திங்கள், 23 ஆகஸ்ட், 2010

எம்.பி.க்கள் சம்பளம் மேலும் 10 ஆயிரம் உயரும்

தினகரன் செய்தி: எம்.பி.க்களுக்கு மேலும் ரூ.10 ஆயிரம் சம்பள உயர்வு அறிவிக்கப்படும் எனத் தெரிகிறது.ஆறாவது ஊதியக் குழு பரிந்துரை அமல்படுத்தியபின் கேபினட் செயலரின் சம்பளம் ரூ.80 ஆயிரமாக உயர்ந்தது. எனவே, அவர்களை விட அதிகமாக எம்.பி.க்களுக்கு சம்பளம் வழங்க வேண்டும் என கோரிக்கை விடப்பட்டது. இதையடுத்து எம்.பி.க்கள் சம்பளம் கடந்த வாரம் 3 மடங்கு உயரத்தப்பட்டது. அடிப்படை சம்பளம் ரூ.50 ஆயிரமாகவும், அலுவலக செலவு மற்றும் தொகுதிக்கான படி ரூ.40 ஆயிரமாகவும், நாள் படி ரூ.2 ஆயிரமாகவும் உயர்த்தப்பட்டது. சம்பளம் மற்றும் படிகளைச் சேர்த்து ஒரு எம்.பி. ரூ.1.40 லட்சம் பெறுவார்.

இந்த சம்பள உயர்வு போதாது என ராஜ்ட்ரிய ஜனதா தளம், சமாஜ்வாடி மற்றும் பகுஜன் சமாஜ் உள்ளிட்ட எதிர்கட்சி உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர். பார்லிமென்ட் நடக்காத சமயத்தில், 10 கூட்டங்களில் எம்.பி.க்கள் கலந்து கொள்கின்றனர். இவர்களுக்கு நாள் ஒன்றுக்கு ரூ.2 ஆயிரம் படி வழங்க வேண்டும் என லாலு பிரசாத் யாதவ், முலாயம் சில் யாதவ் ஆகியோர் கூறினர். சம்பளத்தை உயர்த்துவது பற்றி பரிசீலிக்கப்படும் என அரசு அறிவித்தது.இது குறித்து இன்று அமைச்சரவை ஆலோசனை நடத்தி, எம்.பி.க்களின் சம்பளத்தை மேலும் ரூ.10 ஆயிரம் உயர்த்தும் என கூறப்படுகிறது.

கருத்து கந்தசாமி: ஆமாமா, நம்மளுக்காக எவ்வளவு கஷ்டப்படுறாங்க. பாரளுமன்ற நடவடிக்கைகளைப் பார்த்தாலே தெரியுதே. குழாயடிச் சண்டை பரவாயில்லைன்னு ஆக்கிட்டு இருக்காங்க, வாழ்க இந்திய ஜனநாயகம்.

மறக்காம வோட்டுப் போடுங்க

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக