ஞாயிறு, 29 ஆகஸ்ட், 2010

ஓட்டுப்பதிவு இயந்திரத்தை திருடிய கம்ப்யூட்டர் நிபுணருக்கு ஜாமீன்

தினமலர் செய்தி: ஐதராபாத்தை சேர்ந்த கம்ப்யூட்டர் நிபுணர் ஹரிபிரசாத். ஓட்டுப் பதிவு இயந்திரத்தை முறைகேடாக பயன்படுத்த முடியும் என, தனியார் "டிவி'ஒன்றில் ஒளிபரப்பான நிகழ்ச்சியில் விளக்கிக் காட்டினார்.

இதற்காக, மின்னணு ஓட்டுப் பதிவு இயந்திரத்தை அவர் பயன்படுத்தினார். இந்நிலையில், மும்பை கலெக்டர் அலுவலகத்தில் வைக்கப்படிருந்த ஓட்டுப் பதிவு இயந்திரத்தை திருடியதாகக் கூறி, ஹரி பிரசாத்தை மும்பை போலீசார் கடந்த வாரம் கைது செய்தனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

முன்னதாக, இவரது ஜாமீன் மனுவை மும்பை மாஜிஸ்திரேட் கோர்ட் நிராகரித்து இருந்தது. இந்நிலையில், ஹரி பிரசாத் சார்பில் மீண்டும் ஒரு ஜாமீன் மனு கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனுவை விசாரித்த மும்பை மாஜிஸ்திரேட் கோர்ட்,"ஓட்டுப் பதிவு இயந்திரம் திருடப்பட்டதாக கூறப்படும் விவகாரத்தில், ஹரி பிரசாத் மீது குற்றம் எதுவும் இருப்பதாகத் தெரியவில்லை. ஒரு வேளை அவர் திருடியதாக எடுத்துக் கொண்டாலும், தவறான நோக்கத்திற்காக அதை எடுக்கவில்லை. ஓட்டுப்பதிவு இயந்திரத்தில் முறைகேடு செய்ய முடியும் என்பதை காட்டுவதற்காகவே இவ்வாறு செய்துள்ளார் 'என கூறி, 20 ஆயிரம் ரொக்க ஜாமீனில் அவரை விடுவித்தது. மேலும், போலீஸ் ஸ்டேஷனில் வாரம்தோறும் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என்றும் அவருக்கு நிபந்தனை விதிக்கப்பட்டது.

கருத்து கந்தசாமி:  ஏங்க ஹரிபிரசாத் சார் அவங்க அடிமடியிலேயே கை வெச்சீங்கன்னா சும்மா இருப்பாங்களா. ஏதோ நீதிபதி கருணைக் காட்டியிக்காரு. நீதிபதி சார் அடிச்சீங்க பாருங்க சூப்பர் பன்ச்.

மறக்காம வோட்டுப் போடுங்க

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக