ஞாயிறு, 8 ஆகஸ்ட், 2010

எந்த கட்சியுடனும் கூட்டணி, எதுவும் நடக்கலாம் ராமதாஸ் பேட்டி

தினகரன் செய்தி: எந்த கூட்டணியில் பாமக உள்ளது?
அதிமுக கூட்டணியில் இருந்து நாங்களாக வெளியேறினோம். பென்னாகரம் தொகுதி இடைத்தேர்தலில் எங்களை ஆதரிப்பதாகவும், ராஜ்யசபா சீட் தருவதாகவும் அதிமுக கூறியது. இதை நாங்கள் ஏற்கவில்லை. திமுக கூட்டணியில் பாமகவை சேர்ப்பது தொடர்பாக திமுக நிர்வாகக்குழுவில் தீர்மானம் நிறைவே ற்றப்பட்டது. எங்கள் கட்சியின் ஐவர் குழு கருணாநிதியை சந்தித்தது. மீண்டும் பேசுவதாக முதல்வர் கூறியுள்ளார். மீண்டும் பேச்சுவார்த்தைக்கு அழைத்தால் ஐவர் குழுவை அனுப்பி பேசுவோம். தற்போது நாங்கள் எந்த கூட்டணியிலும் இல்லை.பாமக தனித்தே தேர்தலை சந்திக்குமா? பாமக தலைமையில் சமூகநீதி கூட்டணி அமைக்க வாய்ப்பு உள்ளது. பாமக தனித்துப் போட்டியிட்டாலும் 20 தொகுதிகளுக்கும் மேல் வெற்றி பெறும்.

தேமுதிக இருக்கும் கூட்டணியில் பாமக இருக்காது என கூறப்படுகிறதே?
அப்படி எல்லாம் கூற முடியாது. அரசியலில் எதுவும் நடக்கலாம். நிரந்தர நண்பர்களும் இல்லை, நிரந்தர எதிரிகளும் இல்லை.

காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி சேருவீர்களா?
1967ல் தமிழகத்தில் ஆட்சியை இழந்த காங்கிரஸ் தொடர்ந்து 42 ஆண்டுகளாகியும் ஆட்சிக்கு வரமுடியவில்லை. இதனால், காங்கிரஸ் தலைமையிலும் தனியாக கூட்டணி அமையலாம். அதில் பாமகவும் இடம் பெறலாம்.

அதிமுக முகாமிலிருந்து அழைப்பு வந்தால்?
அங்கிருந்தும் அழைப்பு வருகிறது. அதையெல்லாம் சொல்ல முடியுமா? அரசியலில் எதுவும் நடைபெறலாம்.

கருத்து கந்தசாமி: அன்புமணி ராமதாஸ் கேபினெட் மந்திரியாக அரசியலில் எதுவும் செய்யலாம். அதையெல்லாம் முழுதாக சொல்ல முடியுமா?

மறக்காம வோட்டுப் போடுங்க

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக