திங்கள், 2 ஆகஸ்ட், 2010

மின்கட்டண உயர்வு

தினமணி செய்தி : மின் கட்டண உயர்வால் வீட்டு வாடகை, பள்ளிக் கட்டணம், விலைவாசி ஆகியவையும் உயரும் என அதிமுக பொதுச்செயலர் ஜெயலலிதா மின்கட்டண உயர்வுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.

கருத்து கந்தசாமி : ஆஹா, என்ன ஒரு கண்டுபிடிப்பு. அம்மாவுக்கு ஆட்சியில் இருக்கும்போது இந்த மாதிரி கண்டுபிடிக்கவே தெரியாது.



வெப்துனியா செய்தி : மின்கட்டண உயர்வு குறித்து பா.ம.க. தலைவர் ராமதாஸ், மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் தெரிவித்திருந்த கருத்துகளுக்கு பதிலளித்துள்ள தமிழக முதல்வர் கருணாநிதி, மற்ற மாநிலங்களை விட மின் கட்டணம் குறைவு என்றும் 3 சதவீதம் பேருக்கே மின் கட்டண உயர்வு ஏற்பட்டுள்ளது என்றும் விளக்கம் அளித்துள்ளார்.

கருத்து கந்தசாமி : அதெல்லாம் சரிதான். ஆனால் மற்ற தொழில் நிறுவனங்களுக்கு அதிகப் படுத்தியிருக்கீங்களே. அப்போ விலைவாசியெல்லாம் இன்னும் ஏறுமே. மின்கட்டண உயர்வால் பாதிப்படையாத 97% மக்கள் இன்னும் பாதிக்கப் படுவாங்களே. சரி அதுக்கு நீங்க என்ன செய்வீங்க.

மறக்காம வோட்டுப் போடுங்க

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக