ஞாயிறு, 29 ஆகஸ்ட், 2010

அடுத்தது காங்கிரஸ் ஆட்சி

                            
தமிழகத்தில் காங். ஆட்சி வர பாடுபட வேண்டும் - பிரணாப் முகர்ஜி: ‘‘தகவல் பெறும் உரிமை சட்டம், வேலை உறுதியளிப்பு சட்டம், கட்டாய கல்வி சட்டத்தை அமல்படுத்தினோம். விரைவில் உணவுக்கு உறுதி சட்டத்தை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மானிய விலையில் அனைத்து தரப்பு மக்களுக்கும் உணவு பொருள் கிடைக்க வழி வகை செய்யப்படும். தமிழகத்தில் கடந்த 40 ஆண்டுகளாக காங்கிரஸ் கட்சி ஆட்சியில் இல்லை. தமிழகத்தில் காங்கிரஸ் ஆட்சிக்கு வருவதற்கு தொண்டர்கள் பாடுபட வேண்டும்’’ என்றார்.

அமைச்சரவையில் பங்கு தரும் கூட்டணியில் இடம் பெறுவோம்-ப.சிதம்பரம்: ந்த மேடையில் பேசியவர்கள் தங்களின் ஆதகங்களை கொட்டிவிட்டு போனார்கள். இங்கு பலரும் பல கேள்விகளை கேட்டு விட்டு போனார்கள். இந்தியாவையே ஆளும் காங்கிரஸ் கட்சி, ஏன் தமிழத்தில் மட்டும் ஆட்சி செய்ய முடியாமல் போனது. அதே ஆதங்கம் எனக்கும் இருக்கிறது. 40 வருடங்களாக தமிழகத்தில் காங்கிரஸ் ஆட்சி வராதா என்ற கனவு எனக்குள்ளும் இருக்கிறது. என்ன, அதை நான் வெளியில் சொன்னதில்லை. என்னுடைய சிறு வயதில் எப்போது காங்கிரசில் இணைந்தேனோ, அப்போதிலிருந்தே இந்த ஆதங்கம் இருக்கிறது.

2004ல் நாம் போட்டியிட்ட போது 145 இடங்களே கைப்பற்றினோம். பாஜகவை விட 7 இடங்களே அதிகம் பெற்றிருந்தோம். கடந்த நாடாளுமன்றத் தேர்தலின்போது எல்லா ஊடகங்களும் அடித்துச் சொன்னது பாஜகதான் ஆட்சியை பிடிக்கும் என்று.

ஆனால் மக்களோ போன முறை 145 மார்க் நமக்கு போட்டார்கள். இந்தமுறை 206 மார்க் போட்டார்கள். இதிலிருந்து தெரிவது என்னவென்றால், நாம் ஒழுங்காக படித்து, தேர்வு எழுதியதாலேயே மக்கள் நாம் நன்றாக படிக்கிறோம் என்பதற்காக இந்த மார்க்கை போட்டார்கள்.

அதேபோல மார்க்கை நாம் தமிழகத்திலும் எடுக்க, நாம் நம்மை தயார் படுத்திக்கொள்ள வேண்டும். வரும் தேர்தலுக்குப் பிறகு, நிச்சயமாக ஆட்சி அதிகாரத்தில் நமக்கும் அதிகாரம் அளிக்கக் கூடிய கட்சியோடுதான் இருக்கப் போகிறோம். அதைத்தான் இங்குள்ள மக்களும் எதிர்பார்க்கிறார்கள். தமிழகத்தில் அடுத்த முறை அமையும் கூட்டணி நாம் அதிகாரம் செலுத்தக் கூடிய கூட்டணியாகவே இருக்க வேண்டும். இருக்கும் என்றார்.

கருத்து கந்தசாமி: வட நாட்டாருக்கு இருக்கிற தைரியம், நம்ம சிதம்பரம் சாருக்கு வர மாட்டேங்குதே. அடுத்த தேர்தலேயும் கூட்டணியிலே பங்குதான் கேட்ப்பாங்க போலேயிருக்கு.

மறக்காம வோட்டுப் போடுங்க

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக