வெள்ளி, 10 செப்டம்பர், 2010

ஜார்க்கண்டில் சிபு சோரன் ஆதரவுடன் பா.ஜ. ஆட்சி: அத்வானி அதிருப்தி

வெப்துனியா.காம் செய்தி: ஜார்க்கண்ட் மாநிலத்தில் சிபுசோரனின் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சி ஆதரவுடன் பா.ஜனதா ஆட்சியமைக்க உள்ளது குறித்து அக்கட்சியின் மூத்த தலைவர் அத்வானி மிகுந்த அதிருப்தி அடைந்துள்ளதாக செய்தி வெளியாகி உள்ளது.

அத்வானி போன்றே அருண் ஜெட்லி, சுஷ்மா ஸ்வராஜ் போன்ற மூத்த தலைவர்களும் அதிருப்தி அடைந்துள்ளதாக கூறப்படுகிறது.

அதே சமயம் பா.ஜனதா தலைவர் நிதின் கட்கரி மற்றும் முன்னாள் தலைவர் ராஜ்நாத் சிங் ஆகியோர் ஜேஎம்எம் உடனான கூட்டணி நிலையில் உறுதியாக உள்ளதாக பா.ஜனதா வட்டாரங்களை மேற்கோள்காட்டி செய்திகள் தெரிவிக்கின்றன.

இதனிடையே ஜார்க்கண்ட் மாநில முதலமைச்சராக அர்ஜூன் முண்டா நாளை பதவியேற்க உள்ள நிலையில், அந்நிகழ்ச்சியில் அத்வானி கலந்துகொள்ள மாட்டார் என்று கூறப்படுகிறது.

முன்னதாக கடந்த 3 மாதங்களுக்கு முன்னர் நாடாளுமன்றத்தில், மத்திய அரசுக்கு எதிராக பா.ஜனதா மற்றும் இடதுசாரிகள் கொண்டுவந்த வெட்டுத் தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பில் ஜேஎம்எம் தலைவர் சிபு சோரன் கட்சிமாறி வாக்களித்ததால், ஜார்க்கண்டில் அவரது கட்சித் தலைமையிலான கூட்டணி அரசுக்கு அளித்து வந்த ஆதரவை பா.ஜனதா திரும்ப பெற்றதால், ஆட்சி கவிழ்ந்தது.

அதன் பின்னர் ஆட்சியமைப்பதற்கான பெரும்பான்மை பலத்தை திரட்ட எந்த கட்சிக்கும் முடியாமல் போனதால், சட்டசபை முடக்கப்பட்டு, அங்கு குடியரசுத் தலைவர் ஆட்சி அமலில் இருந்தது.

இந்நிலையில் ஜேஎம்எம் மற்றும் ஏஜேஎஸ்யு ஆகிய கட்சிகளின் ஆதரவுடன் மீண்டும் ஆட்சியமைப்பது என்று பா.ஜனதா முடிவு செய்தது.

இதனையடுத்து உள்ள பா.ஜனதா கட்சியின் சட்டமன்ற தலைவராக, கடந்த 7 ஆம் தேதியன்று, முன்னாள் முதலமைச்சர் அர்ஜூன் முண்டா தேர்ந்தெடுக்கப்பட்டார்.

அதனைத் தொடர்ந்து பா.ஜனதா - ஜேஎம்எம் கூட்டணித் தலைவர்கள், ஆளுநரை சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோரியதோடு, ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் பட்டியலையும் அளித்திருந்தனர்.

இந்நிலையில் ஆட்சியமைக்க வருமாறு அர்ஜூன் முண்டாவுக்கு ஆளுநர் பரூக் நேற்று அழைப்பு விடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்து கந்தசாமி: சான்ஸ் கிடைச்சுதுன்னு ஆட்சியை அமைப்பீங்களா, காங்கிரஸோட புத்திசாலித்தனம் எல்லாம் உங்களுக்கு வராது போலிருக்கே.

மறக்காம வோட்டுப் போடுங்க

வியாழன், 9 செப்டம்பர், 2010

காயப்படுத்தாத கிசுகிசு : குஷ்பு பாராட்டிய இதழ்!

விடுப்பு.காம் செய்தி: சவுத் ஸ்கோப் என்ற ஆங்கில சினிமா இதழ், ரசிகர்கள் பங்கேற்கும் ஒரு விருது நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருக்கிறது. தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய நான்கு மொழிகளிலும் வெளிவரும் பத்திரிகை

இது என்பதால், இந்த நான்கு மொழி படங்களுக்கும் போட்டி வைத்து தேர்ந்தெடுப்பார்களாம். வெற்றி பெறுகிற படங்களுக்கு அவார்டு வழங்கப்படுகிறது.

கடந்த ஆண்டு வெளிவந்த நாடோடிகள், பசங்க, நான் கடவுள், காஞ்சிவரம் ஆகிய நான்கு படங்களும் போட்டியில் இருக்கின்றன. சிறந்த படங்களை மட்டுமல்ல, சிறந்த இயக்குனர், சிறந்த நடிகர், சிறந்த நடிகை என்று சினிமாவின் அத்தனை பிரிவினருக்கும் போட்டி வைத்து இந்த அவார்டு வழங்கப் போகிறார்களாம்.

இந்த போட்டி அறிவிப்பை வெளியிட வந்திருந்தார் குஷ்பு. அவருடன் சமந்தா, பியா போன்ற ஜிலு ஜிலு நட்சத்திரங்களும் வந்திருந்தார்கள். முதலில் சவுத் ஸ்கோப் இதழ் பற்றி பேசிய குஷ்பு, ரொம்ப இன்ட்ரஸ்ட்டிங்காகவும் யாரையும் காயப்படுத்தாமலும் இந்த இதழ்ல கிசுகிசு வருது. எப்பவுமே கிசுகிசு படிக்கறதுன்னா ரசிகர்களுக்கு ரொம்ப ஜாலியா இருக்கும். அதை எல்லை மீறாம செஞ்சுட்டு வர்றாங்க இவங்க. இந்த போட்டியில் கலந்துக்கிற எல்லாருமே முக்கியமானவர்கள். எப்படிதான் ஒருவரை மட்டும் தேர்ந்தெடுக்க முடியுமோ? அல்லது ஒரு படத்தை மட்டும் தேர்ந்தெடுக்க முடியுமோ, குழப்பம்தான் என்றார்.

கருத்து கந்தசாமி: அடுத்தவங்களை பத்தின கிசுகிசுன்னா நம்மள காயப்படுத்தாதுதான்.

குஷ்புவுக்கு: மேடம், உங்க மேல இருந்த வழக்கு விசாரணையெல்லாம் முடிஞ்சிருச்சா?

மறக்காம வோட்டுப் போடுங்க

புதன், 8 செப்டம்பர், 2010

தமிழக அரசு பொய் சொல்கிறது

பிபிசி தமிழ் செய்தி: தமிழக காவல் துறை இயக்குனர் பதவிக்கு, லத்திகா சரண் நியமிக்கப்பட்டது தொடர்பான வழக்கில் தமிழக அரசு சென்னை உயர்நீதிமன்றத்திடம் உண்மைகளை மறைக்கிறது என்று மூத்த ஐபிஎஸ் அதிகாரி கே.விஜயகுமார் கூறியுள்ளார்.

தீயணைப்புத் துறை இயக்குனரான டி.ஜி.பி. ஆர்.நடராஜ் என்பவரும், லத்திகா சரண் தனக்கும் இன்னும் வேறு சிலருக்கும் பணியில் இளையவர், எனவே அவர் சட்டம் ஒழுங்குப் பிரிவின் தலைவராக நியமிக்கப்பட்டிருக்க்க்கூடாது என வாதிட்டு தொடர்ந்த வழக்கினை மத்திய நிர்வாக தீர்ப்பாயம் தள்ளுபடி செய்த நிலையில், அவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்திருக்கிறார்.

தமிழக அரசு தனது பதில் மனுவில், "மூத்த ஐ.பி.எஸ். அதிகாரிகள் என்.பாலச்சந்திரன், லத்திகா சரண், நடராஜ், விஜயகுமார் ஆகியோரது பெயர்கள் பரிசீலிக்கப்பட்டன. விஜயகுமார் மத்திய அரசுப் பணிக்குப் போய் விட்டதால், மற்ற 3 பேரில் திறமை மற்றும் தகுதி அடிப்படையில் லத்திகா சரண் தேர்வு செய்யப்பட்டார். சீனியாரிட்டி அடிப்படையில்தான் டிஜிபி தேர்வு இருக்கவேண்டும் என்பது விதியில்லை" எனக் கூறியிருக்கிறது.

விஜயக்குமார் தனது பதில் மனுவில், மாநில பணிக்கு வர விரும்பவில்லை என்று தான் ஒருபோதும் சொன்னதில்லை என்றும் மத்திய அரசு பணிக்குச் சென்றிருந்தாலும், தன்னையும் சட்டம் ஒழுங்குப் பிரிவுத்தலைவர் நியமனத்திற்கு டி.ஜி.பி. பணிக்கு பரிசீலனை செய்திருக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார்.

விஜயகுமார் தற்போது ஹைதராபாத்தில் உள்ள சர்தார் வல்லபாய் படேல் தேசிய போலீஸ் அகாடமியின் தலைவராகப் பணியாற்றிவருகிறார்.

"அப்பதவி கூடுதல் டைரக்டர் ஜெனரல் நிலையில் இருப்பவர்களுக்குரித்தான் பதவியாயிருந்தும் லிஜயகுமார் அவர் ஏற்றுக்கொண்டிருக்கிறார். எனவே தமிழ்நாட்டில் அவருக்குப் பணியாற்ற விருப்பமில்லை என்ற ரீதியில் தமிழக உள்துறை செயலர் தனது மனுவில் குறிப்பிட்டிருக்கிறார். அது தவறானது. அவதூறானது" என விஜயகுமார் மேலும் கூறியிருக்கிறார்.

கருத்து கந்தசாமி: இதுக்கு நம்ம தானைத் தலைவர் கருணாநிதி விடுத்த பதில் அறிக்கை "ஜெயலலிதா அம்மையார் மாற்றி சொன்னதில்லையா, நண்பர் பாண்டியன் மாற்றி சொன்னதில்லையா, அத்வானி அவர்கள் மாற்றி சொன்னதில்லையா, அமெரிக்க அதிபர் மாற்றி சொன்னதில்லையா"

சிரிச்சுட்டு மாத்திக் குத்தாம சரியா வோட்டு குத்திட்டு போங்க

மறக்காம வோட்டுப் போடுங்க