வெள்ளி, 13 ஆகஸ்ட், 2010

தமிழக மீனவர்கள் தாக்கப்படும் விவகாரம்

இந்நேரம் செய்தி: கடலில் சர்வதேச எல்லை தாண்டி மீன் பிடிக்க தமிழக மீனவர்கள் செல்லக் கூடாது. அப்படிச் சென்றால் இலங்கை கடற்படை தாக்குதல் நடத்தத்தான் செய்யும். இந்த தாக்குதல்களிலிருந்து தமிழக மீனவர்களை இந்தியாவால் காப்பாற்ற முடியாது. கச்சத்தீவை திரும்பப் பெறுவதற்கு இடமில்லை என்று வெளியுறவு அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா கூறியுள்ளார்.

கருத்து கந்தசாமி:
பாகிஸ்தான் கடற்பகுதியில மீன் பிடிக்க போய் அங்கே சிறைப்பட்டு கிடக்கும் வட மாநிலத்தான் விவகாரத்தில் இப்படி சொல்வாரா தமிழன்னா உங்களுக்கெல்லாம் இளிச்சவாயனா போயிட்டான். காங்ரஸை ஓட்டு போட்டு ஜெயிக்க வெச்ச தமிழா உனக்கு இதுவும் வேண்டும், இன்னமும் வேண்டும்.


4தமிழ்மீடியா செய்தி: கணிமொழி உரை - இலங்கை மந்திரியாக இருந்தாலும் சரி, அந்த நாட்டின் செய்தி தொடர்பாளராக இருந்தாலும் சரி, மீனவர்கள் தாக்கப்படுவது பற்றி குற்றம்சாட்டினால் அது இந்திய இலங்கைக்கு எதிரான நல்லெண்ணத்தை குலைக்கும் சதி என்கிறார்கள். இதே கதையைத்தான் மீண்டும்,மீண்டும் சொல்கிறார்கள். நாம் தெரிந்து கொள்ள விரும்புவது என்னவென்றால், நமது மீனவர்களை இலங்கை கடற்படையினர் தாக்கவில்லையென்றால், யார் அதைச்செய்கிறார்கள்?

நம் மீனவர்கள் அவர்களுக்குள்ளாகவே சுட்டுக் கொள்கிறார்களா? நம்மிடம் செயற்கை கோள் இருக்கிறது. அதை வைத்து தமிழக மீனவர்களை சுட்டுக் கொல்பவர்களை கண்டுபிடிக்க வேண்டும்" என அவர் தனது உரையில் குறிப்பிட்டதாக அறியப்படுகிறது.

கருத்து கந்தசாமி:
ஆகா என்ன ஒரு அரிய கண்டுபிடிப்பு. இலங்கை அதிகாரிகள் எல்லாம் சத்திய சந்தர்கள். செயற்கைக் கோள் வைத்து கண்டுப்பிடிக்க வேண்டியது தான்.


தினமணி செய்தி: தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் தாக்குவது தொடர்பாக மாநிலங்களவையில் புதன்கிழமை திமுக-அதிமுக இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

கருத்து கந்தசாமி:
அடப்பாவிங்களா அவனவன் அங்கே செத்துக்கிட்டு இருக்கிறான். இதுக்குமா சண்டை போடுவீங்க. உங்களையெல்லாம் ஓட்டுப் போட்டு நாடாளுமன்றத்துக்கு அனுப்புனாரே திருவாளர் இளிச்சவாயன் அவருக்கு தேவைதான்.


வெப்துனியா செய்தி: சிறிலங்க கடற்படையினரால் தொடர்ந்து தாக்கப்படும் தமிழக மீனவர்களை பாதுகாக்க முடியாது என்று பகிரங்கமாகக் கூறியுள்ள அயலுறவு அமைச்சர் எஸ்.எம். கிருஷ்ணாவை அமைச்சர் பதவியில் இருந்து நீக்குமாறு பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் பழ.நெடுமாறன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

கருத்து கந்தசாமி:
அய்யா நீங்க ஒருத்தராவது குரல் கொடுத்தீங்களே. தமிழினத்தலைவெரெல்லாம் தமிழருக்காக நிறைய உழைச்சுட்டு தூங்கிட்டிருக்காங்க போலிருக்குது.

மறக்காம வோட்டுப் போடுங்க

2 கருத்துகள்:

ttpian சொன்னது…

shame,we have been living in a slave nation

Unknown சொன்னது…

//shame,we have been living in a slave nation//
தங்கள் வருகைக்கு நன்றி பதி அவர்களே. நீங்கள் சொல்லுவது 100 சதவீதம் உண்மை

கருத்துரையிடுக