுக கூறியது. இதை நாங்கள் ஏற்கவில்லை. திமுக கூட்டணியில் பாமகவை சேர்ப்பது தொடர்பாக திமுக நிர்வாகக்குழுவில் தீர்மானம் நிறைவே ற்றப்பட்டது. எங்கள் கட்சியின் ஐவர் குழு கருணாநிதியை சந்தித்தது. மீண்டும் பேசுவதாக முதல்வர் கூறியுள்ளார். மீண்டும் பேச்சுவார்த்தைக்கு அழைத்தால் ஐவர் குழுவை அனுப்பி பேசுவோம். தற்போது நாங்கள் எந்த கூட்டணியிலும் இல்லை.பாமக தனித்தே தேர்தலை சந்திக்குமா? பாமக தலைமையில் சமூகநீதி கூட்டணி அமைக்க வாய்ப்பு உள்ளது. பாமக தனித்துப் போட்டியிட்டாலும் 20 தொகுதிகளுக்கும் மேல் வெற்றி பெறும்.

தேமுதிக இருக்கும் கூட்டணியில் பாமக இருக்காது என கூறப்படுகிறதே?
அப்படி எல்லாம் கூற முடியாது. அரசியலில் எதுவும் நடக்கலாம். நிரந்தர நண்பர்களும் இல்லை, நிரந்தர எதிரிகளும் இல்லை.

காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி சேருவீர்களா?
1967ல் தமிழகத்தில் ஆட்சியை இழந்த காங்கிரஸ் தொடர்ந்து 42 ஆண்டுகளாகியும் ஆட்சிக்கு வரமுடியவில்லை. இதனால், காங்கிரஸ் தலைமையிலும் தனியாக கூட்டணி அமையலாம். அதில் பாமகவும் இடம் பெறலாம்.

அதிமுக முகாமிலிருந்து அழைப்பு வந்தால்?
அங்கிருந்தும் அழைப்பு வருகிறது. அதையெல்லாம் சொல்ல முடியுமா? அரசியலில் எதுவும் நடைபெறலாம்.

கருத்து கந்தசாமி: அன்புமணி ராமதாஸ் கேபினெட் மந்திரியாக அரசியலில் எதுவும் செய்யலாம். அதையெல்லாம் முழுதாக சொல்ல முடியுமா?

மறக்காம வோட்டுப் போடுங்க