புதன், 11 ஆகஸ்ட், 2010

எந்த கட்சியுடன் கூட்டணி? ராமதாஸ் பேட்டி

தினகரன் செய்தி: பாமக நிர்வாக குழு கூட்டம், சென்னையில் நேற்று நடந்தது. நிறுவனர் ராமதாஸ், தலைவர் ஜி.கே.மணி, இளைஞரணி தலைவர் அன்புமணி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். கூட்டம் முடிந்த பிறகு ராமதாஸ் அளித்த பேட்டி: சட்டப்பேரவை தேர்தல் குறித்து நிர்வாக குழுவில் விவாதிக்கப்பட்டது. கூட்டணி குறித்து பேசி முடிவெடுக்க எனக்கு அதிகாரம் அளிக்கப்பட்டது. காங்கிரஸ் தலைமையில் கூட்டணி அமைக்க வேண்டும் என்று காங்கிரஸில் உள்ள வயதான தலைவர்கள் பேசி வருகின்றனர். அதைத்தான் நான் கூறினேன். அரசியலில் நிரந்தர எதிரியும் கிடையாது, நிரந்தர நண்பனும் கிடையாது. கூட்டணி குறித்து எதுவும் நடக்கலாம்.

கருத்து கந்தசாமி: இது தெரியாதா? அன்புமணி ராமதாஸ் அவர்களுக்கு மாநிலத்திலோ அல்லது ராஜ்யசபா எம்பியாக்கி மத்தியிலோ மந்திரி பதவி தருவதாக யார் சொல்கிறார்களோ அவர்களோடுதான் கூட்டணி.

மறக்காம வோட்டுப் போடுங்க

2 கருத்துகள்:

பெயரில்லா சொன்னது…

பாவம் மருத்துவர் !நோயாளியாகி அலைகிறார்.பதவி ஆசை, புற்று நோயை விடக் கொடுமையானது.குணப்படுத்தவே முடியாதது.மானம்,மரியாதையெல்லாம் இழ்ந்து ம்.பொ.சி யாகி இன்னும் காலில் விழுந்து எழுந்திருக்க முடியாமல் அவமானப் பட வேண்டியுள்ளது.

Unknown சொன்னது…

நல்லா சொன்னீங்க போங்க

கருத்துரையிடுக