வெள்ளி, 10 செப்டம்பர், 2010

ஜார்க்கண்டில் சிபு சோரன் ஆதரவுடன் பா.ஜ. ஆட்சி: அத்வானி அதிருப்தி

வெப்துனியா.காம் செய்தி: ஜார்க்கண்ட் மாநிலத்தில் சிபுசோரனின் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சி ஆதரவுடன் பா.ஜனதா ஆட்சியமைக்க உள்ளது குறித்து அக்கட்சியின் மூத்த தலைவர் அத்வானி மிகுந்த அதிருப்தி அடைந்துள்ளதாக செய்தி வெளியாகி உள்ளது.

அத்வானி போன்றே அருண் ஜெட்லி, சுஷ்மா ஸ்வராஜ் போன்ற மூத்த தலைவர்களும் அதிருப்தி அடைந்துள்ளதாக கூறப்படுகிறது.

அதே சமயம் பா.ஜனதா தலைவர் நிதின் கட்கரி மற்றும் முன்னாள் தலைவர் ராஜ்நாத் சிங் ஆகியோர் ஜேஎம்எம் உடனான கூட்டணி நிலையில் உறுதியாக உள்ளதாக பா.ஜனதா வட்டாரங்களை மேற்கோள்காட்டி செய்திகள் தெரிவிக்கின்றன.

இதனிடையே ஜார்க்கண்ட் மாநில முதலமைச்சராக அர்ஜூன் முண்டா நாளை பதவியேற்க உள்ள நிலையில், அந்நிகழ்ச்சியில் அத்வானி கலந்துகொள்ள மாட்டார் என்று கூறப்படுகிறது.

முன்னதாக கடந்த 3 மாதங்களுக்கு முன்னர் நாடாளுமன்றத்தில், மத்திய அரசுக்கு எதிராக பா.ஜனதா மற்றும் இடதுசாரிகள் கொண்டுவந்த வெட்டுத் தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பில் ஜேஎம்எம் தலைவர் சிபு சோரன் கட்சிமாறி வாக்களித்ததால், ஜார்க்கண்டில் அவரது கட்சித் தலைமையிலான கூட்டணி அரசுக்கு அளித்து வந்த ஆதரவை பா.ஜனதா திரும்ப பெற்றதால், ஆட்சி கவிழ்ந்தது.

அதன் பின்னர் ஆட்சியமைப்பதற்கான பெரும்பான்மை பலத்தை திரட்ட எந்த கட்சிக்கும் முடியாமல் போனதால், சட்டசபை முடக்கப்பட்டு, அங்கு குடியரசுத் தலைவர் ஆட்சி அமலில் இருந்தது.

இந்நிலையில் ஜேஎம்எம் மற்றும் ஏஜேஎஸ்யு ஆகிய கட்சிகளின் ஆதரவுடன் மீண்டும் ஆட்சியமைப்பது என்று பா.ஜனதா முடிவு செய்தது.

இதனையடுத்து உள்ள பா.ஜனதா கட்சியின் சட்டமன்ற தலைவராக, கடந்த 7 ஆம் தேதியன்று, முன்னாள் முதலமைச்சர் அர்ஜூன் முண்டா தேர்ந்தெடுக்கப்பட்டார்.

அதனைத் தொடர்ந்து பா.ஜனதா - ஜேஎம்எம் கூட்டணித் தலைவர்கள், ஆளுநரை சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோரியதோடு, ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் பட்டியலையும் அளித்திருந்தனர்.

இந்நிலையில் ஆட்சியமைக்க வருமாறு அர்ஜூன் முண்டாவுக்கு ஆளுநர் பரூக் நேற்று அழைப்பு விடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்து கந்தசாமி: சான்ஸ் கிடைச்சுதுன்னு ஆட்சியை அமைப்பீங்களா, காங்கிரஸோட புத்திசாலித்தனம் எல்லாம் உங்களுக்கு வராது போலிருக்கே.

மறக்காம வோட்டுப் போடுங்க

வியாழன், 9 செப்டம்பர், 2010

காயப்படுத்தாத கிசுகிசு : குஷ்பு பாராட்டிய இதழ்!

விடுப்பு.காம் செய்தி: சவுத் ஸ்கோப் என்ற ஆங்கில சினிமா இதழ், ரசிகர்கள் பங்கேற்கும் ஒரு விருது நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருக்கிறது. தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய நான்கு மொழிகளிலும் வெளிவரும் பத்திரிகை

இது என்பதால், இந்த நான்கு மொழி படங்களுக்கும் போட்டி வைத்து தேர்ந்தெடுப்பார்களாம். வெற்றி பெறுகிற படங்களுக்கு அவார்டு வழங்கப்படுகிறது.

கடந்த ஆண்டு வெளிவந்த நாடோடிகள், பசங்க, நான் கடவுள், காஞ்சிவரம் ஆகிய நான்கு படங்களும் போட்டியில் இருக்கின்றன. சிறந்த படங்களை மட்டுமல்ல, சிறந்த இயக்குனர், சிறந்த நடிகர், சிறந்த நடிகை என்று சினிமாவின் அத்தனை பிரிவினருக்கும் போட்டி வைத்து இந்த அவார்டு வழங்கப் போகிறார்களாம்.

இந்த போட்டி அறிவிப்பை வெளியிட வந்திருந்தார் குஷ்பு. அவருடன் சமந்தா, பியா போன்ற ஜிலு ஜிலு நட்சத்திரங்களும் வந்திருந்தார்கள். முதலில் சவுத் ஸ்கோப் இதழ் பற்றி பேசிய குஷ்பு, ரொம்ப இன்ட்ரஸ்ட்டிங்காகவும் யாரையும் காயப்படுத்தாமலும் இந்த இதழ்ல கிசுகிசு வருது. எப்பவுமே கிசுகிசு படிக்கறதுன்னா ரசிகர்களுக்கு ரொம்ப ஜாலியா இருக்கும். அதை எல்லை மீறாம செஞ்சுட்டு வர்றாங்க இவங்க. இந்த போட்டியில் கலந்துக்கிற எல்லாருமே முக்கியமானவர்கள். எப்படிதான் ஒருவரை மட்டும் தேர்ந்தெடுக்க முடியுமோ? அல்லது ஒரு படத்தை மட்டும் தேர்ந்தெடுக்க முடியுமோ, குழப்பம்தான் என்றார்.

கருத்து கந்தசாமி: அடுத்தவங்களை பத்தின கிசுகிசுன்னா நம்மள காயப்படுத்தாதுதான்.

குஷ்புவுக்கு: மேடம், உங்க மேல இருந்த வழக்கு விசாரணையெல்லாம் முடிஞ்சிருச்சா?

மறக்காம வோட்டுப் போடுங்க

புதன், 8 செப்டம்பர், 2010

தமிழக அரசு பொய் சொல்கிறது

பிபிசி தமிழ் செய்தி: தமிழக காவல் துறை இயக்குனர் பதவிக்கு, லத்திகா சரண் நியமிக்கப்பட்டது தொடர்பான வழக்கில் தமிழக அரசு சென்னை உயர்நீதிமன்றத்திடம் உண்மைகளை மறைக்கிறது என்று மூத்த ஐபிஎஸ் அதிகாரி கே.விஜயகுமார் கூறியுள்ளார்.

தீயணைப்புத் துறை இயக்குனரான டி.ஜி.பி. ஆர்.நடராஜ் என்பவரும், லத்திகா சரண் தனக்கும் இன்னும் வேறு சிலருக்கும் பணியில் இளையவர், எனவே அவர் சட்டம் ஒழுங்குப் பிரிவின் தலைவராக நியமிக்கப்பட்டிருக்க்க்கூடாது என வாதிட்டு தொடர்ந்த வழக்கினை மத்திய நிர்வாக தீர்ப்பாயம் தள்ளுபடி செய்த நிலையில், அவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்திருக்கிறார்.

தமிழக அரசு தனது பதில் மனுவில், "மூத்த ஐ.பி.எஸ். அதிகாரிகள் என்.பாலச்சந்திரன், லத்திகா சரண், நடராஜ், விஜயகுமார் ஆகியோரது பெயர்கள் பரிசீலிக்கப்பட்டன. விஜயகுமார் மத்திய அரசுப் பணிக்குப் போய் விட்டதால், மற்ற 3 பேரில் திறமை மற்றும் தகுதி அடிப்படையில் லத்திகா சரண் தேர்வு செய்யப்பட்டார். சீனியாரிட்டி அடிப்படையில்தான் டிஜிபி தேர்வு இருக்கவேண்டும் என்பது விதியில்லை" எனக் கூறியிருக்கிறது.

விஜயக்குமார் தனது பதில் மனுவில், மாநில பணிக்கு வர விரும்பவில்லை என்று தான் ஒருபோதும் சொன்னதில்லை என்றும் மத்திய அரசு பணிக்குச் சென்றிருந்தாலும், தன்னையும் சட்டம் ஒழுங்குப் பிரிவுத்தலைவர் நியமனத்திற்கு டி.ஜி.பி. பணிக்கு பரிசீலனை செய்திருக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார்.

விஜயகுமார் தற்போது ஹைதராபாத்தில் உள்ள சர்தார் வல்லபாய் படேல் தேசிய போலீஸ் அகாடமியின் தலைவராகப் பணியாற்றிவருகிறார்.

"அப்பதவி கூடுதல் டைரக்டர் ஜெனரல் நிலையில் இருப்பவர்களுக்குரித்தான் பதவியாயிருந்தும் லிஜயகுமார் அவர் ஏற்றுக்கொண்டிருக்கிறார். எனவே தமிழ்நாட்டில் அவருக்குப் பணியாற்ற விருப்பமில்லை என்ற ரீதியில் தமிழக உள்துறை செயலர் தனது மனுவில் குறிப்பிட்டிருக்கிறார். அது தவறானது. அவதூறானது" என விஜயகுமார் மேலும் கூறியிருக்கிறார்.

கருத்து கந்தசாமி: இதுக்கு நம்ம தானைத் தலைவர் கருணாநிதி விடுத்த பதில் அறிக்கை "ஜெயலலிதா அம்மையார் மாற்றி சொன்னதில்லையா, நண்பர் பாண்டியன் மாற்றி சொன்னதில்லையா, அத்வானி அவர்கள் மாற்றி சொன்னதில்லையா, அமெரிக்க அதிபர் மாற்றி சொன்னதில்லையா"

சிரிச்சுட்டு மாத்திக் குத்தாம சரியா வோட்டு குத்திட்டு போங்க

மறக்காம வோட்டுப் போடுங்க

செவ்வாய், 7 செப்டம்பர், 2010

சிந்து சமவெளி திரைப்படத்துக்கு எதிர்ப்பு: இயக்குநர் சாமியின் கார் மீது தாக்குதல்

தினமணி செய்தி: உயிர், மிருகம் உள்ளிட்ட படங்களை இயக்கியவர் திரைப்பட இயக்குநர் ஏ.கே. சாமி. இவர் இயக்கிய "சிந்து சமவெளி' திரைப்படம் அண்மையில் வெளியானது.

மாமனார் - மருமகள் உறவை கொச்சைப்படுத்தும் வகையில் இந்த படத்தில் காட்சிகள் இடம் பெற்றுள்ளதாக புகார் எழுந்தது.

இத்தகைய காட்சிகளுக்கு பல்வேறு தரப்பிலிருந்தும் இயக்குநர் சாமிக்கு எதிர்ப்பு வந்தது. இது தொடர்பாக சில நாள்களாக தனக்கு தொலைபேசி மூலம் கொலை மிரட்டல்கள் விடுக்கப்பட்டன என்றார் சாமி.

இந் நிலையில் கே.கே. நகர் நியு பங்காரு தெருவில் உள்ள அவரது வீட்டின் வாயிலில் நிறுத்தப்பட்டிருந்த கார் மீது ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவில் மர்ம நபர்கள் கல்வீசித் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

சில நாள்களாக வந்து கொண்டிருந்த மிரட்டல்களின் தொடர்ச்சியாகவே இந்த தாக்குதல் நடந்துள்ளதாக சாமி போலீஸில் புகார் அளித்துள்ளார்.

இந்த சம்பவத்தை அடுத்து தனக்கும், தனது வீட்டுக்கும் பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று இயக்குநர் சாமி போலீஸாரிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

கருத்து கந்தசாமி: சினிமாவை ஓட வைக்கிறதுக்கு இந்த மாதிரி பப்ளிசிட்டியெல்லாம் தேவை தான்.

இயக்குநர் சாமிக்கு : அடுத்ததா மாமியார் ம்றுமகன் கள்ள உறவை பத்தி படமெடுக்கப் போறீங்களாமா?

மறக்காம வோட்டுப் போடுங்க

ஞாயிறு, 5 செப்டம்பர், 2010

நக்ஸல்களுக்கு - ராகுல் பிரார்த்தனை

சென்னை ஆன்லைன் செய்தி: கட்சி நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக ராகுல் காந்தி பிகார் வந்துள்ளார். போலீஸப்ர் கடத்தப்பட்ட சம்பவம் குறித்து அவர் கூறுகையில், "நக்ஸல்களின் பிடியில் உள்ள 3 போலீஸாரும் பத்திரமாக விடுவிக்கப்பட வேண்டுமென்று பிரார்த்தனை செய்கிறேன். கொல்லப்பட்ட போலீஸ்காரர் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்' என்றார் ராகுல்.

கருத்து கந்தசாமி: என்ன அருமையான தலைவர்கள் நமக்கு கிடைச்சிருக்காங்க. முக்கியமான ஆளுக கடத்தப் பட்டிருந்தா இப்படித்தான் பிரார்த்தனை பன்னிட்டிருப்பாரா

மறக்காம வோட்டுப் போடுங்க

4வது முறையாக காங். தலைவராகி சோனியா சாதனை

தட்ஸ்தமிழ் செய்தி: காங்கிரஸ் கட்சியின் தலைவராக நான்காவது முறையாக தேர்ந்தெடுக்கப்பட்டு புதிய சாதனை படைத்துள்ளார் சோனியா காந்தி.

நேற்று அவர் நான்காவது முறையாக போட்டியின்றி தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அவரை எதிர்த்து யாரும் போட்டியிடவில்லை.

கருத்து கந்தசாமி: எதுத்து போட்டிப் போடறதுக்கு ஆளே இல்லாத இடத்துல 4 முறையென்ன 400 முறையா வேணுமின்னாலும் சோனியா காந்தியே கட்சி தலைவியாகலாம். இதுலே சாதனை என்னன்னு தான் புரியலை

காங்கிராஸாருக்கு - உங்க கட்சியெலே பதவியிலெ இருக்கிற யாரும் 2 தடவைக்கு மேலே இருக்க முடியாதாமே? நிஜமாவா?

மறக்காம வோட்டுப் போடுங்க

சனி, 4 செப்டம்பர், 2010

மீனவர்கள் நலனுக்காக வழக்கு தொடர்ந்தேன்: கருணாநிதிக்கு ஜெ. பதில்

வெப் துனியா செய்தி: தமிழக மீனவர்கள் நலனுக்காக கச்சத்தீவு பிரச்சனையில் உ‌ச்ச ‌நீ‌திம‌ன்ற‌த்தில் வழக்கு தொடர்ந்தேன் எ‌ன்று முதலமை‌ச்ச‌ர் கருணாநிதிக்கு அஇஅ‌திமுக பொது‌ச் செயல‌‌ர் ஜெயலலிதா பதில் அ‌ளி‌த்து‌ள்ளா‌ர்.

கருத்து கந்தசாமி: அய்யாவுக்கும், அம்மாவுக்கும் வேறே எதுலெ ஒத்துமை இருக்குதோ இல்லியோ இந்த விசயத்துல நல்ல ஒத்துமை. இவங்க நீதிமன்றம் நீதிமன்றமா வழக்குப் போடுவாங்க, அவரு சோனியாவுக்கு, பிரதமருக்கு கடிதம் அனுப்புவாரு. பாவம் இவங்களால வேறே ஒன்னுமே செய்ய முடியாதில்லெ

மறக்காம வோட்டுப் போடுங்க

வெள்ளி, 3 செப்டம்பர், 2010

அரசை எதிர்த்து போராட்டம் வேண்டாம்: கருணாநிதி வேண்டுகோள்

தினமணி செய்தி: தமிழக அரசை எதிர்த்து போராட்டம், ஆர்ப்பாட்டம், உண்ணாவிரதம் என்பதையெல்லாம் கைவிட வேண்டும் என்று முதல்வர் கருணாநிதி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதுகுறித்து, வியாழக்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை:

மாற்றுத் திறனாளிகள் அனைவருக்கும் வேலை வழங்க வேண்டும் அல்லது வேலையில்லா கால நிவாரணமாக மாதந்தோறும் ரூ.3 ஆயிரம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் 3-ம் தேதியிலிருந்து 10-ம் தேதி வரை மாற்றுத்

திறனாளிகள் போராட்டம் நடத்தவிருப்பதாக அவர்களுக்கான ஒரு சங்கம் அறிவித்துள்ளது.

இந்தியாவிலேயே முதல் முறையாக மாற்றுத் திறனாளிகளுக்கு சமுகப் பாதுகாப்பு அளித்து நலத்திட்ட உதவிகள் வழங்க தனி நலவாரியம் அமைக்கப்பட்டுள்ளது. அவர்களுக்கென பல்வேறு நலத்திட்டங்கள் அறிவிக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது.

மாற்றுத் திறனுடையோர் உயர் கல்வி பயில கட்டணங்கள் விதிவிலக்கு, மாணவர் இல்லங்களில் தங்கிப் படிக்கும் மாற்றுத் திறனாளிகளுக்கு உணவுச் செலவாக மாதம் ரூ.450 வழங்கப்படும். மன வளர்ச்சி குன்றியவர்களுக்கு வருவாய் உச்சவரம்பின்றி ரூ.500 வீதம் மாதாந்திர உதவித் தொகையை அரசு வழங்கி வருகிறது.

கை, கால் ஊனமுற்றோர் பயணச் சலுகைகளுடன், நாட்டிலேயே முதல் முறையாக மோட்டார் பொருத்தப்பட்ட மூன்று சக்கர வண்டிகள் முதலான பல்வேறு உதவிக் கருவிகள் வழங்கப்பட்டுள்ளன. வேலைவாய்ப்பற்ற அனைத்து வகை மாற்றுத் திறனாளிகளுக்கும் நிவாரணத் தொகை அளிக்கப்படுகிறது.

கடுமையாக பாதிக்கப்பட்ட மாற்றுத் திறனாளிகள் ஆயிரத்து 500 பேருக்கு இலவசமாக மடக்கு சக்கர நாற்காலிகள் வழங்கப்படவுள்ளது. கடும் மூளை முடக்குவாதத்தால் பாதிக்கப்பட்ட மாற்றுத் திறனாளிகளின் கை, கால் தசை இறுக்கமாக இருக்கும். இவர்களது தனிப்பட்ட தேவைகளின் அடிப்படையில் புதிதாக வடிவமைக்கப்பட்ட சிறப்பு நாற்காலிகள் 500 பேருக்கு முதல் கட்டமாக வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

செலவைப் பார்க்க வேண்டியிருக்கிறது: என்னைப் பொருத்தவரையில் மாற்றுத் திறனாளிகள் மட்டுமல்ல, யாருமே எந்தவிதமான சிரமமும் இல்லாமல் நல்வாழ்வு வாழ வேண்டும் என்பது தான். அதற்காகத்தான் இந்த வயதிலும் இரவு பகலாக உழைக்கிறேன். சிந்திக்கிறேன்.

யாருக்கு என்ன செய்தால் அவர்களுக்கு நல்வாழ்வு ஏற்படும் என்று நினைத்துக் கொண்டே இருக்கிறேன். ஆனால், ஒரு அரசு இருக்கும் போது, அந்த அரசினால் எந்த அளவுக்கு செலவழிக்க முடியும் என்று பார்க்க வேண்டியிருக்கிறது. அரசிடம் இருக்கின்ற நிதியைக் கொண்டு அனைத்துத் தரப்பினரையும் முடிந்த அளவுக்கு திருப்தி செய்ய வேண்டுமென்பதே என் எண்ணம்.

தேர்தல் வரப்போகிறது: சில மாதங்களில் பொதுத் தேர்தல் வரப் போகிறது என்றதுடன், அதற்குள் தங்களுடைய தேவைகளைப் பூர்த்தி செய்து கொள்ள வேண்டுமென அனைத்துத் தரப்பினரும் எண்ணுகிறார்கள். அதற்காக அவர்கள் தேர்ந்தெடுக்கும் முறைதான் போராட்டம் என்பதெல்லாம்.

உண்மையில் அவர்களுக்கு இந்த அரசை எதிர்த்துப் போராட்டம் நடத்த வேண்டுமென்பது நோக்கமல்ல. அதேநேரத்தில் ஒரு சில அரசியல்வாதிகள் தங்கள் சங்கங்களை வளர்க்க வேண்டும் என்ற உள்நோக்கத்தோடு அப்பாவிகளைத் தூண்டிவிட்டு குளிர்காய எண்ணுகிறார்கள்.

அதுவும் அந்த அலுவலர்களுக்குத் தெரிகிறது என்ற போதிலும் தங்களையும் அறியாமல் ஆளாகிவிட நேரிடுகிறது என்பதை நான் நன்கறிவேன்.

ஒத்துழைக்க முன்வாருங்கள்: இந்த ஆட்சி மாறிவிடும், பிறகு உங்கள் தேவைகள் எதுவும் நிறைவேறாது என்றெல்லாம் நீங்கள் பயப்படத் தேவையில்லை. நிச்சயமாக ஆட்சி மாறாது. ஏன் மாறப் போகிறது?

இந்த ஆட்சியிலே உங்கள் தேவைகள் கவனிக்கப்படவில்லையா? எந்தத் தரப்பினராவது புறக்கணிக்கப்பட்டதுண்டா? ஊழல்கள் நடைபெற்றது உண்டா? இந்த அரசின் சார்பில் அறிவிக்கப்பட்ட சலுகைகளை நீங்கள் அறிய மாட்டீர்களா? அந்தச் சலுகைகளையெல்லாம் நீங்கள் பெறுகிறீர்களா இல்லையா?

ஆட்சி மாறி விடும். உங்கள் கோரிக்கைகள் நிறைவேறாமலே போய்விடும் என்றெல்லாம் நினைக்கத் தேவையில்லை. எனவே, இந்த அரசை எதிர்த்துப் போராட்டம், ஆர்ப்பாட்டம், உண்ணாவிரதம் என்பதையெல்லாம் கைவிட்டு, அரசின் முயற்சிகளுக்கு ஒத்துழைக்க முன்வர வேண்டும் என்று முதல்வர் கருணாநிதி கேட்டுக் கொண்டுள்ளார்.

கருத்து கந்தசாமி: யாரும் எதுத்து போராட வேண்டாம்னா எப்படி. இந்த போராட்ட வழியெல்லாம் நீங்களும், உங்க கட்சியான திமுகவும் சொல்லிக் கொடுத்ததுதானே.

மறக்காம வோட்டுப் போடுங்க

வியாழன், 2 செப்டம்பர், 2010

ராமதாஸ் திமுக கூட்டணியில் சேர திருமாவளவன் அழைப்பு

சென்னை ஆன்லைன் செய்தி: தி.மு.க. கூட்டணியில் இருந்து நாங்கள் வெளியேறப் போவதில்லை. கூட்டணியில் தொடர்ந்து நீடிப்போம். தி.மு.க. கூட்டணிக்கு பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வரவேண்டும் என்று வேண்டுகோள் விடுக்கிறேன். என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன் எம்.பி. கூறினார்.

கருத்து கந்தசாமி: திமுக மேலே தொல்.திருமாவளவன் சாருக்கு என்ன கோபமோ தெரியலியே

மறக்காம வோட்டுப் போடுங்க

மகள் திருமண அழைப்பு: ரசிகர்களிடம் ரஜினி வருத்தம்

தினமணி செய்தி: நடிகர் ரஜினிகாந்தின் இளையமகள் சௌந்தர்யா - அஸ்வின் திருமணம் செப்டம்பர் 3-ம் தேதி சென்னையில் நடைபெறுகிறது. தமிழகத்தின் முக்கிய வி.ஐ.பி.களுக்கு ரஜினியே நேரில் சென்று பத்திரிகை வைத்து அழைப்பு விடுத்துள்ளார். ரசிகர்களுக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை.

இதற்காக வருத்தம் தெரிவித்து பத்திரிகைகளின் வழியாக ரசிகர்களுக்கு அவர் தனது கைப்பட எழுதி அனுப்பியுள்ள செய்தியின் விவரம்:

எனது மகளின் திருமணத்தை ரசிகர்கள் நேரடியாக வந்து பார்க்க வேண்டும். வாழ்த்த வேண்டும் என்ற நல்ல எண்ணத்துடன் தொலைபேசி மூலமாகவும், தபால் மூலமாகவும் எனக்கு தகவல் வந்து கொண்டு இருக்கிறது. இதற்காக ரசிகர்களை அழைப்பதற்கு ஆசையாக இருந்தாலும் சென்னை நகரின் இட நெருக்கடி காரணமாகவும், போக்குவரத்து இடையூறுகள் கருதியும் ரசிகர்களை அழைக்க முடியவில்லை என மிக வருத்தத்துடன் தெரிவித்து கொள்கிறேன். மணமக்களுக்கு உங்களின் நல்லாசிகளை வழங்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.

கருத்து கந்தசாமி: விடுங்க ரஜினி சார். உங்களை பத்திதான் பாபா படம் வந்த பின்னாடி ஒரு கண்காட்சி நடத்துனீங்களே, அப்பவே ரசிகர்கள் தெரிஞ்சுக்கிட்டாங்களே. ரொம்ப கவலைப் படாதீங்க உங்க எந்திரன் படத்தை உங்க ரசிகர்கள் ஓட வைச்சிருவாங்க

மறக்காம வோட்டுப் போடுங்க

சிந்து சமவெளி... ஏ சான்றும், ஏக பாராட்டும்!

தட்ஸ்தமிழ் செய்தி: சிந்து சமவெளி படத்தைப் பார்த்த சென்னை மண்டல சென்சார் சிறிய தணிக்கைக்குப் பிறகு ஏ சான்றிதழ் அளித்தனர். ஆனால் படத்தை வெகுவாகப் பாராட்டி உள்ளனர்.

தமிழ் பட உலகில், சர்ச்சைக்குரிய கதைகளை தேர்ந்தெடுத்து இயக்குபவர் என்ற பெயரை குறுகிய காலத்தில் சம்பாதித்து விட்டவர் சாமி. பாலீஷ் வார்த்தைகளால் பேசத் தெரியாத படைப்பாளியான இவர் அடிக்கடி சர்ச்சையில் சிக்கினாலும், சரக்கிருப்பதால் இன்னமும் கோடம்பாக்கத்தில் மதிக்கப்படுகிறார்.

இவர் இயக்கிய முதல் படம் 'உயிர்.' கொழுந்தன் மீது ஆசைப்படும் (கணவன் கையாலாகாதவன் என்பதால்) அண்ணியை பற்றிய கதை. அடுத்து இவர் இயக்கிய 'மிருகம்', ஊருக்கு அடங்காத ஒருவன், உயிர் கொல்லி நோய் வந்து சாகிற கதை. இந்தப் படம் வன்முறையை சற்று அதிகமாக தூக்கிப் பிடிப்பது போலத் தெரிந்தாலும், எய்ட்ஸை மையப்படுத்தி வந்த ஒரே படம் என்ற பெருமையைப் பெற்றது.

இதைத்தொடர்ந்து சாமி இயக்கியுள்ள புதிய படம் சிந்து சமவெளி.

இது, கள்ள உறவால் ஏற்படும் விபரீத விளைவுகளை சித்தரிக்கும் படம். ஹரீஷ் கல்யாண் கதாநாயகனாகவும், அனகா கதாநாயகியாகவும் நடித்து இருக்கிறார்கள்.

இந்த படம், தணிக்கைக்காக அனுப்பப்பட்டது. படத்தைப் பார்த்த தணிக்கை குழுவினர், 3 காட்சிகளை மட்டும் நீக்கிவிட்டு, படத்துக்கு ஏ சான்றிதழ் வழங்கினார்கள்.

அதே நேரம், தினசரி செய்தித்தாள்களைத் திறந்தால் வரும் கள்ளக் காதல் செய்திகல் இந்தப் படத்தால் கொஞ்சமாவது குறையும் என்று நம்புவதாக பாராட்டும் தெரிவித்துள்ளனர்.

கருத்து கந்தசாமி: சினிமாவாலே கெட்டுப் போயிட்டாங்கன்னு சொன்னா சினிமாங்கிறது ஒரு பொழுதுபோக்கு அதனாலே யாரும் கெட்டுப்போக மாட்டாங்கன்னு சொல்றாங்க. சினிமாவால திருந்திருவாங்கன்னு யாராவது சொன்னா சந்தோசமா கேட்டுக்கிறாங்க.

மறக்காம வோட்டுப் போடுங்க

புதன், 1 செப்டம்பர், 2010

தென் மாவட்ட வெற்றி : நடிகர் கார்த்திக் பேட்டி

சென்னை ஆன்லைன் செய்தி: தென் மாவட்ட தேர்தலில் திமுக, அதிமுக வெற்றி பெற கார்த்திக் தேவை என்று முதல்வர் கருணாநிதிக்கும், ஜெயலலிதாவுக்கும் தெரியும் என அகில இந்திய நாடாளும் மக்கள் கட்சியின் பொதுச் செயலாளர் நடிகர் கார்த்திக் உறுதிபட தெரிவித்துள்ளார்.

கருத்து கந்தசாமி: கார்த்திக் சார், சினிமாவுல மட்டும் காமெடி பன்னுங்க.

மறக்காம வோட்டுப் போடுங்க

கச்சத் தீவு இலங்கைக்குத் தரப்பட்டது சட்ட விரோதம்-திமுக

தட்ஸ்தமிழ் செய்தி: தமிழக மீனவர்கள் மீதான இலங்கை கடற்படையினரின் தாக்குதல் தொடர்பாக நாடாளுமன்றத்தில் நேற்று திமுக எம்பி டி.ஆர்.பாலு கவன தீர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தார்.

அதன் மீது நடைபெற்ற விவாதத்தில், தமிழகத்தைச் சேர்ந்த காங்கிரஸ் தவிர்த்த பிற கட்சி எம்.பிக்கள் கச்சத்தீவை திரும்பப் பெற வேண்டும் என்று வலியுறுத்தினர்.

விவாதத்தில் பேசிய பாலு, கச்சத்தீவை இலங்கைக்கு அளிக்கும் ஒப்பந்தம், கடந்த 1974ம் ஆண்டு ஜுன் மாதம் கையெழுத்தானது. அப்போது வெளியுறவுத்துறை அமைச்சராக இருந்த ஸ்வரண் சிங், தமிழக மீனவர்களின் மீன் பிடி உரிமையும், கடற்பயண உரிமையும் இந்த ஒப்பந்தத்தில் பாதுகாக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.

ஒப்பந்தப்படி, சர்வதேச கடல் பகுதியில் மீன் பிடிக்கச் செல்லும் தமிழக மீனவர்கள், கச்சத்தீவு பகுதியில் ஓய்வு எடுக்கவும், வலைகளை உலர்த்தவும் உரிமை அளிக்கப்பட்டிருந்தது.

ஆனால், கடந்த 1976ம் ஆண்டு முதல் நிலைமை மாறியது. இந்திய-இலங்கை செயலாளர்கள் இரண்டு கடித தொகுப்புகளை பரிமாறிக் கொண்டார்கள். அந்தக் கடிதங்கள், கச்சத்தீவு ஒப்பந்தத்தின் அங்கமாக ஆக்கப்பட்டன. அதன்படி, இந்திய மீனவர்களின் மீன்பிடி உரிமை பறிக்கப்பட்டது.

இந்த கடிதங்களுக்கு நாடாளுமன்றத்தின் ஒப்புதலையோ, அப்போதைய தமிழக அரசின் ஒப்புதலையோ பெறவில்லை. அரசியல் சட்டத்தை திருத்துவதன் மூலமும், நாடாளுமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றுவதன் மூலமும் மட்டுமே, இந்தியாவின் எந்தப் பகுதியையும் பிற நாட்டுக்கு கொடுக்க முடியும். அப்படிச் செய்யப்படாததால், இது ஒரு சட்டவிரோதமான ஒப்பந்தம்.

எனவே, கச்சத் தீவு ஒப்பந்தத்தை மத்திய அரசு ரத்து செய்ய வேண்டும். கச்சத் தீவை திரும்பப் பெற வேண்டும்.கச்சத் தீவு பகுதி, உலகிலேயே இறால் மீன்கள் அதிகமாக கிடைக்கும் பகுதி.

ஆனால் அங்கு செல்லும் தமிழக மீனவர்கள், இலங்கை கடற்படையினரால் தாக்கப்படுகிறார்கள். இத்தகைய தாக்குதலைத் தடுக்க, இந்திய கடற்படையின் ரோந்து பணியை அதிகரிக்க வேண்டும் என்றார்.

அதிமுக எம்பி தம்பிதுரை பேசுகையி்ல்,

கச்சத் தீவு, தமிழ்நாட்டின் ஒருங்கிணைந்த பகுதி. ஒப்பந்தம் கையெழுத்தானபோது, தமிழக அரசை மத்திய அரசு கலந்து ஆலோசிக்கவில்லை. கச்சத் தீவு பகுதியில் மீன் பிடிக்கச் செல்லும் தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படை தாக்குதல் நடத்துவதால், இதுவரை 500 மீனவர்கள் பலியாகி உள்ளனர். ஆயிரம் பேர் முடமாக்கப்பட்டுள்ளனர். மேலும், ஆயிரம் பேரைக் காணவில்லை.

எனவே, இலங்கையுடன் நட்பு வேண்டும் என்பதற்காக, தமிழக மீனவர்களின் நலன்களை மத்திய அரசு அலட்சியப்படுத்தக் கூடாது. தமிழ்நாடு- இலங்கை தமிழ் மீனவர்கள் இடையிலான தொப்புள் கொடி உறவை துண்டிப்பதற்காகவே, இந்த ஒப்பந்தம் போடப்பட்டதோ என்று சந்தேகமாக இருக்கிறது.

மேலும், இந்தியப் பெருங்கடல் பகுதியில் சீனா முகாமிட முயன்று வருகிறது. அங்கு சீனா நிலைகொண்டால், அது இந்தியாவின் பாதுகாப்புக்கு பெரும் அச்சுறுத்தலாக அமையும். ஆகவே, கச்சத்தீவை திரும்பப் பெற வேண்டும்.

வெறும் கடிதம் எழுதுவதால் மட்டும் இந்தப் பிரச்சனைக்குத் தீர்வு காண முடியாது என்றார் தம்பிதுரை.

அவர் இவ்வாறு கூறியதற்கு திமுக எம்பிக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து இரு கட்சி எம்பிக்களும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். என்றார்.

பின்னர் மார்க்சிஸ்ட் எம்.பி. நடராஜன், மதிமுக எம்.பி கணேசமூர்த்தி ஆகியோரும் கச்சத் தீவை மீட்க வேண்டும் என்று பேசினர்.

அது இலங்கைக்கே சொந்தம்-கிருஷ்ணா:

இந்த விவாதங்களுக்குப் பதிலளித்துப் பேசிய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா,
கச்சத் தீவு, இலங்கைக்கே சொந்தம். அதை திரும்பப் பெற முடியாது. இரு அரசுகளுக்கிடையிலான அந்த புனிதமான ஒப்பந்தத்தை ரத்து செய்ய முடியாது. இலங்கை, நமது நட்பு நாடு. அந்த அம்சத்தை மனதில் கொள்வது அவசியம்.

மீன்பிடி விவகாரம் தொடர்பாக, கடந்த 2008ம் ஆண்டு அக்டோபர் மாதம், இந்தியா-இலங்கை இடையே ஒரு புரிந்து கொள்ளல் ஒப்பநதம் ஏற்பட்டது.

அதன்பிறகு, தமிழக மீனவர்கள் பிடிக்கப்படுவதும், சுடப்படுவதும் கணிசமாக குறைந்துள்ளது. 2008ம் ஆண்டு, 1,456 மீனவர்கள் பிடித்துச் செல்லப்பட்டனர். ஆனால், 2009ம் ஆண்டு, அது 127 ஆகக் குறைந்தது. இந்த ஆண்டு ஜுலை மாதம்வரை, 26 மீனவர்கள் மட்டுமே பிடித்துச் செல்லப்பட்டனர்.

கடந்த 2008ம் ஆண்டு 5 மீனவர்கள் கொல்லப்பட்டனர். 2009ம் ஆண்டு, யாரும் கொல்லப்படவில்லை. நடப்பு ஆண்டில், ஒருவர் கொல்லப்பட்டதாக கூறப்படும் சம்பவம் நடந்துள்ளது.

எப்போதெல்லாம் தமிழக மீனவர்கள் தாக்கப்படும் சம்பவம் நடக்கிறதோ, அப்போதெல்லாம் நாங்கள் இலங்கை அரசின் கவனத்துக்கு அதை எடுத்துச் செல்கிறோம். ஆனால், அதற்கு தாங்கள் பொறுப்பல்ல என்று இலங்கை மறுத்து விடும். தங்களது கடற்படை, இந்திய கடல் பகுதிக்குள் நுழையவில்லை என்றும் கூறும்.

எனவே, இத்தகைய சம்பவங்கள் இலங்கை கடல் எல்லைக்குள்தான் நடக்கின்றன என்பதை நான் தெரிவிக்க விரும்புகிறேன். ஆகவே, எல்லையை மதிக்க வேண்டும் என்றும், இலங்கை பகுதிக்குள் நுழையக்கூடாது என்றும் நமது மீனவர்களை கேட்டுக் கொள்கிறோம்.

அதுபோல, இலங்கை மீனவர்களும் நமது பகுதிக்குள் வரக்கூடாது என்று இலங்கை அரசிடம் தெரிவித்துள்ளோம் என்றார்.

ஆனால், கிருஷ்ணாவின் பதில் திருப்தி அளிக்கவில்லை என்று கூறி, அதிமுக, மதிமுக எம்பிக்கள் வெளிநடப்பு செய்தனர். திமுக எம்பிக்களும் அவரது பதிலுக்கு கடும் அதிருப்தி தெரிவித்தனர்.

இந்த விவகாரத்தில் டி.ஆர்.பாலு தொடர்ந்து கேள்விகள் எழுப்பியபடி இருந்தார். ஆனால், விவாதத்தை இத்துடன் முடிப்பதாக அறிவித்து அடுத்த அலுவலை எடுத்துக் கொண்டார் சபாநாயகர் மீரா குமார்.

கருத்து கந்தசாமி: திமுகவிற்கு - கச்சதீவை இலங்கையிடம் இந்திரா காந்தி அம்மையார் ஒப்படைத்த போது நீங்க தானே ஆட்சியில் இருந்தீங்க.

மத்திய அரசுக்கு - அமெரிக்காவை பார்த்து பயப்படுறீங்க சரி, சுண்டைக்கா சைஸ்ல இருக்கிற இலங்கைக்கு ஏன் பயப்படுறீங்க

தமிழக எம்பிக்களுக்கு - ஒத்துமையா இந்த விசயத்துல போராடறதை பாராட்டுறோம். ஆனா கச்சத்தீவு ஒப்பந்தம் என்னன்னு விவரமா தமிழ் மக்களுக்கு ஏன் சொல்ல மாட்டேங்குறீங்க

மறக்காம வோட்டுப் போடுங்க